பேச்சு:0கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@தமிழ்க்குரிசில்:, தலைப்பை மாற்றக் கோரியிருக்கிறீர்கள். உங்கள் பரிந்துரை என்ன?--Kanags (பேச்சு) 11:14, 28 சனவரி 2018 (UTC)

முதற்கண், சுழியத்துக்கான குறியீடு, ஆங்கில ஓ எழுத்தாக இருக்கிறது (அப்படித் தான் என் கணினியில் தெரிகிறது) அதை சுழியமாக மாற்ற வேண்டும். இரண்டாவது எண்ணைத் தொடர்ந்து ’கள்’ விகுதி சேர்ப்பது செயற்கையாக இருக்கிறது. அதுவும் சுழியமானது கணிதத்தில் மதிப்பற்ற எண். அதற்கு பன்மை விகுதியான ‘கள்’ சேர்ப்பது தவறாகவே தெரிகிறது. ஆங்கிலத்தில் இருப்பதால், அப்படியே ஏற்க வேண்டியதில்லையே. சுழியங்கள் என்றோ, சுழியத் தொடர்/கோர்வை என்றோ இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாமே?! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:16, 28 சனவரி 2018 (UTC)
👍 விருப்பம் --உழவன் (உரை) 17:29, 28 சனவரி 2018 (UTC)
@தமிழ்க்குரிசில் மற்றும் Info-farmer:, முதலில் //சுழியத்துக்கான குறியீடு, ஆங்கில ஓ எழுத்தாக இருக்கிறது// இது தலைப்பில் உள்ள தவறல்ல. தமிழ் விக்கியில் எண்களுள்ள தலைப்புகளைப் பாருங்கள். அனைத்தும் இவ்வாறே உள்ளன. இவற்றை எவ்வாறு மாற்றுவது. அல்லது வழு பதிய வேண்டுமா? //சுழியமானது கணிதத்தில் மதிப்பற்ற எண். அதற்கு பன்மை விகுதியான ‘கள்’ சேர்ப்பது தவறாகவே தெரிகிறது.// இக்கட்டுரை சுழியங்கள் என்ற எண்கணிதக் கட்டுரை அல்ல. 1000கள், 2000கள், 1990கள் போன்றதொரு ஆண்டு பற்றிய கட்டுரை.சுழியத்தொடர் என தலைப்பிடுவது பொருத்தமல்ல. உங்கள் பரிந்துரைப்படி, 2000கள் போன்ற தலைப்பு பொருந்துகிறதா? அல்லது அவையும் தமிழிலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாவா?--Kanags (பேச்சு) 06:46, 29 சனவரி 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:0கள்&oldid=2477501" இருந்து மீள்விக்கப்பட்டது