பேட்டி ஜோ வாட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேட்டி ஜோ வாட்சன்
பணிமானிடவியலர்

பேட்டி ஜோ வாட்சன் (Patty Jo Watson) ஓர் அமெரிக்கப் பெண் தொல்லியலாளர். முன்கொலம்பியர் அமெரிக்காவின் இயற்குடிகளின் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். குறிப்பாக, கெண்டுகி வட்டார ம்ம்மத் குகை ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர்.[1] இவர் புனித உலூயிசில் உள்ள வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தகைமைப் பேராசிரியரானார்.[2] இவர் 2004இல் ஓய்வு பெறும்வரை, புனித உலூயிசில் உள்ள வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை மல்லின்கிரோடிட் தகைமைப் பேராசிரியராக இருந்தார்.[3]

கல்வி[தொகு]

வாட்சன் 1959இல் தன் முனைவர் பட்ட்த்தை சிகாகோ பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[2] சிகாகோ ப்ல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இவர் இராபெட் பிர்எயிடுவுட் அவர்களிடம் பயின்றார்.[2][3]

வாழ்க்கைப்பணி[தொகு]

வாட்சன் தொடக்கத்தில் [[பண்டைய அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளர்.[1][2] இவரது கணவரான ரிச்சர்டு ஏ. வாட்சன் இவரை அன்மைக் கிழக்கு நாடுகளுக்கு மாற்றாக வட அமெரிக்கத் தொல்லியலில் பணிபுரிய இணக்குவித்துள்ளார்.[3]

வாட்சன் நிகழ்வுசார் தொல்லியல் முறையை மின்வைத்தவர். இந்த அணுகுமுறைக்குப் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளார்.[1][4]

மேலும் இவர் தொல்லியலுக்கு இனவரைவியலைப் பயன்படுத்தி விளக்கம் அளிப்ப்பவர்.[5] இவர் 1960களில் ம்ம்மத் குகையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரைகுரை தொல்லியல் தரவுகளை நிரப்ப,தொல்வாழ்க்கைமுறை பொழுதுபோக்குகளை நிகழ்த்திப் பார்க்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். " இவர் தொல்லியற் ப்டிவுகளில் இருந்து தாவர கரிம மாக்க எச்சங்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளுக்குப் பெரும்பங்களித்துள்ளார்.. மேலும் முன்கொலம்பிய வட அமெரிக்காவில் முன்கோதுமை வேளாண்மையின் தனித்த தோற்றத்தைக் கண்டறிந்தார்."[5] ம்ம்மத் குகையில் வாழ்ந்த அமெரிக்க இயற்குடிகளின் உணவைப் பற்றிய அவரது ஆய்வு, அங்கு வாழ்ந்தவரின் சிறூடல் ஆய்வையும் உள்ளடக்கியதால், பல்துறைபங்களிப்புடையதாகும்.[3]

தகைமைகள்[தொகு]

வாட்சன் 1988இல்தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[3] Discoverஅதன் 2002ஆம் ஆண்டு நவம்பர்மாதப் பதிப்பில் 50 அரிய பெண் அறிவியலாளர் பட்டியலில் வாட்சனை சேர்த்து கட்டுரை வெளியிட்டது."[6] அக்கட்டுரை வாட்சனை வட அமெரிக்கத் தொல்வேளான்மைக் கட்டமைப்புக்கான தரவுகட்காகவும் தொல்லியலில் அறிவியல் முறைகளை அறிமுகப் படுத்தியதற்காகவும் பாராட்டியது."[6] வாட்சன் பொற்பதக்க விருதை தொல்லியல் பங்களிப்புகட்காக 1999இல் அமெரிக்கத் தொல்லியல் நிறுவனத்தில் இருந்து பெற்றார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Lindsey Alston:"Patty Jo Watson". EMuseum. Minnesota State University, Mankato (2007). பார்த்த நாள் 2009-08-19.
  2. 2.0 2.1 2.2 2.3 "Patty Jo Watson Faculty Home Page". Washington University in St. Louis. பார்த்த நாள் 2009-08-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "About Alumni: C. Vitae: Cave Crawler". University of Chicago Magazine 95 (5). June 2003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-9508. http://magazine.uchicago.edu/0306/alumni/vitae.shtml. பார்த்த நாள்: 2009-08-26. 
  4. Herst, K. Kris. "Patty Jo Watson". About.com. பார்த்த நாள் 2009-08-19.
  5. 5.0 5.1 "Academy Fellows: Patty Jo Watson, Ph.D.". Academy of Science-St. Louis. பார்த்த நாள் 2009-08-19.
  6. 6.0 6.1 Svitil, Kathy A. (November 1, 2002). "The 50 Most Important Women in Science". Discover. பன்னாட்டுத் தர தொடர் எண்:0274-7529. http://discovermagazine.com/2002/nov/feat50. பார்த்த நாள்: 2009-08-26. 
  7. http://www.archaeological.org/webinfo.php?page=10100. Retrieved 2010-2-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்டி_ஜோ_வாட்சன்&oldid=2894319" இருந்து மீள்விக்கப்பட்டது