பேச்சு:2025 பகல்காம் தாக்குதல்
தலைப்பைச் சேர்நாள்களாக
[தொகு]@Gowtham Sampath: வணக்கம். நாள்களாக' என்ற சொல்லை நாட்களாக என்றவாறு மாற்றியுள்ளீர்கள். இது தமிழ் இலக்கணப்படி தவறாகும். ஒரு குறில் எழுத்தைத் தொடர்ந்து ள் வந்தால் ட்டாக மாறும். முள்செடி என்பது முட்செடி என்பதாக மாறும். அதுவே ஒரு நெடில் எழுத்தைத் தொடர்ந்து ள் வந்தால் ட்டாக மாறாது. அப்படி மாற்றினால் அதன் பொருள் மாறிவிடும். குறிப்பாக கள் என முடியும் சொற்களில் கவனமாக எழுத வேண்டும். நாள்கள் என்பது சரி. நாட்கள் என்பது நாள்பட்ட கள் (தென்னங்கள், பனங்கள்) என்ற பொருளைத் தரும். இதுவே ஒரு சிலர் வணக்கங்கள் பல, நன்றிகள் பல என்றும் எழுதுவார்கள். இவ்வாறும் எழுதக்கூடாது. வணக்கம் நன்றி என்றே எழுத வேண்டும். இந்தக் காணொளியில் 9:30 நேர அளவில் பாருங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 00:39, 25 ஏப்ரல் 2025 (UTC)
- @சா அருணாசலம்: இதை காணுங்கள் அண்ணா--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 02:46, 25 ஏப்ரல் 2025 (UTC)
- @Gowtham Sampath: நீங்கள் என் பெயர் குறிப்பிட்டே அழைக்கலாம் பரவாயில்லை. நீங்கள் பகிர்ந்த இத்தளத்தில் பொருட்கள், பொருள்கள் போன்ற சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்த விளக்கமும் தவறு. பொருட்கள் என்றால் பொருட்டே இல்லாத கள் என்ற பொருள் ஆகும். பொருள்கள் என்ற சொல்லில், இரு குறிலைத் தொடர்ந்து பொது ளகர ள் வரும்போது ள் என்ற எழுத்து ட்டாக மாறாது. திங்கள் கிழமை, திங்கட்கிழமை, செய்யுள் சிறப்பு, செய்யுட்சிறப்பு, மக்கள் தொகை, தோள்பட்டை, ஆள்கள், ஆட்கள், நாள்கள், நாட்கள், விடைத்தாள்கள், படச்சுருள்கள் போன்ற சொற்களுக்குச் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை.-- சா. அருணாசலம் (உரையாடல்) 04:43, 25 ஏப்ரல் 2025 (UTC)
- @சா அருணாசலம்:நம் தமிழ் விக்சனரியில் நாட்கள் என்று தான் உள்ளது, காண்க--கௌதம் 💛 சம்பத் (பேச்சு)
- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 12:05, 25 ஏப்ரல் 2025 (UTC)
- பொது வழக்கில் உள்ள எல்லாச் சொற்களும் சரியே என்று கூறமுடியாது. இதில் உள்ள தகவல்களைக் கவனியுங்கள்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 14:22, 25 ஏப்ரல் 2025 (UTC)
- @Gowtham Sampath: நீங்கள் என் பெயர் குறிப்பிட்டே அழைக்கலாம் பரவாயில்லை. நீங்கள் பகிர்ந்த இத்தளத்தில் பொருட்கள், பொருள்கள் போன்ற சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்த விளக்கமும் தவறு. பொருட்கள் என்றால் பொருட்டே இல்லாத கள் என்ற பொருள் ஆகும். பொருள்கள் என்ற சொல்லில், இரு குறிலைத் தொடர்ந்து பொது ளகர ள் வரும்போது ள் என்ற எழுத்து ட்டாக மாறாது. திங்கள் கிழமை, திங்கட்கிழமை, செய்யுள் சிறப்பு, செய்யுட்சிறப்பு, மக்கள் தொகை, தோள்பட்டை, ஆள்கள், ஆட்கள், நாள்கள், நாட்கள், விடைத்தாள்கள், படச்சுருள்கள் போன்ற சொற்களுக்குச் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை.-- சா. அருணாசலம் (உரையாடல்) 04:43, 25 ஏப்ரல் 2025 (UTC)
- @சா அருணாசலம்: இதை காணுங்கள் அண்ணா--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 02:46, 25 ஏப்ரல் 2025 (UTC)
- //பொருட்கள் என்றால் பொருட்டே இல்லாத கள்//, //நாள்பட்ட கள்// என்பதெல்லாம் இட்டுக்கட்டிய பொருள். இப்படிப் பார்க்கப்போனால் எல்லாச் சொற்களையும் பிரித்து எழுதி வெவ்வேறு அர்த்தங்கள் கொடுக்க முடியும்.--Kanags \உரையாடுக 12:49, 25 ஏப்ரல் 2025 (UTC)
- காலப்போக்கில் தமிழ்ச் சொற்கள் திரித்து எழுதப்பட்டுள்ளது. எந்தவொரு தமிழ்ச் சொல்லைப் பிரித்து எழுதினாலும் பொருள் தரும். ஒவ்வொரு சொல்லும் இன்னொரு சொல்லோடு புணர்ந்து வருகிறது. அப்படிப் புணர்ந்து வரும் சொற்களுக்கென்று விதிகள் உள்ளன. இங்கு நான் குறிப்பிடுவது கள் விகுதி.
- 1.தனிக்குறிலைத் தொடர்ந்து ல், ள், எழுத்து வந்தால் புணர்த்தி எழுதுவோம். கல் - கற்கள், பல் - பற்கள், முள்- முற்கள், புள்-புட்கள்.
- 2.தனி நெடிலை அடுத்து ல், ள் எழுத்து வந்தால் புணர்த்தி எழுதக் கூடாது. கால் - கால்கள், நூல்- நூல்கள், தாள்- தாள்கள், ஆள்- ஆள்கள். இவ்வாறு கள் விகுதியை மட்டும் சேர்த்து எழுதுவோம்.
- 3.இருகுறிலைத் தொடர்ந்து ல், ள் எழுத்து வந்தால் புணர்த்தி எழுதக் கூடாது. விரல்-விரல்கள், குழல்- குழல்கள், திரள்- திரள்கள், குறள் - குறள்கள். இவ்வாறு கள் விகுதியை மட்டும் சேர்த்து எழுதுவோம்.
- குறட்பா என்று எழுதுகிறோமே! அங்கு கள் விகுதி வரவில்லை.-- சா. அருணாசலம் (உரையாடல்) 15:26, 25 ஏப்ரல் 2025 (UTC)
பகுப்பு
[தொகு]வணக்கம். @பயனர்:Nanjil Bala. இந்தக் கட்டுரையில் சம்மு காசுமீரில் தீவிரவாதத் தாக்குதல்கள் எனும் துல்லியமான சேய்ப் பகுப்பு ஏற்கனவே இருப்பதால், தீவிரவாத நிகழ்வுகள் எனும் தாய்ப் பகுப்பினை இடவேண்டியது இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள Terrorist incidents எனும் பகுப்பினை கவனித்தால் நீங்கள் இதனை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும்.
கூடுதலாக, இங்கு நெறிமுறைகள் எனும் தலைப்பின்கீழ், பகுப்பினை இடுதல் எனும் பகுதியைக் காணுங்கள். மிகப் பொருத்தமான சேய்ப் பகுப்பினை இட்ட பிறகு, தாய்ப் பகுப்பினை இடவேண்டியது இல்லை. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 9 மே 2025 (UTC)
தீவிரவாத நிகழ்வுகள் எனும் பகுப்பிலுள்ள கட்டுரைகளில் ஒழுங்கமைவுப் பணிகளை செய்யவேண்டியது உள்ளது. நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:29, 9 மே 2025 (UTC)
வணக்கம், @பயனர் பேச்சு:Selvasivagurunathan m புரிந்து கொண்டேன். --நாஞ்சில் பாலா உரையாட 12:24, 9 மே 2025 (UTC)
சுதந்திர இந்தியாவில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள்
[தொகு]சுதந்திர இந்தியாவில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் என்கிற வார்ப்புருவை இக்கட்டுரையில் இருந்து நீக்கக் கோருகிறேன். இதே வார்ப்புரு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தாலும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் பயன்படுத்தப்படவில்லை என்பதனையும், இந்நிகழ்வில், இந்துக்கள் அல்லாத இசுலாமியர், கிறிஸ்தவர் இருவர் இறந்திருப்பதனையும் பல்வேறு செய்திகள் உறுதிப்படுத்துகின்றன என்பதனையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 14:06, 9 மே 2025 (UTC)