பேச்சு:ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக் கட்டுரையில் அவதானம், அவதான நிலையம் என்னும் சொற்கள் 10 இடங்களுக்கு மேலாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தமிழில் அவதானிப்பு, அவதானம் என்னும் சொற்கள் observation என்னும் சொல்லுக்கு இணையாக ஆளப்படுகின்றது என்று தெரிந்திருந்தாலும். இச்சொல்லின் பொருள் தெளிவாக என்னைப் போன்றவர்களுக்கு விளங்கவில்லை. அவ என்னும் முன்னொட்டு பொதுவாக கீழ் என்னும் பொருள் தருவதை ஒருவாறு பலரும் அறிந்திருக்கலாம் (அவரோகணம், அவப்பெயர், அவமானம், அவமதிப்பு, அவதாரம்.- அவதாரம் என்பது கீழிறங்கி வருதல்.). Observe என்பது காண்தல், உணர்தல், அறிதல், நோக்குதல், கண்டுபிடித்தல், உற்றறிதல், உற்றுநோக்குதல், பார்த்தல், கூர்ந்து பார்த்தல் (கூர்பார்வை) என்று பல பொருள்களை இடத்திற்கு ஏற்பத் தருவது. 'அபிள் என்பது புறவெளியில் உள்ள ஒரு கண். பல்வேறு மின்காந்த அலைகளை உணர்ந்து காணவல்ல விண்வெளி தொலைநோக்கி. எனவே Space Observatory என்பதை விண்வெளிக் கூர்பார்வை நிலையம். விண்வெளி கூர்பார்வையகம் என்பது போன்ற சொல்லால் அழைக்கலாமா? புற ஊதாக்கதிர்களை உணரவல்ல, காணவல்ல, உணர்ந்து பதிக்க வல்ல தொலைநோக்கி என்று இடத்திற்கு ஏற்றார்போல கூறலாமே. அவதான நிலையம் என்பது உண்மையிலேயே புரியவில்லை. ஆங்கிலச்சொல்லாகிய observe என்பதை நினைவுபடுத்திக்கொண்டால்தான் ஒருவாறு புரிகின்றது. --செல்வா 02:21, 19 அக்டோபர் 2008 (UTC)Reply[பதிலளி]

சென்னை பல்கலைகழக லெக்சிகான் சொல்வதாவது: 1. அவதானி -த்தல் avatāṉi- : (page 152)

சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத் துக்கொண்டான். (W.)

  • அவதானி¹-த்தல் avatāṉi-

, 11 v. tr. < id. 1. To recollect, reflect; நினைப்பூட்டிக்கொள்ளு தல். 2. To commit to memory, fix or retain in mind; மனத்திலமைத்தல்.2. அவதானி avatāṉi : (page 152)

reflect; நினைப்பூட்டிக்கொள்ளு தல். 2. To commit to memory, fix or retain in mind; மனத்திலமைத்தல். (விறலிவிடு 102.)

  • அவதானி² avatāṉi

, n. < ava-dhānin. 1. Attentive person; கவனிப்புள்ளவன். 2. Title of one who is well versed in the Vēdas; வேதங் களில் தேர்ச்சிபெற்றவன்.

பொதுவாக கூர்ந்து கவனித்தல் என்ற பொருள். −முன்நிற்கும் கருத்து 62.31.227.9 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.


//பொதுவாக கூர்ந்து கவனித்தல் என்ற பொருள்.// என்ற பொருளைச் சென்னை அகரமுதலி தரவில்லை. மனப்பாடம் செய்தல், நினைவுகொள்ளுதல் என்பதே அடிக்கருத்தாக உள்ளது. அவதானி என்னும் ஒரேயொரு சொல்லுக்கு கவனிப்புள்ளவன் என்று பொருள் கொடுத்துள்ளது (இதுகூட, அஷ்டாவதானி, சதாவதானி என்னும் சொற்களில் வழங்கும் ஒரு பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவதானித்தல் என்பது பல பணிகளை எதன் பின் எது வருதல் வேண்டும் என்று நினைவில் வைத்துக்கொண்டே வியப்பூட்டும் வகையில் பணிகளை தவறாது செய்வதற்கு வழங்கும் சொல். இதிலும் நினைவுகொள்ளுதல், மறவாமல், தவறாமல் செய்தல் என்பதே உட்பொருள்), .இது observe அல்ல. ஆங்கிலத்திலே observe என்னும் சொல்லின் பொருள் கூர்ந்து பார்த்தல் (நிகழ்வதை உற்று அறிதல், காண்தல்). Observe என்பது robotic, systematic behavior அல்ல; robotic என்று நான் கூறுவதை யாரும் தவறாகக் கருதவேண்டாம். இயக்க வேறுபாடுகளை சட்டென விளங்கிக்கொள்ளவே கூறுகின்றேன். Observe என்பது நினைவு கொள்தல் அல்ல. ஆனால், இலங்கைத் தமிழர்கள் கூர்ந்து பார்த்தல், கூர்பார்வையுடன் இருத்தல், சூழுணர்வுடன் பார்த்தல் என்னும் பொருளில் ஆள்வதாகத்தான் நான் உணர்கின்றேன். மயூரநாதன், கனகு போன்றவர்கள் அவதானித்தல் என்னும் சொல்லை எப்பொருளில் பொதுவாக இலங்கையில் ஆள்கிறார்கள் என்று தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும். செ.அ.முதலி தரும் பொருள் இங்கு இருக்கவேண்டிய பொருளுக்குப் பொருந்தாதது என்று நினைக்கிறேன். --செல்வா 15:32, 19 அக்டோபர் 2008 (UTC)Reply[பதிலளி]

செல்வா, நான் அறிந்த வரையில் அவதானித்தல் என்றால் கவனித்தல் அல்லது ஆங்கிலத்தில் observe என்பதற்கு இணையான சொல்லாகவே ஈழ வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. செ.அ.முதலி தரும் பொருள் இங்கு பொருந்தாது. எப்படி இவ்வளவு பொருள் வித்தியாசம் வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. --Natkeeran 15:53, 19 அக்டோபர் 2008 (UTC)Reply[பதிலளி]
செ.ப.பே. இலக்கியத்திருந்து உதாரணம் காட்டுகிரது. ஆனால் காலக்கட்டத்தில் சொற்களின் அர்த்தம் மாறுபடுகிறது. அதனால் தற்கால அர்த்தம் பழைய இலக்கிய அர்த்தம் போல் 100% இருக்காது. ஓரளவு தொடர்பு இருக்கும்.--−முன்நிற்கும் கருத்து 62.31.227.9 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
இச் சொல் தமிழ்நாட்டில் வழக்கில் இல்லை. 50-60 மில்லியன் மக்களுக்கு விளங்காது. Observe என்பது காண்தல், உணர்தல், அறிதல், நோக்குதல், கண்டுபிடித்தல், உற்றறிதல், உற்றுநோக்குதல், பார்த்தல், கூர்ந்து பார்த்தல் போன்ற எத்தனையோ சொற்கள் இருக்கும் பொழுது ஏன் தவறான பொருள் தரும் வேற்றுமொழிச்சொல்லை ஆள்தல் வேண்டும்? நல்ல தமிழ்ச்சொல்லை ஆண்டால், பொருள் வளர்ச்சி அடைய வாய்ப்பு அதிகம். --செல்வா 22:51, 19 அக்டோபர் 2008 (UTC)Reply[பதிலளி]
இலங்கையில் நாங்கள் அவதானித்தல் என்பதை Observing என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக "வானிலை அவதான நிலையம்", "அரசியல் அவதானிகள்" போன்ற பயன்பாடுகள் பரவலாக உண்டு. இது தொடர்பான பதிவு ஒன்றைஇங்கே] பார்க்கவும். அவதானம் என்பதற்கு நல்ல பொருத்தமான மாற்றுத் தமிழ்ச்சொல் கிடைத்தால் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. மயூரநாதன் 18:34, 19 அக்டோபர் 2008 (UTC)Reply[பதிலளி]
உங்களுக்கு மறுப்பு இல்லை என்றால், சில இடங்களில் நான் கட்டுரையில் மாற்றுகின்றேன். படித்துப் பாருங்கள், சரியாக இல்லை என்றால் உடனே நீக்கிவிடலாம். விண்வெளிப் பார்வையகம், விண்வெளிப் பார்வை நிலையம் என்றே கூறலாம். அல்லது விண்வெளிக் கூர்பார்வையகம் அல்லது விண்வெளிக் கூர்பார்வை நிலையம் எனலாம். கண்காணி என்னும் சொல் மேற்பார்வை இடுபவர்க்கு வழங்கும் சொல். oversee, supervise என்பதே பொருள். கண்காணிப்பவரை கண்காணி என்று கூறுவதால், காணி என்னும் சொல்லைப் பின்னொட்டாக வைத்து சொல் ஆக்கலாம். உற்று, உன்னிப்பாய் காண்பதால், உற்றுகாணி என்று கூட சொல்லலாம் (ஆனால் போதிய நிறைவு தருவதாக இல்லை). உற்றுநோக்கி என்றும் கூறலாம். எனவே விண்வெளி உற்றுகாண் நிலையம், விண்வெளி உற்றுநோக்கு நிலையம் என்றும் கூறலாம். வானிலை அறிநிலையம் எனலாம். Observer என்பதற்கு முன்னொட்டு ஏதும் இல்லாமல் காணி என்றே கூறலாம். நடப்புகளை, நிகழ்வுகளைக் காண்பவரைக் காணி என்றே சுருக்கமாகக் கூறலாம். அரசியல் பார்வையாளர்கள் எனலாம் அல்லது அரசியல் காணிகள் என்றும் கூறலாம். கண்காணி என்னும் சொல்லும்கூட மேற்பார்வை என்னும் பொருளோடு, பொதுவாக கூர்ந்து காண்பவர்என்னும் பொருளில், பொருள் நீட்சி ஊட்டி வழங்கலாம் என நினைக்கிறேன். கூர்காணி எனலாம். எ.கா: அவர் தன்னை அரசியல் கூர்காணி என்று சொல்லிக்கொள்கிறார், ஆனால் அரசு கவிழ இருப்பதை அவர் முன்கூட்டியே அறியவில்லை. --செல்வா 22:51, 19 அக்டோபர் 2008 (UTC)Reply[பதிலளி]

ஏற்கனவே உகந்த சொற்கள் இருக்கையில் ஏன் புதிதாக உருவாக்க வேண்டும். மயூரநாதன் குறிப்பிட்ட தளத்தில், அவதானி என்பதற்கு நோக்கர் என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது "கண்காணிப்பாளர்" எனலாம். அவர்களை வெறுமனே காணிகள் எனச் சொல்வது பொருந்தவில்லை (அல்லது அழகாக இல்லை). அவதானம் என்பது வடமொழி அடியில் இருந்து வராவிட்டால் observatory என்பதற்கு அவதான நிலையம் எனப் பாவிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? அல்லது "விண்வெளி கண்காணிப்பு நிலையம்" எனலாமா?--Kanags \பேச்சு 23:30, 19 அக்டோபர் 2008 (UTC)Reply[பதிலளி]