பேச்சு:64 இருமம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கணினி வகையினை கண்டறிதல் - 64 அல்லது 32 ?[தொகு]

நமது கணினி எத்தகைய இரும வகை என்பதனைக் கண்டறிய பல வழிகள் உள்ளன. கணினியின் வன்பொருள், அதன் இயக்குதளம் என இரண்டையும் காண வேண்டும். 64 இருமக் கணினிகளில், 32 இரும இயக்குதளத்தை நிறுவ இயலும். சிலவற்றில் மேலதிகப் பொதிகளும் தேவை. ஆனால், 32 இரும கணினி வன்பொருளில், 64 இரும இயக்குதள மென்பொருளை நிறுவ இயலாது. எனவே, அவற்றினைக் குறித்த சில வழிமுறைகள் வருமாறு;-

  1. லினக்சு முனையத்தில் getconf LONG_BIT என்பதை இட்டால், அது கணினியின் வன்பொருளை ஆராய்ந்து, உரிய எண்ணைக் காட்டும்,
  2. உபுண்டு முனையத்தில் lscpuஎன இட்டால். பல குறிப்புகளைப் பெறலாம். முதல் வரியிலேயே Architecture: x86_64 காணலாம். அது நிறுவப்பட்டுள்ள இயக்குதள வகையினைக் குறிக்கும். இரண்டாம் வரியில் CPU op-mode(s): 32-bit, 64-bit என்பது இருந்தால், அது 64 வகை வன்பொருளைக் குறிக்கும். அவ்வாறு இல்லாமல் 32 என்பது மட்டும் இருந்தால், அதன் வன்பொருள், 64 அல்ல என்பதைக் குறிக்கிறது.
  3. உபுண்டுவின் முனையத்தில் uname என்று இட்டால் அது லினக்சு என்று காட்டும். uname -m என இட்டால், நிறுவப் பட்டுள்ள, இயக்குதள மென்பொருளின் இருமத்தைக் காட்டும். அதுபோலவே arch என இட்டாலும், இயக்குதள இருமத்தைக் காட்டும். இதன் வரலாற்றையும் அறிக--உழவன் (உரை) 03:57, 11 ஆகத்து 2018 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:64_இருமம்&oldid=2563848" இருந்து மீள்விக்கப்பட்டது