பேச்சு:2008 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Paralympics[தொகு]

தமிழ் என்ன? --Natkeeran 01:02, 7 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

Paraolympics - ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்ஸ்,  ? --குறும்பன் 01:17, 7 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]


  • நன்றி குறும்பன். ஊனமுற்றோர்களை மாற்றுத்திறனுடையேர் என்றும் கூறுவர். அது ஒரு நல்ல நோக்கில் அடையாளப்படுத்துவதாகும்.
  • "ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு மாற்றாக அண்மைக் காலமாக ஒரு புதிய சொல் வழங்கி வருகின்றது. அது என்ன சொல் தெரியுமா? “மாற்றுத் திறனுடையோர்” என்பதுதான் அந்தச் சொல். மாற்றுத் திறனுடையோர் என்ற இப்புதிய சொல்லின் பொருளைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். ஒரு புலன் செயலற்ற நிலையிலும் மற்றவர்கள் போல் வாழ, வாழ்ந்து காட்ட, வாழ்ந்து சாதித்துக் காட்ட அவர்களுக்குச் செயலற்ற புலன்களுக்கு மாற்றாகப் பிற புலன்கள் மிகுந்த திறனுடையதாயிருக்கும். இன்னும் இதனை எளிமையாக ஒரு சான்று வழியாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். பார்வைப் புலன் இழந்த ஒருவருக்கு கேட்கும் புலனும் நுகரும் புலனும், தொடு புலனும் மிகவும் கூர்மையானதாயிருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். அவர்கள் மாற்றுத் திறன் உடையோர்கள் தானே!" [1]
  • எனவே அந்த சொல்லைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். எதுவும் ஆட்சோனை என்றால் தெரிவிக்கவும். நன்றி.

--Natkeeran 01:29, 7 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

Paralympics இல் உடல் ஊனமுற்றோர் மட்டுமே பங்குபற்ற முடியும். இங்கு மாற்றுத்திறனுடையோர் என்ற சொல் பொருந்துமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. மாற்றுத்திறனுடையோர் என்பதை ஒரு பொதுச்சொல்லாகத்தான் கருத முடியும். ஊனமுற்றோர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதா? பார்வைப்புலன் அற்றவருக்கு வேறு எந்தப் புலன் கூர்மையாக உள்ளது என்று அறிந்து இங்கு போட்டி வைக்கப்படுகிறதா? இல்லையே. எனவே இங்கு இது பொருந்தாது என்பது எனது அபிப்பிராயம்.--Kanags \பேச்சு 01:45, 7 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
கனக்ஸ். ஊனமுற்றோர் என்பதற்கு positive சொல்தான் மாற்றுத்திறனுடையோர். இது தற்போது ஓரளவு புழக்கத்தில் உள்ளது. பிறரும் ஊனமுற்றோர் என்று வேண்டினால், மாற்றிவிடுங்கள். நன்றி. --Natkeeran 01:50, 7 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]