உள்ளடக்கத்துக்குச் செல்

பேட் ஜீனியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Bad Genius
இயக்கம்Nattawut Poonpiriya
தயாரிப்பு
கதை
  • Nattawut Poonpiriya
  • Tanida Hantaweewatana
  • Vasudhorn Piyaromna
இசைHualampong Riddim
நடிப்பு
ஒளிப்பதிவுPhaklao Jiraungkoonkun
படத்தொகுப்புChonlasit Upanigkit
கலையகம்Jor Kwang Films
விநியோகம்GDH 559
வெளியீடு3 மே 2017 (2017-05-03)(Thailand)
ஓட்டம்130 minutes
நாடுThailand
மொழிThai
மொத்த வருவாய்$42.35 million (as of 22 October 2017)[1]

பேட் ஜீனியஸ்(Bad Genius) என்பது 2017 ஆம் ஆண்டில் வெளியான தாய்லாந்துத் திரைப்படம் ஆகும். கொள்ளை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரபரப்பூட்டும் வகையினைச் (திரில்லர்) சார்ந்த திரைப்படம் ஆகும். இதனை ஜோர் குவாங் திரைப்பட நிறுவனம் தயாரித்தது. மேலும் ஜி டி எச் 559 நிறுவனம் வெளியிட்டது. நட்டாவுட் பூன்பிரியா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சட்டிமோன் சுவாங் சோரோசியாகன் நடித்திருந்தார்.

கதை சுருக்கம்

[தொகு]

லின், ஒரு மேல் நிலை பள்ளி மாணவி தேர்வுகள் நடைபெறும்போது வினாத்தாளில் இருக்கும் கேள்விகளுக்கான பதில்களை சக மாணவர்களிடம் கையசைவுகள் மூலமாகவும் பியானோ இசைக்கு செய்யும் கையசைவுகளில் கொடுக்கும் குறிப்புகள் மூலமாகவும் கூட சொல்லி உதவுகிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் பள்ளியில் நிர்வாகத்தில் சாதாரண மாணவராக இருக்கும் லின்னிடம் தனியார் பள்ளியின் நிர்வாகம் மேம்பாட்டு நிதிக்காக அதிக உதவித்தொகையை கேட்டு கட்டாயமாக வசூல் செய்து கேட்கும்போது இந்த தேர்வுகளில் சொல்லிக்கொடுப்பதன் மூலமாக கணிசமான தொகையை மாணவர்களிடம் இருந்து பெறுவதன் மூலமாக சம்பாதிக்கிறார். சக மாணவர் பேன்க் என்பவரின் மூலமாக லின் செய்யும் இந்த முயற்சிகள் வெளிவரும்போது பள்ளியின் நிர்வாகத்தால் கண்டிக்கப்படுகிறார்

பல திருப்பங்களுக்கு பிறகு ஒரு கட்டத்தில் வெவ்வேறு நாடுகளில் நடக்கும் எஸ் டி ஐ சி தேர்வுகளில் விதிமுறைகளை மீறி கேள்விக்கான பதில்களை எழுதும்போது நினைவில் வைத்துக்கொண்டு மெசேஜ் மூலமாக ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி பகுதியில் இருந்து சொந்த நாட்டில் உள்ள எஸ் டி ஐ சி எழுதுபவர்களுக்கு சில மணி நேரங்கள் முன்னதாக அனுப்புவதன் மூலம் உதவி செய்கிறார்‌. இதனால் பெரிய தொகையை சம்பாதிக்கிறார். ஆனால் பேன்க் இன்னும் இதே போல நிறைய பணம் சம்பாதிக்க லின் ஐ கட்டாயப்படுத்த முயற்சிக்கும்போது லின் அவருடைய அப்பாவிடம் உண்மையை சொல்கிறார் , மேலும் நேர்மையான முறையில் எஸ் டி ஐ சி தேர்வு நிர்வாகத்தினரிடம் அவருடைய தவறை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கிறார் .

  1. comScore (22 October 2017). "comScore Announces Official Worldwide Box Office Results for Weekend of October 22, 2017" (in en). PR Newswire இம் மூலத்தில் இருந்து 22 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171022220908/https://www.prnewswire.com/news-releases/comscore-announces-official-worldwide-box-office-results-for-weekend-of-october-22-2017-300540932.html. 

https://en.wikipedia.org/wiki/Bad_Genius

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்_ஜீனியஸ்&oldid=3777691" இலிருந்து மீள்விக்கப்பட்டது