பேச்சு:50 சென்ட்
Untitled
[தொகு]பரிசீலனை - தமிழில் என்ன?--ரவி 23:15, 28 நவம்பர் 2007 (UTC)
செல்வா, பரிசீலனையில் இருந்தார் என்பதைத் தேர்வுக்குழுவில் இருந்தார் என்று மாற்றி இருக்கிறீர்கள். தேர்வுக்குழு = selection committee என்று பொருள்படாதா?--ரவி 00:26, 29 நவம்பர் 2007 (UTC)
இடத்தைப் பொருத்தது. கூறாய்வு, தேர்வு, பீராய்வு எனப் பல சொற்கள் உள்ளன. ""பீராய்ந்து பார்த்ததில்" என்பது பேச்சு வழக்கில் "பீராஞ்சு பார்த்ததில்" என வழங்கும். இங்கு பீர் என்பது நுட்பமாய் பல முறை நுணுகிப் பார்ப்பதைச் சுட்டும். பீர் என்பது வேறு இடங்களில் தாரை தாரையாய் ஓடுவதையும். "பீரிட்டு" என்னும் பொழுது மிகுந்த விரைசலுடன், வலுவுடனும் ஒன்று வெளியேறுவதையும் குறிக்கும். பீரங்கி என்பதும் வெடி மருந்தின் வெடிப்புந்துதலால் விக விரைவுடன், மிகவலிவுடன், குண்டு எறியும் போர்க்கருவியைக் குறிக்கும். தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவியின் வாட்டத்தைப் பீர்பூத்தல் (வெளிறிய நிறம்) என்பர். அடுக்கடுக்காய் நிலைகுலைதலையும் குறிக்கும். தாய்ப்பாலுக்குப் பீரம் என்று ஒரு பெயருண்டு (வலுவூட்டுவதாகக் கருதுவதால்; இன்று இதன் பெருமை மெள்ள அறிவியல் உலகில் உணரப்பட்டு வருகின்றது. அது நற்செய்தி). --செல்வா 00:36, 29 நவம்பர் 2007 (UTC)
ரவி, பரிசீலனையில் இருந்தார் என்றால் என்ன பொருள் (தேர்வுக் குழுவில் இருந்தார் என்பதே இங்கு பொருள்). தேர்வுப் பணியில் இருந்தார் என்றும் கூறலாம். --செல்வா 00:36, 29 நவம்பர் 2007 (UTC)
இன்று பொது வழக்கில் தேர்வுக்குழு என்பது selection committee என்ற பொருளில் அடிக்கடி வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இந்தியக் கிரிக்கெட் தேர்வுக் குழு. அதனால் தான் சுட்டிக்காட்டினேன். "பீராஞ்சு பார்த்தல்" என்பது ஏதோ வேடிக்கைக்குச் சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் :( --ரவி 00:46, 29 நவம்பர் 2007 (UTC)