பேச்சு:ஸ்ரீமாதா டிரஸ்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறக்கட்டளைகள் தொடர்பான கட்டுரைகளை கலைக்களஞ்சியங்களில் எழுதும் வழக்கம் இல்லையே! கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தை நோக்கினால், விளம்பரமாக தெரியவில்லை. ஆயினும், தனியார் நிறுவனங்களை/அமைப்புகளைப் பற்றி எழுதுவது பொருத்தமானதா? அறக்கட்டளைகளை குறிப்பிடத்தக்கன என கொள்ளலாமா? கவனிக்க: பயனர்:Kanags -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:52, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கட்டுரை விக்கிக்கேற்றதாக இல்லை என்பதே எனது கருத்தும். மேலும் இணைக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் படி, அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டுகளில் முரண்படுகின்றன. --Booradleyp1 (பேச்சு) 15:02, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமை குறித்த விதிகளை நோக்கினேன். மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, பன்னாட்டு அளவிலோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தால், அந்த அமைப்பு குறிப்பிடத்தக்க தகுதியைப் பெறுகிறது. சிறிய நிறுவனமாக இருந்தால் கூட, விருதுகளையோ, பாராட்டுகளையோ, அங்கீகாரத்தையோ பெற்றிருந்தால் குறிப்பிடலாம். தன்னார்வத் தொண்டு செய்திருந்தால், எந்த விதத்தில் செய்தனர் என குறிப்பிடலாம்.
‎பயனர்:Kuzhali.india, இந்த அறக்கட்டளையினர் குறிப்பிடத்தக்க எதையாவது செய்திருந்தால் குறிப்பிடுங்கள். ”காப்பாகத்தை நடத்துகின்றனர்” என்ற ஒற்றை வரியைக் கொண்டு கட்டுரைக்கு வலுசேர்க்க முடியாது. இந்த அறக்கட்டளையின் செயல்பாடு குறித்த அதிக தகவல்கள் இருந்தால் சேருங்கள். இதில் இருக்க வேண்டிய முக்கிய தகவலே செயல்பாடு தான். போதிய தகவல்கள் இல்லாதிருப்பின், இந்த அறக்கட்டளைக்கான கட்டுரையை நீக்கிவிடலாம். காப்பகத்தை பற்றிய போதிய விவரங்கள் கிடைத்தவுடன் அதை கட்டுரையாக்கிவிடுங்கள். காப்பகம் அமைந்துள்ள இடம், புற்று நோயாளிகள் தங்கும் அறைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கான வசதிகள், வழங்கப்படும் சிகிச்சைகள், உதவித் தொகை, பணியாற்றிய முக்கிய நபர்கள் போன்ற விவரங்களைக் குறிப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு)
அம்மையே, கட்டுரையை கவனித்தீரா? அதில் தரப்பட்டுள்ள இணைப்பில், காஞ்சிப் பெரியவரிடம் கோரியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜெயேந்திர சரஸ்வதியை கேட்டதாக கட்டுரையில் குறிப்பு உள்ளது. ஜெயேந்திர சரஸ்வதியை காஞ்சிப் பெரியவர் என அழைக்கின்றனரா? அவருக்கு முன்னர் இருந்தவரைத் தானே அப்படி அழைத்தார்கள்? வெளியிணைப்பை சரி பார்த்து உரையை திருத்தி உதவுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:54, 6 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஸ்ரீமாதா_டிரஸ்ட்&oldid=1702544" இலிருந்து மீள்விக்கப்பட்டது