பேச்சு:வைஷ்ணவ தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருத்தம் முடிந்தது Tamil.09

வணக்கம் தமிழ்.09. திருத்தங்கள் செய்ததற்கு நன்றி. பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திடுவது பற்றி அறிய விக்கிப்பீடியா:கையெழுத்து பாருங்கள். கட்டுரையில் செய்துள்ள திருத்தங்கள் இன்னும் நிறைவளிக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு:
  • முதல் பத்தியில் தவறான இடங்களில் காற்புள்ளிகள் வருகின்றன.
  • //இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும் மற்றும் கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் (7.45 மைல்கள்) அமைந்துள்ளது.// என்று உள்ளது. உயதரத்திலும் மற்றும் கத்ரா.. தொலைவிலும் என்று வருவது தவறு. இரண்டும் உம்-களுக்கு இடையில் மற்றும் வராது. அவனும் மற்றும் இவனும் என்று சொல்ல மாட்டோம் தானே?
  • மற்றும் திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்குப் பிறகு.. என்று ஒரு சொற்றொடர் தொடங்குகிறது. மற்றும் என்ற சொல் ஒரு சொற்றொடரின் முதலில் வராது.
  • //உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் வசதிகள் மேற்கொண்டு வருகின்றன.// மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இருக்க வேண்டும்--ரவி 03:39, 29 மே 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைஷ்ணவ_தேவி&oldid=2881293" இருந்து மீள்விக்கப்பட்டது