பேச்சு:வேதித்தற் செய்கை மாதிரியாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை "வேதிச் செயலாக்கப் போல்மமாக்கல்" (அல்லது வேதிச் செயல்முறைப் போல்மமாக்கல்) என்று மாற்றலாமா? chemical என்னும் முன்னொட்டுக்கு வேதி என்றே எல்லா இடங்களிலும் புழங்க முடியும். வேதித்தல் என்பது வினைச்சொல் போன்ற தோற்றம் தருகிறது. processக்கு செய்கை பொருந்தினாலும், செயல்முறை, செயலாக்கம் போன்றவை இன்னும் பொருத்தமாகவும் பிற இடங்களிலும் பாவனையில் இருக்கும் ஒன்றாகவும் இருக்கும். Model என்பதற்குப் போல்மம் என்று நான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறேன். Model தொடர்பான பல இடங்களில் மாதிரி என்பதை விடப் போல்மம் என்பது எளிதாகப் பாவிக்க முடியும் என நினைக்கிறேன். காட்டு: computer model = கணிப் போல்மம்; mathematical model = கணிதப் போல்மம். ... --இரா.செல்வராசு 14:02, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]