பேச்சு:1964 தனுஷ்கோடி புயல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கிருந்து இக்கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டு இருக்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 11:58, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]

பதிவில் எழுதியவரே இதனை இங்கு எழுதியிருப்பதால் பதிப்புரிமை மீறலாகக் கொள்ள முடியாது. இதனை நீக்காமல் கட்டுரையைத் திருத்தி மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 12:05, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]
கவனிக்கத் தவறி விட்டேன். கட்டுரையைத் திருத்த முயல்வோம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:05, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]

பேரலையினால் விபத்துக்குள்ளாகி அழிவைச்சந்தித்த தொடரி "போட் மெயில்" அல்ல[தொகு]

எழுதப்பட்டிருப்பது: // சென்னையில் இருந்து இராமேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்த போட் மெயில் என்று தொடருந்து சேவை தொடர் வண்டியும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுக்கப்பட்டதில் பலர் உயிரிழந்தனர். //

"போட் மெயில்" (Boat Mail) எனப்பட்டது சென்னை எழும்பூர் தொடங்கி தனுஸ்கோடி பாலக்கால் (pier) இல் முற்றுப்பெற்ற தொடருந்து சேவை. அவ்வகை தொடரி ஒன்று 1964 திசம்பர் 22-25 திகதிகள் பெரும்புயல் காரணமாக ஏற்பட்ட பேரலைகளில் எங்கும் சிக்கி அழியவில்லை.

இந்திய பெருநிலத்துக்கும் இராமேசுவரம் தீவிற்கும் இடைப்பட்ட பாம்பன் தொடருந்து தடம்கொண்ட பாலம் பேரலையில் உடைந்தது உண்மை.

மேலும் 23 நள்ளிரவுக்கு 5 நிமிடம் முன் பாம்பன் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஸ்கோடி உள்ளூர் பயணி (passenger) வகை தொடரிதான் தனுஸ்கோடி தரிப்பிடத்தின் நுழைவாயிலை அடைகையில் ஒரு பேரலையால் அடித்துக்கவிழ்க்கப்பட்டு அனைத்து பயணிகளும் உயிர்மாண்டதாக குறிப்புகள் உளன. சான்றுகள்:

1. http://www.irfca.org/gallery/accident/img102_001.jpg.html (இது Indian Railways Fan Club இன் தளத்தில் - பின்னூட்டங்களை வாசிக்கவும்)

2. http://books.google.lk/books/about/Railway_Accident.html?id=tpEyywAACAAJ&redir_esc=y (இது India Railway Safety Commission இனது அறிக்கைபதிப்பு பற்றி தகவல் (Bibiliography information ஐ வாசிக்கவும்)

3. http://www.hindu.com/2005/12/24/stories/2005122405580500.htm (இது ஆங்கில இந்து பத்திரிகையில்)

4. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/12705/11/11_chapter%203.pdf பல தகவல்களைத் தரும் பதிவு. பக்கம் 105 இல் பார்க்கவும்.

5. http://www.indiawaterportal.org/articles/story-dhanushkodi-cyclone-hit-town-where-reality-coexists-myths-mysteries-and-miracles

மேலும் பல உளன.

அப் பயணி வகை தொடரியில் பயணித்து மாண்டோரின் எண்ணிக்கையில்தான் மேற்குறிப்பிட்ட பதிவிகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன (110 - 200 க்கிடையில்) மேலும் உயவுத்துணை 4 இல் குறிப்பிட்டிருப்பது போல அத் தொடரியில் பயணித்து மாண்டோரில் பள்ளிச்சிறார்களும் இருந்தனர் என்பதை எனது சிறு வயதிலேயே செய்த்திதாள்களில் வாசித்திருக்கிறேன். விடுமுறைக்கு (for camping) கூட்டிவரப்பட்டவர்கள் என வாசித்ததாக நினைவு.

--K. Sethu | கா. சேது (பேச்சு) 06:04, 24 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஐயம்...[தொகு]

@பயனர்:Kanags, இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மீன்பிடி வள்ளங்கள் என்பது இலங்கையில் பயன்படுத்தும் சொல்லா என்பதனை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:12, 27 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆம், மீன்பிடிப் படகுகள் எனவும் எழுதலாம்.--Kanags \உரையாடுக 12:13, 27 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]