பேச்சு:2016 இந்திய இருப்புப் பாதை நிதியறிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ்வாறானவற்றை விக்கிசெய்தியில் எழுதலாமே?--Kanags \உரையாடுக 07:24, 25 பெப்ரவரி 2016 (UTC)

தாங்கள் சொல்வது சரியே. ஆனால் ஆங்கில விக்கியில் இவ்வாறான கட்டுரைகள் எழுதப்படுகின்றன. உதாரணம்: en:2015 Railway Budget of India எனும் கட்டுரை. செய்திக் கட்டுரையாக இல்லாமல் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையாக இதனை வடிவமைக்கிறேன். பின்னர் முடிவுசெய்ய கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 25 பெப்ரவரி 2016 (UTC)
விவரமாக கலைக்களஞ்சியக் கட்டுரையாக எழுதினால் சரி.--Kanags \உரையாடுக 08:00, 25 பெப்ரவரி 2016 (UTC)

தலைப்பு[தொகு]

இதுவரை தமிழ் விக்கியில் இரயில்வே, தொடருந்து நிறுவனம், இருப்புப் பாதை என்று குறிப்பிட்டுள்ளோம். இப்போது இரும்புவழி என்ற புதியச் சொல். ஆண்டுக்கொருமுறை கலைச்சொல்லை மாற்றிக் கொண்டிருப்பது தமிழுக்கு நல்லதன்று. சில நேரங்களில் படிப்பவர் நலன் கருதி எழுதப்படுகின்றதா அல்லது எழுதுபவர் விருப்பு வெறுப்புக்காக எழுதப்படுகின்றதா எனப் புரிவதில்லை. ஒரே கலைச்சொல்லை கையாள்வது நலம். --மணியன் (பேச்சு) 15:00, 25 பெப்ரவரி 2016 (UTC)

@மணியன், நேற்று இந்தக் கட்டுரையைத் தொடங்கும்போது, இந்திய இரும்புவழி நிதியறிக்கை, இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல் எனும் கட்டுரைத் தலைப்புகளைக் கண்டேன். அனைத்து இடங்களிலும் சீராக இருக்கட்டும் (uniformity) எனும் எண்ணத்தினாலேயே புதிய கட்டுரையிலும் இரும்புவழி எனத் தலைப்பிட்டேன். தமிழ் விக்கியில் நாம் எப்போதும் பயன்படுத்தும் சொல்லை இங்கும் பயன்படுத்துவதே எனது விருப்பம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:34, 26 பெப்ரவரி 2016 (UTC)
@செல்வா, உங்களுக்கு முன்பாக ஒரு பயனர் இத்தலைப்புகளை மாற்றியுள்ளார். எனக்கும் இரும்புவழியோ இருப்புப் பாதையோ பொருட்டில்லை; கலைச்சொல்லிற்கான செயன்முறையே நான் வரையறுக்க விரும்புவது. தமிழ் விக்கியின் துவக்கப் பக்கங்களில் கவனித்தால் ஒவ்வொரு கலைச்சொல்லிற்கும் பலத்த உரையாடல் நிகழ்த்தப்பெற்றிருக்கும். அவ்வாறில்லாதபோது தமிழ் விக்சனரியிலோ தமிழ் இணையக் கழகம் போன்ற அறிஞர்களால் ஏற்கப்பட்ட கலைச்சொற்களை கையாளுதல் நலம். railway என்பதற்கு விக்சனரியில் ரயில் பாதை என்றும் தொடர்வண்டிப் பாதை என்றும் கொடுத்துள்ளனர். தமிழ் இணையக் கழகத்தில் இருப்புப்பாதை என்று வழிக்கும் இருப்பூர்தித்துறை என்று துறைக்கும் கொடுத்துள்ளனர். இரும்புவழி அமைச்சர்/இரும்புவழி நிதியறிக்கை என்பதை விட இருப்பூர்தித்துறை அமைச்சர்/நிதியறிக்கை பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ் விக்கியை எவரும் தொகுக்கலாம்; தமிழ் கலைச்சொல்லாக்கம் அறிஞர் குழாமால் ஆக்கப்பட்டு சீர்தரப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் அவா. மருத்துவத்துறைக்கு பல அழகிய கலைச்சொற்கள் தமிழ் விக்சனரியில் பயனர்:புருனோ தந்துள்ளார். இவற்றைவிட்டு மீண்டும் மீண்டும் புத்தாக்கங்கள் வேண்டாமே ! --மணியன் (பேச்சு) 08:34, 26 பெப்ரவரி 2016 (UTC)