பேச்சு:20-ஆம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தின் தலைப்பு இருபதாம் நூற்றாண்டு என எழுதப்படுவதே சிறந்தது, தமிழ் மொழிநடை. எண் இடம்பெறவேண்டுமானால் 20 ஆம் நூற்றாண்டு என எழுதவேண்டும். 20ம் என்பது இருபதும் என்ற மயக்கத்தைக் கொடுக்கும். - Uksharma3 (பேச்சு) 14:17, 15 மார்ச் 2014 (UTC)

பொதுவாக 20th century என்பதைத் தமிழில் 20ம் நூற்றாண்டு என்று தானே எழுதுவார்கள்? ஆங்கில விக்கித் தலைப்புக்கேற்பவே தலைப்பிடப்பட்டது. தமிழில் இவ்வாறு சுருக்கச் சொற்களை எழுதுவதற்கு ஒரு சீரான முறை இல்லை என்றே நினைக்கிறேன். தலைப்பை மாற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.--Kanags \உரையாடுக 21:12, 15 மார்ச் 2014 (UTC)

20th என ஆங்கிலத்தில் வழக்கு உண்டு. ஆனால் தமிழ் வசன நடையில் முன்பு இல்லை. சுருக்கமாக எழுதும் வழக்கத்தைக் கொண்டுவருவதில் தவறில்லை. 20-ஆம் என்று எழுதலாம். ம் மட்டும் எழுதுவது ambiguous ஆக இருக்கும். இக்கட்டுரைக்கு வேறு மொழிக்கட்டுரைகளுடன் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் தலைப்பை மாற்றுவதில் சிக்கல் வராது என்றால் 20-ஆம் என மாற்றி விடலாம். 20-ஆம் நூற்றாண்டு என்பது பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். மற்ற நூற்றாண்டு கட்டுரைகளுக்கும் இவ்வாறு மாற்றவேண்டியிருக்கும். இதற்கு தானியங்கி ஏதாவது இருக்கிறதா? - Uksharma3 (பேச்சு) 01:01, 16 மார்ச் 2014 (UTC)

20-ஆம் நூற்றாண்டு எனவே மாறி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 02:26, 16 மார்ச் 2014 (UTC)