பேச்சு:ஸ்டீவ் ஜொப்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் பெயர்ச் சொற்கள் மெய்யெழுத்தில் தொடங்குவதில்லை. அத்துடன், பின்வரும் சொற்கள் தமிழாக்கப்பட்டுள்ள அடிப்படையில் நாம் ஏன் இப்பெயரையும் தமிழாக்கக் கூடாது?

  • Jesus - இயேசு (ஏசு, ஈசா, இந்தோனேசிய, மலாய மொழிகளில் Yesus, சிங்களத்திலும் யேசு)
  • Job - யோபு (ஐயூப்)
  • Jacob - யாக்கோபு (யஃகூப்)
  • John - யோவான்
  • Joseph - யோசேப்பு (யூசுப்)

--பாஹிம் 06:02, 9 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த ஜகரம் கொண்ட பெயர்கள் அடிப்படை மொழிகளிலே யகரமாக வழங்கப்படுகின்றன. ஆங்கிலப்படுத்தப்படும் போது தான் ஜகரம் கொண்டு மாறுகின்றன. எனவே அவற்றை தமிழில் வழங்கும் போது மூல மொழிப் பயன்பாட்டின் யகரத்தை பயன்படுத்துகிறோம். ஆனால் இப்பெயர் அப்படியன்று - அடிப்படையிலேயே ஜகரம் கொண்ட ஆங்கிலப்பெயர். கிரந்தம் தவிர்க்க வேண்டுமெனில் சகரம் தான் வர வேண்டும் யகரமல்ல.--சோடாபாட்டில்உரையாடுக 06:06, 9 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஜகரத்துக்குப் பதிலாக சகரம் தான் வர வேண்டுமென்பது எப்போதும் சரியானதாகப் படவில்லை. பின்வரும் சொற்களை இலங்கையிற் தமிழ்ப்படுத்தும் முறையைப் பாருங்கள்:

  • Japan - யப்பான்
  • January - யனவரி
  • June - யூன்
  • July - யூலை
  • ஜன்னல் - யன்னல்

--பாஹிம் 08:35, 9 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஸ்டீவ்_ஜொப்ஸ்&oldid=947823" இலிருந்து மீள்விக்கப்பட்டது