பேச்சு:1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே சீராக அனைத்து உலக கிண்ண பக்கங்களும் "ஆண்டு துடுப்பாட்ட உலகக் கிண்ணம்" என்று பெயரிடலாம். முதலாவது, இரண்டாவது என்பதை தலைப்பில் தவிர்க்கலாம். தலைப்பு சுருக்கமாக இருத்தல் நலம். எனவே தலைப்பை 1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.இறுதியில் உள்ள உலகக் கிண்ணங்கள் வார்ப்புருவிலும் இவ்வடிவமே பயன்படுத்தப்பட்டுள்ளது.--மணியன் 16:52, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மணியன் தங்கள் கருத்து சிந்திக்கக்கூடியதே. பொதுவாக உலக கிண்ணப் போட்டிகளில் நடைபெறும் ஆண்டை விட அது எத்தனையாவது போட்டி என்ற அடிப்படையில் அழைக்கப்படுவதே பொது நடைமுறையாகவுள்ளது. உதாரணமாக 25வது ஒலிம்பிக் போட்டி, 10வது தெற்காசிய விளையாட்டுப்போட்டி, 13வது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி….இவ்வாறு.

உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டியும் இவ்வாறுதான் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அழைக்கப்படுகின்றது. இதில் இன்னுமொரு விடயத்தை கருத்திற் கொள்ளல் வேண்டும். ஒரு வாசகருக்கு முதலாவது துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டியைப் பற்றி விக்கியில் தேட வேண்டியிருப்பின் முதலாவது துடுப்பாட்ட உலகக்கிண்ண என தேட எத்தனிப்பது இலகுவாக இருக்கும். குறிப்பிட்ட வாசகருக்கு முதலாவது துடுப்பாட்ட உலகக்கிண்ணம் 1975ம் ஆண்டு நடந்தது என்று தெரியாதிருந்தால் அவருக்குத் தேடுவது கடினமாக இருக்கலாமே. எனவே, இது விடயத்தில் மேலும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது பயன்மிக்கதாக இருக்கலாம்.--P.M.Puniyameen 04:01, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

P.M.Puniyameen- இதுவரை விக்கிப்பீடியாவில் தலைப்பில் எத்தனையாவது என்று இடுவது வழக்கமில்லை.ஆங்கில/தமிழ் ஒலிம்பிக்/பொதுநலவாய விளையாட்டுக் கட்டுரைகளைக் காண்க.எத்தனையாவது என்பது அப்போட்டிக்கான சின்னத்திலும் முதற்பத்தியிலும் இருக்கும். இதன்மூலம் தேடுவது எளிதாகும்.முதலாவது போட்டிக்கான கட்டுரையில் தலைப்பில் இடுவது அது குறிப்பிடத்தக்க நிகழ்வாகையால் கொள்ளலாம். பிற கட்டுரைகளில் இடுவது தலைப்பில் இடுவது நீளத்தை கூட்டும். பத்துக்குள் இருக்கும்வரை சரி;இருபத்தியொன்றாவது என்றால் எத்தனை நீளமாக இருக்கும். மேலும் நீளமான தலைப்புகளைக் கொண்டு உள்ளிணைப்புகள் கொடுப்பதும் சோர்வை ஏற்படுத்தும்.--மணியன் 04:48, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மணியன் - கருத்துக்கு நன்றி. விக்கிபீடியா பொது வழிமுறைகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். இவ்விடயத்ததை நிர்வாகிகள் சீர்செய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். --P.M.Puniyameen 05:18, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

#### துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என ஒரே சீரான எளிமையான தலைப்பாக வைக்கலாம்.--Kanags \உரையாடுக 06:59, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

Kanags - சீராக்கத்துக்கு மிக்க நன்றி--P.M.Puniyameen 07:22, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]