பேச்சு:வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இந்தக் கோயில் எப்படி அழைக்கப்படுகிறது? வைத்தீசுவரன் கோயில், புள்ளிருக்கு வேளூர், புள்ளிருக்கு வேலர். இதில் எது சரி? தகவற்சட்டத்தில் உள்ள பெயரைப் பற்றிக் கட்டுரையில் குறிப்பு எதுவும் இல்லை.--Kanags \பேச்சு 10:13, 12 ஜூன் 2009 (UTC)

இது பற்றி அவ்வளவாகத் தெரியாது. pullirikuvelur ஒருவேளை வேலரை வேலூர் என்று மாற்றி எழுதி இருக்கலாம். இது பற்றிய தகவல்களை கிடைத்தால் உள்ளிடுகின்றேன். அதுவரை பொருத்தருள்க.--செல்வம் தமிழ் 05:47, 21 ஜூன் 2009 (UTC)

கோபி உங்களது பழைய கட்டுரையோடு உள்ளிடும்பொழுது அல்லது இணைக்கும் பொழுது பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏதுவுமே குறிப்பிடாமல் இணைப்பது தவறு.--செல்வம் தமிழ் 16:48, 30 ஜூன் 2009 (UTC)

ஒருவர் இரவு பகலும் உழைத்து ஆசையுடன் உருவாக்கும் கட்டுரையை அவரின் அனுவதியின்றி அதுவும் நிர்வாகப் பொருப்பில் உள்ள கோபி என்பவரே தான் தொடங்கிய கட்டுரையில் பெயர் வரவேண்டும் என்பதற்காக (ஆயிரமாவார், இரண்டாயிரமாவர் என்று வரவேண்டும் என்பதற்காக) மாற்றியதை தவறு என இங்கு பதிவு செய்கின்றேன். இதற்குப் பெயர் வெளியில் கட்டுரை களவு என்று கூட சொல்ல்லாம் (அப்படித்தான் கூறுவர்). இதை சம்பந்தப்படாத ஒருவர் வருத்தத்தை தெரிவித்தாலும் சம்பந்தபட்ட ஒருவர் வருத்தத்தை தெரிவிக்கவில்லை. இப்படி பட்டவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கவேண்டுமா? அவர் அதற்கு வருத்தம் தெரிவிப்பார் என்றே அவ்வளவு நேரமும் வாதாடினேன் ஆனால் அவர் வருத்தமே தெரிவிக்கவில்லை. நாம் நிர்வாகி என்பதால் ? இதை கண்டிப்பாக யாரும் செய்யமாட்டார்கள். எப்படியும் ஞாயப்படுத்த முடியாது. இதை இங்கு பதிவு செய்வது கடமையாகின்றது. இதை பிற நிர்வாக உறுப்பினர்கள் வலியுறித்தியிருக்க வேண்டும். இதற்கு தான் நிர்வாக குழு. கட்டுரை தலைப்பு கேள்விக்குட்படுத்தப்படாமல் வெறும் பெயர் வரவேண்டும் என்ற நோக்க்திற்காக வார்ப்புரு இடாமல் மாற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதை பயனரே ஒத்துக்கொண்டார் ஆனால் வருத்தம் தெரிவிக்கவில்லை. ஆகையால் கண்டனத்துடன் பதிவு செய்கின்றேன்--செல்வம் தமிழ் 01:23, 2 ஜூலை 2009 (UTC)

கோபியும் பிறரும் மிகத்தெளிவாக என்ன செய்தார்கள், ஏன் செய்தார்கள், எப்படி செய்தார்கள் என்று கூறியும், நீங்கள் புரிந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் முறையற்ற சாடல்களை முன் வைக்கின்றீர்கள். "கட்டுரைக் களவு" என்பதெல்லாம் அத்து மீறிய சொல்லாடல்கள். யாரொருவரும் ஓர் எழுத்தை மாற்றினாலும் யார் எப்பொழுது செய்தார்கள் என்று பதிவாகி இருக்கும் தளம் விக்கி. உங்கள் ஆக்கங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. உங்களுக்கு முன்னே எழுதிய பதிவுகள் (அது ஒரு வரியாயினும்) கட்டுரையின் வரலாற்றில் (அத்தலைப்பில் கட்டுரை எப்பொழுது தொடங்கப்பட்டது என்னும் ஒரே காரணத்துக்காக) இணைக்கப்பட்டது. உங்களுக்கு எடுத்துச் சொன்னாலும் விளங்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக பணியாற்றும் யாரொருவரும் "நிருவாகி" "அதிகாரி" என்றெல்லாம் ஏதும் நினைத்து நடந்துகொண்டதோ பழகியதோ இல்லை. அப்படி நடக்கவும் பழகவும் விக்கி நடைமுறைகளில் இடமும் கிடையாது. யாராயினும் ஒரே உரிமைகள்தாம் உள்ளன. இங்கு எல்லோரும் இயன்றவாறெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மிக இணக்கமுடன் பணியாற்றி வருகின்றனர். செல்வம், அருள்கூர்ந்து விக்கியில் எவ்வாறு சில பணிகள் செய்யப்படுகின்றன என்று உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் மற்றவர்கள் மீது சாட்டிய குற்றங்கள் எல்லாம் கடுமையானவை, ஒரு சிறிதும் பொருந்தாதவை. நான் மேற்கொண்டு எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் இருந்தேன், ஆனால் உங்கள் அத்து மீறிய பேச்சு மிகவும் கவலை அளிக்கின்றது. --செல்வா 02:21, 2 ஜூலை 2009 (UTC)

இந்த கருத்தை நான் மட்டும் முன்வைக்கவில்லை. ஏற்கனவேமுறையாக கனக் பின்பற்றியிருக்கின்றார். அவர் பல இடங்களில் கனக், நக்கீரன் விக்கி முறைகளை சரியாக கடைப்பிடிக்கின்றனர். கருத்து மோதல்கள் அது வேண்டும் அதை விரும்புகின்றனர் அது வேறு. தீக்கதிரில் என்ன குறிப்பிட்டிருக்கின்றது என்று பார்க்கவும். விக்கிப்பட்டறையிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. உடனே இங்கு நடந்தால் எப்படி. தமிழர்களின் பெயர் வராதினாலேயே தமிழர்கள் விக்கியில் பங்கு பெறுவதில் தயங்குகின்றனர். இந்நிலையில் இப்படி நிகழ்ந்தால் இது என் கருத்து மட்டுமல்ல என் இல்லம் சார்ந்தவர்கள், நண்பர்களும், பெண்களும் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்றே கூறுகின்றனர். தவறுவது இயற்கை உடனே வருத்தம் தெரிவிப்பது தான் வாடிக்கை. எடுத்தவுடன் வருத்தம் தெரிவித்து விட்டு விளக்கமளிக்கவேண்டும். அடிபட்டவருக்கு மருந்து, முதலுதவி அப்புறம் தான் ஆலோசனை. இது இங்கு பின்பற்றப்படுவதில்லை. இதை நான் பின்பற்றுகின்றேனா? இல்லையா? உடனே வருத்தத்தை தெரிவிப்பேன். இதுதான் செல்வா தமிழர் பண்பாடு இதை ஏன் அனைவரும் பின்பற்றக்கூடாது. அவருடைய எந்த உள்ளடக்கமும் பயன்படுத்தபடவில்லை முழுமுழுக்க என்னால் எழுதப்பட்ட கட்டுரையை ஒரு அறிவிப்போ, வார்ப்புருவோ, குறிப்போ இல்லாமல் மாற்றுவது ஏற்கனவே சரியாக நடப்பவர்களை கூட திசைதிருப்புவதாகும். இதைத்தான் சிறு எச்சரிக்கை, இது தவிர்க்கப்படவேண்டும் என்று பிறரால் குறிப்பிடபடவேண்டும் என்கின்றேன். அவர் விளக்கம் தான் கொடுக்கின்றார். ஞாயப்படுத்துகின்றார் நானும் ஞாயப்படுத்துகின்றேன். இதுவா மருந்து. யாருக்கு அடிபட்டிருக்கின்றது.--செல்வம் தமிழ் 02:35, 2 ஜூலை 2009 (UTC)

செல்வம் தமிழ், கட்டுரைகளை இணைப்பதற்கு முன் ஒரு சிறு அறிவிப்பு இட்டிருக்கலாம் தான். ஆனால், இடாதது தவறு இல்லை. தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க முடியும். கோபி தான் செய்தது என்ன என்று தெளிவாக விளக்கி இருக்கிறார். கோபியின் விக்கி ஈடுபாடே இது போன்ற விக்கி துப்புரவு, பராமரிப்பு தான். இது போன்ற ஆயிரக்கணக்கான கட்டுரைகளை கடந்த 3 ஆண்டுகளாக ஒழுங்குபடுத்தி வருகிறார். ஒவ்வொரு கட்டுரைக்கும் அறிவிப்பு விட்டுக் கொண்டிருந்தால் அதற்கே பாதி நேரம் போகும். இருக்கும் நேரமும் பங்களிப்புகளும் குறைவாக இருக்கையில், இது போன்ற அறிவிப்புகளுக்கு நேரம் செலவிட வேண்டாமே என்ற ஒரு புரிந்துணர்விலேயே செயல்படுகிறோம். "கட்டுரை களவு", "ஆயிரமவர் பட்டம் வாங்குவதற்காக இப்படி செய்கிறார்", "கடவுள் பார்த்துக் கொள்வார்" போன்றவை எல்லாம் ஆதாரமற்ற கடுமையான குற்றச்சாட்டுகள். இத்தகைய உணர்ச்சிமயமான போக்கைக் கண்டிக்கிறேன். இங்கு ஆயிரமவர் பட்டம் வாங்கி யார் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இங்கு செலவிடும் நேரத்தை அவரவர் தொழிலில் செலவு செய்தால் எவ்வளவோ பன்மடங்காக பொருள் ஈட்டலாம். தயவுசெய்து மற்றவர்களின் விக்கி ஈடுபாட்டைக் கொச்சைப்படுத்தாதீர்கள். வெளியுலகில் விக்கிப்பீடியா மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் சரியான புரிதல் இன்மை, அரசியல், காழ்ப்புணர்வு என்று எவ்வளவோ காரணங்கள் உள்ளன. அவற்றுக்காக விக்கி நடைமுறைகளைத் தலைகீழாக மாற்ற முடியாது.--ரவி 03:19, 2 ஜூலை 2009 (UTC)

ரவி முரண்படுகின்றேன் , கன்க் செய்த நல்ல செயலை அனைவரும் பின்பற்ற வேண்டும் பின்பற்ற முடியாவிட்டால் தவறுதான். தஞ்சை பிரகதீசுவர்ரஃ கோயில் என்று கட்டுரை ஆரம்பிக்கும் பொழுது கனக் உடனே வார்ப்புரு போட்டுத் தடுத்துவிட்டார். நானும் அக்கட்டுரையை எழுதவில்லை. நீக்க சொல்லிவிட்டேன். இன்னொருவர் எழுதிய கட்டுரையை என் பெயருக்கு மாற்றிக் கொள்ளவில்லை. நான் எழுதியதாக தம்பட்டம் அடிக்கவில்லை. கட்டுரை எழுதுவது தனியாக எழுதவேண்டும் என்னுடைய பங்களிப்பு முழுவதும் இருக்கவேண்டும் கட்டுரையாளர் விரும்புவது இதில் எல்லாம் நாம் ஞானியாகிவிட முடியாது அதற்காகத்தான் இரவு, பகல் கண் விழித்து அவரவர் உழைப்பை செலவிடுகின்றனர். வார்ப்புருவுக்கு செலவிடுகின்றனர். இது அவரவர் சுவை, எழுத்தார்வத்தில் உள்ள பற்று, மனநிறைவு சார்ந்த விடயம் இதற்கு கூடவா இங்கு தடை. இதை சொல்லித்தானே விக்கிப்பட்டறையில் பிறரை கவர்கின்றோம். அப்புறம் என்ன? எல்லாவற்றையும் துறக்க ஞானியா, மகானா? நாம் எல்லோரும் அப்படியே நடக்கின்றோமா. அப்படியில்லையென்றால் ஏன் அவர் மாற்றவேண்டும்.

(பிழையிருந்தால் மன்னிக்கவும்) என்று வள்ளுவர் கூறினாரே. அது எல்லோருக்கும் பொருந்தும். தவறு என்றால் தவறுதான். இது தவறில்லை என்பது தான் அதிசயம் இந்த குறைந்தபட்ச நியாயம் கூட இல்லை என்றால் அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள். கட்டுரை எழுத தயங்கத்தான் செய்வார்கள். கட்டுரை எழுத சன்மானமா வாங்கிகின்றார்கள். இல்லையே பிறகு ஏன் நானாயிருந்தால் இதை செய்திருக்கமாட்டேன்.--செல்வம் தமிழ் 03:55, 2 ஜூலை 2009 (UTC)

யாரும் தம்பட்டம் அடிக்கவில்லை, செல்வம். தொடங்கிய கட்டுரைகள் என்பது ஒரு கருவி வாயிலாக வருவது. இதை யாரும் தொகுத்து வைப்பதில்லை, பெரிதாகக் கண்டு கொண்டதுமில்லை. நான் பங்களிக்கத் தொடங்கி வெகு நாட்கள் கழித்து வந்த பயனர்கள் கூட ஆயிரம் கட்டுரைகளைக் கடந்து விட்டிருக்கையில் நான் இருநூறு கட்டுரைகள் கூட எட்டவில்லை. ஆனால் மற்றவர்கள் தொடங்கிய பல நூறு கட்டுரைகளை விரிவுபடுத்தியிருக்கிறேன். கோபியும் மற்றவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். இது நம் கணக்கில் வரவில்லையே என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. கோபி செய்த துப்புரவுப் பணிகளைக் கட்டுரையாக்கத்தில் செலவிட்டிருந்தால் இந்நேரம் அவர்தான் நம் அனைவரைக் காட்டிலும் மிகுதியான கட்டுரைகளை எழுதியிருப்பார். இந்த ஒரு கட்டுரை கணக்கில் வந்தாலும் வராவிட்டாலும் அவருக்கு ஒன்றுமில்லை. நற்கீரன் அமைதியாக ஆண்டுக்கணக்கில் முதல் பக்க இற்றைப்படுத்தலைச் செய்து வந்திருக்கிறார். ரவி கொள்கைகள் வகுப்பதில் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். செல்வா தமிழ்ச் சொல் விளக்கங்களை நூற்றுக் கணக்கான பக்கங்களுக்குத் தந்துள்ளார். கனகு ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகளை உடல்நலம் குன்றிய நிலையிலும் இற்றைப் படுத்தி வந்துள்ளார். இப்படி ஒவ்வொருவரும் பல வழிகளில் பங்காற்றி வந்திருக்கிறோம். ஒருநாளும் எடை போட்டுப் பார்த்ததில்லை. ஆயிரவர் பதக்கம் போன்றவை ஏதோ நாமாக இட்டுக்கொள்ளும் பதக்கம் அல்ல, செல்வா மற்றும் பிற பயனர்கள் வாழ்த்துமுகமாக வழங்கியவை. அதேபோல் எங்களில் எவரெவர் நிருவாகி, அதிகாரி என்பதை நாங்கள் அடிக்கடி நினைவில் கொள்வது கூடக் கிடையாது. அவைத் துப்புரவுப் பணிக்கான மென்பொருள் வசதிகள். கோபி செய்ததை எந்த ஒரு பயனரும் செய்திருக்க முடியும். இங்கு யாரும் நிருவாக அணுக்கத்தைத் தேவையின்றிப் பயன்படுத்துவதில்லை.
இந்தக் கட்டுரையில் உள்ளது முழுக்க முழுக்க நீங்கள் சேர்த்த உரைதான் என்பதற்கு முழுச் சான்று பக்க வரலாற்றில் உள்ளது. அதை யாரும் மாற்றவில்லை, மாற்றவும் முடியாது. இவ்வளவு விளக்கம் அனைவரும் தந்த பிறகும் நீங்கள் மிகத் தவறான, கடுமையான சாடல்களை வைத்துள்ளீர்கள். இதுதான் நீங்கள் கூறும் தமிழர் பண்பாடா? அவர் முறைப்படிதான் செய்துள்ளார் என்று பல முறை விளக்கிய பின்னும் கட்டுரைக் களவு, தம்பட்டம் அடிக்கிறார் என்றெல்லாம் சாடியுள்ளது முறையல்ல. -- சுந்தர் \பேச்சு 04:29, 2 ஜூலை 2009 (UTC)

நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கட்டுரை எழுதுகின்றோம் நீங்கள் பார்க்கவில்லை என்றால் நான் பார்த்திருக்க போகின்றேன். இதுவா பிரச்சினை. கட்டுரையை முன்ன்றிவிப்பாமல் அதுவும் உள்ளடக்கமே இல்லாமல் மாற்றுவது எதை குறிக்கின்றது. இதை தவிர வேறு எதையும் குறிக்காது குறிக்காது. தவறு தான். அந்த தொல்லைகள் வராமல் கனக் செய்கின்றார் அதுதான் சிறப்பு அது பிறர் செய்யாத்து உருவாக்குகின்றது வெறுப்பு.--செல்வம் தமிழ் 04:42, 2 ஜூலை 2009 (UTC)

நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னும் எந்த அளவு மற்றவரின் உழைப்பு இருக்கிறது என்பதை அறிவீரா? எல்லாரும் தத்தம் கட்டுரைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் விக்கி வளர்ந்துவிடாது. நீங்கள் எழுதி விட்டுச் சென்ற பின்னும், அக்கட்டுரையில் உரை திருத்தம், விக்கியாக்கம், வெளியிணைப்புகள் சேர்த்தல், படங்கள் சேர்த்தல், முதற்பக்க காட்சிப்படுத்தல் என்று எவ்வளவோ வேலைகள் உள்ளன.ஆயிரக்கணக்கான படிமங்களை தெரன்சு ஒழுங்கு செய்திருக்கிறார். ஆயிரக்கணக்கான கட்டுரைகளை சிவா உரை திருத்தி இருக்கிறார். எல்லாருமே, தங்களுக்கு ஆர்வமுள்ள கட்டுரைகளில், அவற்றை யார் தொடங்கி இருந்தாலும், வளர்த்து மேம்படுத்தவே செய்கிறார்கள். இதை எல்லாம் எந்தக் கணக்கில் வைக்கலாம்? விக்கியிலும் சரி வெளியிலும் சரி தன்னை முன்னிறுத்திச் செய்வதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. இங்கு யாரும் அப்படி இல்லை.

தொடங்கிய கட்டுரைகள் என்பது தானியங்கியாக கணக்கிடப்படுவது. ஒருவர் இந்த இணைப்பை வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, தான் தொடங்கிய கட்டுரைகளுக்கு எளிதில் திரும்பச் சென்று அவற்றை மேம்படுத்துவதற்காக வைத்திருக்கலாம். இவை தொடங்கிய கட்டுரைகள் தானே தவிர, முழுக்க எழுதிய கட்டுரைகள் இல்லை என்பது அனைத்து விக்கியருக்கும் தெரியும். அப்படி யாரும் ஒரு கட்டுரையை முழுக்க உரிமை கொண்டாட முடியாது. இத்தனை ஆயிரம் தொகுப்புகள் செய்திருக்கிறேன் என்பது கூட பங்களிப்பை அளக்கும் வழி அல்ல. மிகப் பெரிய பங்களிப்பை நல்கிய மயூரனாதன், அதனை மிகவும் குறைவான தொகுப்புகளிலேயே செய்திருக்கிறார்.

நீங்கள் தொடங்கிய கட்டுரைகளை எந்த பலனும் இன்றி மேம்படுத்த பல பங்களிப்பாளர்கள் செயல்படும்போது, குறைந்தபட்சம் அவர்களது செயல்பாடுகளைக் கொச்சைப்படுத்தாதீர்.--ரவி 04:49, 2 ஜூலை 2009 (UTC)


சார்,இதில் கொச்சை எதுவும் இல்லை. இந்த செயல் இனிமேல் கண்டிப்பாக பின்பற்றபடும் இனிமேல் இது நடவாது இன்று உங்களால் உறுதி குடுக்க முடிகின்றதா. அவருக்கு இது தவறு என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளதா. அவரே கூறியிருக்கின்றார் நான் வரலாறு மட்டும் தான் இணைத்துள்ளேன் என்று. எல்லாமே ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது இடையில் வந்து அறிவிப்பில்லாமல் மாற்றியது தவறுதான் உங்களால் உள்ளிட முடியவில்லையே. இதுதான் சுமூக உடன்பாடு. இதுதான் சார்பற்ற நிலையில் அனைவரும் உள்ளனர் என்று தெரியும். இந்த பண்பாடு இருக்க்கூடாதா. இந்த பண்பாடே இல்லை அப்புறம் என்க்கு பண்பாட்டை கற்று கொடுக்கின்றீர்கள். கனக் கூட அவர் உள்ளிட்டிருக்கவேண்டும் என்று தான் கூறியிருக்கின்றார். அதுதான் இங்கு வரவேண்டும். இதுதான் இங்கு பண்பாடு மடக்கி மடக்கி கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றீர்களே. பிறருக்கு நடந்திருந்தால் இப்படித்தான் சார் கருத்து தெரிவிப்பேன். ஏற்கனவே சொல்லிவட்டேன் மாறி மாறி கருத்து தெரிவிப்பதை விட்டு விடுங்கள் என்று. உங்களுக்கு......--செல்வம் தமிழ் 04:57, 2 ஜூலை 2009 (UTC)

அன்புள்ள செல்வம், வரலாறுகளை இணைத்தது எந்தத் தவறும் இல்லை. உண்மையில் அது மிகச் சரியானது. நான் மட்டும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருந்த புள்ளிருக்கு வேளூர் கட்டுரையே நீக்கப்பட்டது என்ற அளவில் எந்த அறிவிப்பும் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள் எழுதப்பட்டால் இரண்டாவது கட்டுரை நீக்கப்பட்டு முதற்கட்டுரையுடன் இணைக்கப்படும். அவ்வாறு நீக்குவதாயின் தான் உரிய வார்ப்புரு இட்டிருக்க வேண்டும். முதற் கட்டுரையை அதன் முதன்மைப் பங்களிப்பாளர் நீக்கினார் என்ற அளவில் இங்கே எந்தத் தவறும் நடக்கவில்லை. இதே போல ஏற்கனவே அடியேன் மூன்று, இரண்டு, ஒன்று, பாதி வரிகளில் எழுதிய கட்டுரைகள் மீண்டும் புதிதாக எழுதப்பட்டால் இரு கட்டுரைகளின் வரலாறுகளையும் ஏற்கனவே செய்ததுபோலவே இணைப்பேன் என அந்த வைத்தீசுவரன்மேல் ஆணையாக உறுதியளிக்கிறேன். நன்றி கோபி 05:29, 2 ஜூலை 2009 (UTC)

நன்றி கோபி இதுதான் வேண்டும்--செல்வம் தமிழ் 05:32, 2 ஜூலை 2009 (UTC)

சரி. அறிவிப்பு விட்டு செய்தால் நன்றாக இருக்கும் என்கிறீர்கள். ஏன் அறிவிப்பு விடாமல் செய்ய நேர்ந்தது என்று விளக்கினோம். இனி இது போன்ற பணிகளைச் செய்வோர் எல்லாரையும் அறிவிப்பு விட வேண்டுவோம். விசயம் முடிந்தது. இனி வருங்காலத்தில் தயவுசெய்து மற்ற பங்களிப்பாளர்களின் பணிகளை நன்னோக்குடன் நட்புடன் அணுக வேண்டுகிறேன். கடும் குற்றச்சாட்டுகளை வீசுவது இணக்கச் சூழலுக்கு உதவாது. விக்கியில் அனைவரையும் பெயர் சொல்லியே அழைக்கும் தோழமை உள்ளது. தயவுசெய்து சார் சார் என்று எழுத வேண்டாம். நன்றி.--ரவி 05:34, 2 ஜூலை 2009 (UTC)

நன்றி ரவி இதுதான் சரியானது. வரலாறாக இருந்தாலும் குறிப்பு அல்லது வார்ப்புரு இட்டு விட்டு செல்வது. அதைத்தொடர்ந்து எழுவது வேண்டாமா? வேண்டுமா? அவர் முடிவெடுத்துக்கொள்வார். ரவி கடைசியாக சொன்னாலும் சரியாக சொன்னார். இதைதான் முதலிருந்து எதிர்பார்த்து. இதை கூறியிருந்தால் இவ்வளவு நீண்ட உரையில்லை. ரவியால் முடிந்தது மிக்க மகிழ்ச்சி. (கோபி கூறியதை ஒத்துக்கொள்ளவில்லை-அவர் உள்ளீடு இதில் இருக்க வேண்டும் என்பதற்காக) இதை தான் வைத்தீசுவரன் ஒத்துக்கொள்வார். சர்ச்சை முடிந்த்து--செல்வம் தமிழ் 06:23, 2 ஜூலை 2009 (UTC)

|Original_name = வைத்தீசுவரன் கோயில்
|proper_name =புள்ளிருக்குவேளூர்<ref name=thevaaramthirumari_1>[http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=218 புள்ளிருக்கு வேளூர்-வைத்தீசுவரன் கோயில் என்று அனைவராலும் வழங்கப்படுகின்றது-தேவாரம் கோயில் வரலாறு இணையத்தளம்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref>
|date_built = 
| name='''புள்ளிருக்குவேளூர்'''
|primary_deity = வைத்தியநாத சுவாமி
| secondary_deity=தையல்நாயகி அம்பாள்
| sacred tree= [[வேம்பு]]
| sacred water= சித்தாமிர்த குளம் 
| devotees =[[முருகர்]], [[சூரியன்]], ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), [[இராமர்]], [[இலட்சுமணன்]], [[அநுமான்]], சடாயு (கழுகரசர்), சம்பாதி, [[பிரம்மன்]], [[சரசுவதி]], [[லட்சுமி]], [[துர்கை]] , [[பரசர்]], [[துருவாசர்]],[[சிவசன்மன்]] முதலியோர். 
|architecture = 
|location = [[சீர்காழி]], [[தமிழ்நாடு]],[[ இந்தியா]]
}}

தலைப்பு மாற்ற கோரிக்கை[தொகு]

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் என்ற தலைப்பிற்கு மாற்றித்தருமாறு வேண்டுகிறேன். வைத்தீஸ்வரன் கோயில் என்பது ஊரின் பெயராகும், வைத்தியநாதர் மூலவர் + கோயில் என்று சிவத்தலங்களுக்கு பொதுமையாக பெயரிடுவதை இங்கும் வழிமொழிகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:54, 29 சூன் 2013 (UTC)[பதில் அளி]

இக்கோவில் இவ்வாறு தான் அழைக்கப்படுகிறதா? குழப்பமாக உள்ளது. நீங்கள் கூறியவாறு பொதுவாகப் பெயரிடுவது நல்லது தான். ஆனாலும், சில விதிவிலக்குகளும் இருக்கலாமே.--Kanags \உரையாடுக 05:07, 29 சூன் 2013 (UTC)[பதில் அளி]
[1] நாகப்பட்டினத்திலுள்ள கோயில்களின் பட்டியலை விளக்கும் தினமலர் கோயில்கள் பக்கத்தினை இணைத்துள்ளேன். அதில் வைத்தீசுவரன் கோயில் அழைகப்பெறுவதைக் காணலாம். தற்கால வழக்கு எனக்கு தெரியவில்லை. ஏதேனும் அடியார்களிடம் செய்தி கிடைத்தால் பதிகிறேன். அத்துடன் இங்கு சீர்காழி என்று தலைப்பிடப்பட்டுள்ளதன் காரணம் தெரியவில்லை. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்று இருமுறை வருவது குழப்பம் ஏற்படுத்தும் என்றால் வைத்தீசுவரன் கோயில் என்று மாற்றலாமே!. தங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:34, 29 சூன் 2013 (UTC)[பதில் அளி]
[2] [3] இணையத்திலும் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோயில் என்றே காணக்கிடைக்கின்றது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:41, 29 சூன் 2013 (UTC)[பதில் அளி]
ஊரின் பெயர் வைத்தீசுவரன்கோவில். தலைப்பு வைத்தீசுவரன்கோவில் வைத்தியநாதர் கோயில் என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:56, 29 சூன் 2013 (UTC)[பதில் அளி]
அவ்வாறே தலைப்பிடலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:43, 29 சூன் 2013 (UTC)[பதில் அளி]

சரியான தலைப்புக்குச் சான்று காட்டி மாற்றப்பட்டுள்ளது. தலைப்பு மாற்றக் குறியீட்டை நீக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 03:19, 18 ஆகத்து 2013 (UTC)[பதில் அளி]