பேட்டர்சன் ஏரி (பிரிட்டிசு கொலம்பியா)
பேட்டர்சன் ஏரி Patterson Lake | |
---|---|
ஊக்கு ஏரி | |
மேற்கிலிருந்து பேட்டர்சன் ஏரி | |
அமைவிடம் | சில்கோட்டின் மாவட்டம்,பிரிட்டிசு கொலம்பியா |
ஆள்கூறுகள் | 51°52′23″N 124°38′39″W / 51.87306°N 124.64417°W |
முதன்மை வரத்து | கல்லறை நீரூற்றுகள் |
வடிநில நாடுகள் | கனடா |
அதிகபட்ச நீளம் | 5 km (3.1 mi) |
அதிகபட்ச அகலம் | 0.8 km (0.50 mi) |
மேற்பரப்பளவு | 2.16 km2 (0.83 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 7.3 m (24 அடி) |
உவர்ப்புத் தன்மை | 9.5 pH |
கரை நீளம்1 | 12.9 km (8.0 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 925 m (3,035 அடி) |
Islands | பெயரிடப்படாத 2 |
குடியேற்றங்கள் | இல்லை |
மேற்கோள்கள் | [1] |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
பேட்டர்சன் ஏரி (Patterson Lake) கனடாவின் தென்மேற்கு மாகாணமான பிரிட்டிசு கொலம்பியாவில் மேற்கு சில்கோட்டின் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தட்லா ஏரிக்கு தெற்கே அமைந்துள்ள இந்த ஆழமற்ற ஏரியை ஊக்கு ஏரி (Hook Lake) என்ற பெயராலும் அழைக்கின்றார்கள்.[2]
சில்கோட்டின் பீடபூமிக்கு மேற்கு விளிம்பில் உள்ள இந்த ஏரிக்கு சாலை வசதிகள் ஏதுமில்லை மேலும் ஏரியானது கொக்கி வடிவில் அமைந்துள்ளது. பருவகாலத்தில் மட்டும் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நீர் வடக்கே உள்ள தட்லா ஏரியின் சிற்றோடை வழியாகப் பாய்கிறது. 2013 ஆம் ஆண்டு ஏரி மற்றும் இதனை சுற்றியுள்ள நிலம் பேட்டர்சன் மாகாண பூங்காவாக மாற்றப்பட்டது.[3] வயல்கள் மற்றும் இயற்கையான நிலப்பரப்புகளின் ஊடாகச் செல்கிற சாலைகள் அல்லாத வயல்கள் ஊடாகச் செல்லும் பனிச்சறுக்கு பாதைகளின் இணைப்புகளுடன் குளிர்காலத்தில் இந்த பூங்கா பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fish Inventories Data Queries". British Columbia Ministry of the Environment. பார்க்கப்பட்ட நாள் August 9, 2022.
- ↑ BC Names/GeoBC entry "Patterson Lake"
- ↑ "Patterson Lake Prov Park". British Columbia Ministry of the Environment. பார்க்கப்பட்ட நாள் August 9, 2022.