பேச்சு:வேலன்டைன் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காதலர் நாள் என்று மாற்ற பரிந்துரை...தமிழ்நாட்டில் இப்படியல்லவா அறியப்படுகிறது?!!....ஃபமிலி டே என்று இல்லாமல், குடும்ப நாள் என்பதுபோல....--Natkeeran 16:28, 14 பெப்ரவரி 2009 (UTC)

வேலன்டைன் நாள் என்றிருப்பதே பொருத்தம். அதன் பாரம்பரியம், வரலாறு அதன் பெயரிலேயே உள்ளது.--Kanags \உரையாடுக 10:23, 21 நவம்பர் 2011 (UTC)
தமிழ்நாட்டில் காதலர் தனம் / காதலர் நாள் என்றே தமிழில் அழைக்கப்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 10:30, 21 நவம்பர் 2011 (UTC)
வழிமாற்று உள்ளது. (காதலர் நாள், காதலர் தினம்) //வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள்// இக்காரணம்பற்றி இதே பெயர் நீடிக்கக் கோருகிறேன். :)
காதலர் தினம் என்று மாற்ற விருப்பம். -Pitchaimuthu2050 08:59, 14 பெப்ரவரி 2012 (UTC)
காதலர் தினம் என்பதில் "தினம்" என்பது முற்றிலும் தமிழாக இல்லாவிட்டாலும் கூட, தகவல் தேடிவருபவர்களில் அதிகம் பேர் காதலர் தினம் என்றே தேடுவர் என்பதால் வேலன்டைன் நாளை, காதலர் தினம் என மாற்றுவதே பொருத்தமாக இருக்கும். --எஸ்ஸார் 11:34, 14 பெப்ரவரி 2012 (UTC)
நான் கனகு சிறீதரனுடன் ஒப்புகிறேன். இந்நாளின் பாரம்பர்யம், வரலாறு இவற்றை அறியப்படுத்துவதாக அமைய வேண்டும். வழிமாற்று இருப்பதால் காதலர் தினம் என்று தேடுபவர்களுக்கும் கிடைக்கும். --மணியன் 17:40, 14 பெப்ரவரி 2012 (UTC)
மணியன் கருத்துடனும், கனகு சிறீதரன் கருத்துடனும் உடன்படுகின்றேன். வழிமாற்றுகள் இருப்பதால் இக்கட்டுரைக்கு வருவோருக்கு எந்த இடையூறு இராது. --செல்வா 17:50, 14 பெப்ரவரி 2012 (UTC)