பேச்சு:ஸ்கைலேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Skylab என்பதை அப்படியே அர்த்தத்திற்கு மொழி மாற்றம் செய்யாது இசுக்கைலாப் என்றோ ஸ்கைலாப் என்றோ பெயர் மாற்றலாம். en:Spacelab என்ற கட்டுரையையும் நினைவிற் கொள்க. --Anton (பேச்சு) 11:23, 29 சூலை 2013 (UTC)

பெயர் நன்றாகதானே உள்ளது? விண்ணாய்வகம் - Skylab; விண்வெளி ஆய்வகம் - Spacelab --நந்தகுமார் (பேச்சு) 11:39, 29 சூலை 2013 (UTC)

பெயர் சிறப்பாக உள்ளது ஐயா!
  • ஆனால், பெயர்ச் சொற்கள் அதேபெயரிலேயே எழுதப்பட வேண்டும். அந்த சொல் sky lab அல்ல, skylab. இரு சொற்களும் தனித்தனியாக இருந்தால் மட்டுமே மொழிபெயர்க்க வேண்டும். ஒரே சொல்லாக இருப்பதால் அது பெயர்ச் சொல்லாகவே கருதப்படும்.
  • தவிர, அது வேற்று மொழிச் சொல் என்பதால், விண்ணாய்வகம் என மொழிபெயர்த்தால் என்பது விண்வெளியில் உள்ள எந்த ஆய்வகத்தையும் குறிக்கக்கூடும். அதைக் குறிப்பிட்டுக் கூற பெயர்ச் சொல்லே சிறந்தது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:56, 29 சூலை 2013 (UTC)
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி--நந்தகுமார் (பேச்சு) 13:28, 29 சூலை 2013 (UTC)
இசுக்கைலாப் ----> இசுகைலாப் என்பது சிறப்பாக இருக்கும் அல்லது ஸ்கைலாப் பயன்படுத்தலாம். அன்டோனினதை வழிமொழிகிறேன். -- நி ♣ ஆதவன் ♦ Heliopsis July 2011-2.jpg (உரையாட படத்தை சொடுக்கவும்) 13:05, 29 சூலை 2013 (UTC)
விண்ணாய்வகம் என்ற பெயர் சிறப்பாகவே உள்ளது. இதை பார்ப்பவர் எந்த விண்ணாய்வகம் எனத் திணறக் கூடும். தவிர, ஸ்கைலாப் என்பதில் உள்ள லாப் என்பது lap என்றும் படிக்கப்படலாம். எனவே, ஸ்கைலேப் என்றோ, ஸ்கைலேப் (விண்ணாய்வகம்) எனத் தெளிவாகவோ குறிப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:54, 29 சூலை 2013 (UTC)
ஸ்கைலேப் எனவே தலைப்பை வைக்கலாம்.--Kanags \உரையாடுக 21:08, 29 சூலை 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஸ்கைலேப்&oldid=1469589" இருந்து மீள்விக்கப்பட்டது