உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:1999 (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1999 (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்துக்கள்

[தொகு]
  • "எனக்கு இந்த படம் மிகவும் நன்றாக பிடித்துள்ளது, அதன் உண்மைத்தன்மை என் மனத்தை நெகிள வைத்துள்ளது" -இயக்குனர் டீபா மேதா
  • "1999 உனர்வுபூர்பனாது, உண்மையானதும்.... 1999 கனேடிய திரைப்பட துறைக்கு ஒரு புதிய குரலை தந்துள்ளது" -வன்கூவர் சர்வதேச திரைப்பட விளா
  • "1999 பார்தவுடன் எனது மனம் கனமாக இருந்தது... கதை என்னை பாதித்துவிட்டது... கதை சொல்லும் முறையில் ஒரு புதிமையை பார்க்கிறேன்... அனைத்து தமிழர்களும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று அசைப்படுகின்றேன்." -இயக்குனர் சசிகுமார்
  • "எனது இனத்தின் வலியை சென்ன இந்த படம் எனது மனதை ஆழமாக பாதித்து விட்டது... இப்படத்தில் இருந்து நான் எத்தனையோ கற்றுக்கொள்கின்றேன்..." -இயக்குனர் சமுத்திரக்கனி
  • "இது ஒரு சாதாரண படமல்ல… அசாதாரண கதைக்களம், வித்தியாசமான நெறியாள்கை என தமிழுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். தமிழர்களின் இன்னொரு களத்தை இதில் பார்க்க முடியும்." - என் வழி பத்திரிகை
  • "பொதுவாக இம்மாதிரியான ஹாலிவுட் படங்களில் இருக்கும் அறமற்ற வன்முறைக் கொண்டாட்டங்களை நிராகரித்து, தமது சமூகத்தின் நெருக்கடியிலிருந்து இனிவரும் தலைமுறையை மீட்க வேண்டும் எனும் ஆத்மார்த்தமான வேட்கையை லெனின் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்." - திரைப்பட விமசகர் யமுனா ராஜேந்திரன்

இயக்குனர் S. P. ஜனநாதன்

[தொகு]

ஆதவன் பத்திரிகை - சித்திரை 2010

‘‘1999 சினிமாவை நார்வேயில் வைத்துப் பார்த்தேன். லெனின் எம் சிவம் இயக்கிய அந்தப் படம் ஈழத்தமிழரின் சினிமா உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும். தமிழ் சினிமா என்றால் அது கோடம்பாகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உருவாகக் கூடியது என்பதை உணர்த்தியது அந்தப் படம். கதை ரீதியாகவும் சரி தொழில் நுட்ப ரீதியாகவும் சரி 1999 படம் தரமாக இருக்கிறது. கதை சொல்வதில் புதுமையும் தொழில் நுட்பத்தை கையாள்வதில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறது அந்த சினிமா. தவிறவும் இம்மாதிரி உலகின் பல் வேறு இடங்களிலும் இம்மாதிரி படங்களை உருவாக்குவது அந்த மக்களின் கலாசார வாழ்வியல் தொடர்பான தேவைகள் சார்ந்ததும் கூட. தலைமுறைகளைக் கடந்தும் பிரச்சனைகளை சந்திக்கிற ஒரு இனம் தனது சொந்தக் குரலில் பேசுவது வீர்யமானதும் தனித்துவமானதும் இல்லையா? அந்த வகையில் நான் 1999 சினிமாவையும் அதை இயக்கிய லெனினையும் மிகவும் பாராட்டி வரவேற்கிறேன்"

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:1999_(திரைப்படம்)&oldid=2989994" இலிருந்து மீள்விக்கப்பட்டது