பேட்டை நித்தியானந்த சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு நித்தியானந்த சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:பேட்டை, திருநெல்வேலி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:நித்தியானந்த சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பேட்டை நித்தியானந்த சுவாமி கோயில் என்பது நித்தியானந்த சுவாமி ஜீவசமாதி சித்தர் பீடம் ஆகும். இது தமிழ்நாட்டில் திருநெல்வேலி, புதுப்பேட்டையில் பாலவண்ண நாதன் கோவிலுக்கு ஈசான்யமும், பிச்சை மூப்பன் வகையறா தோட்டத்துக்கும் தெற்கு, தென்வடல் வாய்க்காலுக்கும் கிழக்கு, குளத்திற்கு வடக்கு மேற்கில் அமைந்துள்ள ஒரு வழிபாட்டுத் தலம் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இங்கு நித்தியானந்த சுவாமி 1859 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவருக்கு சீடர்கள் மாரியம்மாள் அம்பலத்தாடி பொன்னம்பல சுவாமி ஆகியோரின் முயற்சியால் குருநாதருக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர் தங்கள் குருவான நித்தியானந்த சுவாமிகளுக்கு சித்தர் கோவில் அமைந்த இடத்தை அந்த இடத்தின் உரிமையாளர்கள் தானமாக 1922 ஆம் ஆண்டு கோவில் பெயரில் பத்திரம் பதிவு செய்து தரப்பட்டது அன்று முதல் சீடர்கள் ஒன்று சேர்ந்து நித்திய பூசை, பௌர்ணமி பூஜை, குருபூஜை, அன்னதானம் ஆகியவற்றை செய்து வந்தார். பொன்னம்பலம் சுவாமி தனக்கு வாரிசாக தன் சீடரான நாகலிங்கத்தேவர் என்பவரை நியமித்தார். பொன்னம்பல சுவாமி 1932ம் ஆண்டு மார்கழி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தம் குருவான நித்தியானந்த சுவாமிகளின் ஜீவசமாதி அருகில் ஜீவசமாதி அடைந்தார். அதன்பிறகு அவரின் சீடரான நாகலிங்க தேவர் தன் குரு ஜீவசமாதி அடைந்த இடத்தில் 1933 ஆம் ஆண்டு பொன்னம்பல சுவாமிகளுக்கு சித்தர் பீடம் அமைத்து நித்திய பூசை, பௌர்ணமி பூஜை, குருபூஜை, அன்னதானம் ஆகியவற்றை செய்து வந்தார்.

நிர்வாகம்[தொகு]

நித்தியானந்த பொன்னம்பல சுவாமிகள் சித்தர் பீடமானது சிறீ பொன்னம்பல நித்தியானந்த சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அறக்கட்டளையின் பரம்பரை அறங்காவலரான நாகலிங்க தேவர் நிர்வாகம் செய்து வந்தார். அவருக்கு பின் அவரது வாரிசான அமராவதி அம்மாள் நிர்வாகம் செய்து வந்தார். அவருக்கு பின் அவரது வாரிசான பொன்னம்பலம் தேவர் நிர்வாகம் செய்து வந்தார். அவருக்கு பின் அவரது வாரிசான திருமதி பொன். ரத்தினா என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார்.[2]

பூசைகள்[தொகு]

நித்தியானந்தா, பொன்னம்பல சுவாமிகள் சித்தர் பீடத்தில் நித்திய பூஜை நடைபெறுகிறது. மேலும் பௌர்ணமி பூஜை மற்றும் குரு பூசைகள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)