பேச்சு:ஹொங்கொங்கில் தமிழ் மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழே உள்ள ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர் பக்க உரையாடல் பக்கம் இங்கு பிரதியிடப்படுகிறது.--Kanags \பேச்சு 21:19, 6 ஏப்ரல் 2008 (UTC)

இதன் உள்ளடக்கத்தை விக்கிமூலத்தில் சேர்க்கலாம் వినోద్  வினோத் 17:35, 2 ஏப்ரல் 2008 (UTC)

இக்கட்டுரையின் சில பகுதிகளை ஹொங்கொங் தமிழர், ஹொங்கொங்கில் தமிழ் மொழி, ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் போன்ற பக்கங்களுக்கு மாற்றிவிட்டு இதனை நீக்கலாம் அல்லது விக்கிமூலம் (அல்லது விக்கிநூலில்??) சேர்க்கலாம்.--Kanags \பேச்சு 08:33, 4 ஏப்ரல் 2008 (UTC)

புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடையே "தமிழ்" மொழிக்கான முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் காட்டும் முகமாகவே இதுப் போன்ற அந்நிய தேசங்களில் தமிழ் வளர்ப்புக்கான முயற்சிகளை முன்வைப்பதற்கு முனைந்தேன். இது விக்கி திட்டத்திற்கு அமைவாக இல்லாவிடின் இதை நீங்கள் அகற்றவோ, அல்லது மாற்றங்கள் செய்யவோ கருதினால் செய்யுங்கள்.

விக்கிமூலம் அல்லது விக்கிநூலில் சேர்ப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறு செய்வதாயினும் செய்யலாம். நன்றி

அருண், இந்தக் கட்டுரையை அப்படியே விக்கி மூலத்தில் இணைத்திருக்கிறேன். இங்குள்ள ஹொங்கொங் பற்றிய கட்டுரைகளில் விக்கி மூலத்துக்கு [[wikisource:ta:ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்]] என்றவாறு இணைப்புத் தரலாம். இக்கட்டுரையை அங்கு மேம்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 06:06, 6 ஏப்ரல் 2008 (UTC)

விக்கியிடை இணைப்பு வார்ப்புருக்கள் எனும் ஒரு பகுப்பு இப் பேச்சுப் பக்கத்தில் காணப்படுகின்றதே என்னக் காரணம்? மற்றும் சில இடங்களிலும் காணப்படுகின்றது.--HK Arun 01:55, 23 ஜனவரி 2009 (UTC)

நடாத்தல் என்ற சொல் உள்ளதா? எழுத்துப்பிழையா? வழக்கமா?[தொகு]

வலைவாசல்:ஒங்கொங் பக்கத்தில் சிறப்புக் கட்டுரைப் பகுதியிலும், உங்களுக்குத் தெரியுமா பகுதியிலும் நடாத்தப்படுவது நடாத்தப்பட்டு போன்ற சொல்லை காணமுடிந்தது. வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வழக்குச் சொல்லா என்ற புரிதல் இல்லாமையால் இங்கு விளக்கம் கேட்கிறேன். நான் நடாத்தல் என்ற சொல் வழக்கினை தமிழகத்தில் கேட்டதில்லை. நடத்தல் என்பதன் எழுத்தப்பிழையாக இருக்குமோ என்ற ஐயம் உள்ளது. அறிந்தவர்கள் தெளிவு படுத்த வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:29, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அது எழுத்துப் பிழை இல்லை. இலங்கைத் தமிழர்கள் நடாத்தல் (நடத்தல்), பாரிய (பெரிய அல்லது மிகப்பெரிய) போன்ற சொற்களைத் தமது பேச்சில் பயன்படுத்துவார்கள். இச்சொற்கள் தமிழகத் தமிழரிடையே வழக்கிலில்லை. இவற்றின் மூலம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், இவை பிற்காலத்தில் ஊடுருவிய சொற்கள் என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:36, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தெளிவு படுத்தியமைக்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:00, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இல்லை. தமிழகத்திலும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. புலவர், தமிழாசிரியர் போன்றோர் அதிகம் பயன்படுத்தும் சொல். நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். மூலம் தெரியவில்லை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:14, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டிலும் பேசப்படுகிறதா!. ஆச்சரியமாக உள்ளது. எங்கள் பகுதியில் இச்சொல் வழக்கில் இல்லை. தற்போதுதான் இச்சொல்லை காண்கிறேன். அதிக இடங்களில் பயன்படுத்தியுள்ளமையாலும், யாரும் திருத்தாமல் இருந்தமையாலுமே எனக்கு சந்தேகம் வந்து பேச்சுப்பக்கத்தில் கேட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:03, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]