பேச்சு:வேதநாயகம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றியும் பாராட்டுக்களும், agaththiyan.--Ravidreams 12:51, 15 நவம்பர் 2006 (UTC) -- \\இவர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். \\ குளத்தூரின் இணைப்பு சேலம் மாவட்டத்தில் உள்ளதை குறிப்பதாக இருக்கிறது. சற்று கவணியுங்கள்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

சுட்டிக் காட்டியதற்கு, நன்றி. இந்தக் குளத்தூர் எங்கு உள்ளது என்று தெரியாததாலும், ஏகப்பட்ட குளத்தூர்கள் இருப்பதாலும், தற்போது இணைப்பை மட்டும் நீக்கி உள்ளேன்.--இரவி (பேச்சு) 10:59, 2 ஏப்ரல் 2012 (UTC)

தகவற் பிழை?[தொகு]

தொடர்வண்டியில் திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் பிறந்தார் என்று கட்டுரை கூறுகிறது. இவர் பிறந்ததோ 1826இல். ஆனால், 1853லேயே இந்தியாவில் இரயில் போக்குவரத்து வந்ததாக இந்திய இரயில்வே கட்டுரை கூறுகிறது. --இரவி (பேச்சு) 10:59, 2 ஏப்ரல் 2012 (UTC)

செல்வா இத்தகவலை எங்கிருந்து பெற்றார் எனத் தெரியவில்லை. ஆதாரம் இல்லாவிட்டால் குறிப்பிட்ட வரிகளை நீக்கலாம். அல்லது கட்டுரையில் மறைவில் வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:31, 3 ஏப்ரல் 2012 (UTC)

சிறப்புச் சொற்களைத் தவிர்க்க வேண்டாமே?[தொகு]

கட்டுரையில் பாடலை யாத்தார் என்று இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. எளிய தமிழ் என்னும் காரணத்தால் எல்லா சிறப்பான சொற்களையும் பொதுவான சொற்களைக் கொண்டு மாற்றுவது நாளடைவில் அச்சொற்கள் தொலைந்து போக வழி வகுக்கும். இங்கு யாப்பு, யாப்பிலக்கணம் என்ற சொற்களைத் தொடர்புபடுத்தி யாத்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.--இரவி (பேச்சு) 12:08, 2 ஏப்ரல் 2012 (UTC)

பெயர் மாறுபாடு[தொகு]

ஆங்கில விக்கியில் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை என்றிருக்கிறது. உண்மையில் சாமுவேல் என்பது கிறிஸ்துவப் பெயராக தோன்றுகிறது. பின் எப்படி வேதநாயகம் பிள்ளை என்ற அடைமொழியில் இருந்தார் என தெரியவில்லை. சாமுவேல் என்ற பட்டம் ஏதாவது இருக்கிறதா,. என்பதை தெரிந்த நண்பர்கள் கூறவும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:54, 3 ஏப்ரல் 2012 (UTC)

கிறித்தவப் பெற்றோருக்குப் பிறந்தவர். சாமுவேல் என்ற பெயர் சரியாகவே இருக்கலாம். கிறித்தவராகவே வாழ்ந்தாரா என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 10:28, 3 ஏப்ரல் 2012 (UTC)
1800களின் துவக்கத்தில் சிலர் கிறித்தவராக மாறி பெயரை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் இந்து முறைப்படியே வாழ்ந்தார்கள். அது சரி, இந்தத் தலைப்பில் பிள்ளை என்ற சாதிப் பெயர் இருக்கிறதே @Nan:. @செல்வா: தொடக்கிய கட்டுரையில் சாதிப் பெயருடன் எழுதியிருக்கிறார். நான் எழுதிய கட்டுரையில் சாதிப்பெயர் தேவையில்லை என்கிறார். --UKSharma3 01:15, 1 ஏப்ரல் 2017 (UTC)