பேச்சு:2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலத்தில் paramedical, paramilitary, paralympics என்று பல்வேறு இடங்களில் para என்ற சொல் வருகிறது. இதற்குத் தக்க சொல்லை இனங்கண்டு அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவது நன்று. ஆங்கிலத்தில் நேரடியாக மாற்றுத் திறனாளர்களுக்கு என்று குறிப்பிடாமல் பெயர் இருக்கும் போது, தமிழில் அதனை நேரடியாகச் சுட்டுவது உறுத்துவதாகவும் இப்போட்டியைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் உள்ளது.--இரவி (பேச்சு) 17:49, 12 செப்டம்பர் 2016 (UTC)

In the word Paralympics, para stands for parallel --AntanO 18:06, 12 செப்டம்பர் 2016 (UTC)
paramedical, paramilitary என்பவற்றில் உள்ள para துணை என்ற பொருளில் வருகின்றது; paralympics என்பதில் உள்ள para, paraplegic என்ற சொல்லின் சுருக்கம் என எண்ணியே மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என தலைப்பிடப்பட்டது. இரவி, அன்டன் கருத்துக்களை ஒட்டி துணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என தொடர்புடைய அனைத்துக் கட்டுரைகளையும் மறுபெயரிடலாம். மற்ற பயனர்களின் கருத்தறிந்து தீர்வு காணலாம்.--மணியன் (பேச்சு) 00:57, 13 செப்டம்பர் 2016 (UTC)
ஆதரவு - இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:59, 13 செப்டம்பர் 2016 (UTC)
ஆதரவு - இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்--இரவி (பேச்சு) 05:20, 13 செப்டம்பர் 2016 (UTC)