பேச்சு:வேங்கடசூரி சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீ, ஸ்வாமிகள் - அடைமொழி தேவைதானா? யார் யாருக்கு இந்த அடைமொழி இட்டு அழைக்கலாம் என்று நடைக்கையேட்டில் குறிப்பிடுவது எப்படி? இத்தகைய அடைமொழிகளை எல்லா இடங்களிலும் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். ஊரில் உள்ள போலிச்சாமியார்கள் சிலர், இப்படி விக்கிபீடியாவுக்குள் நுழைவதைத் தடுக்க இது உதவலாம்.--ரவி 14:43, 22 ஜூன் 2006 (UTC)

நானும் இதனை வரவேற்கிறேன். அப்படியே பெருமை, உயர்வு காட்டவேண்டுமெனில், அருள்திரு, மேதகு, உயர்திரு, திகழ்மிகு, ஒளிர்திரு என்று நூற்றுக்கணக்கில் அடைமொழிகள் தரலாம் (கட்டாயத்தேவை இருந்தால் மட்டுமே). ஆயிரக்கணக்கில் இசைப்பாடல்கள் பாடிய ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, இப்படி ஸ்ரீ என்னும் அடைமொழியை புரியாத தனி எழுத்தில் குறிக்க வில்லை. சிரீதரன் என்று ஆழ்வார்கள் குறித்துள்ளார்கள். எனவே அப்படியே குறிக்க வேண்டுமெனில், சிரீ (அல்லது சிறீ ) என்று குறிக்குமாறு வேண்டுகிறேன்.--C.R.Selvakumar 15:46, 22 ஜூன் 2006 (UTC)செல்வா
ஆம். முடிந்தவரை அடைமொழிகளைத் தவிர்க்க வேண்டும். சில இடங்களில், கட்டுரைகளில் மட்டும் குறிப்பிடலாம், தலைப்புகளைத் தவிர்த்து. ஆங்கில விக்கிபீடியாவில் மகாத்மா காந்தி போன்ற வெகுசில தலைப்புகளில் மட்டுமே விதிவிலக்கு அளித்துள்ளனர். இவ்விதிவிலக்கிற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடுவது - "ஒரு நபரோ அல்லது வேறு பெயரோ பெருவாரியாக (ஏறத்தாழ 95%) ஒரு குறிப்பிட்ட அடைமொழியுடன் வழங்கப்பட்டால், அப்பெயரின் ஒரு உறுப்பாகக் கொள்ளலாம்." -- Sundar \பேச்சு 06:35, 23 ஜூன் 2006 (UTC)

அடைமொழிகளை யார்யாருக்கு தருவது என்ற விவாதத்தையே தொடங்கினேன். எனினும், ஸ்ரீ, சிறீ, சிரி, ஆகிய மூன்றையும் பயன்படுத்துவதில் எனக்கு உடன்ப்பாடு தான். இயன்ற அளவு ஸ்ரீயைத் தவிர்க்க முயலலாம். பிற பயனர்கள் அவற்றை விட்டுச் செல்லும்போது செல்வா பரிந்துரைத்துள்ள தமிழ்த் திருப்பெயர்கள் கொண்டு மாற்றலாம். பெயரில் ஸ்ரீ வரும் போது, சிறீ, சிரீ கொண்டு மாற்றலாம். சுந்தர், நீங்கள் குறிப்பிட்டுள்ள 95%-ஐ எப்படி நிர்ணயிப்பது? சீடர்களுக்கு மட்டும் பரிச்சயமான போலிச்சாமியாரை அவருடைய சீடர்கள் 100% ஸ்ரீ சொல்லித் தான் அழைப்பார்கள். இந்த இடத்தில் எப்ப்டித் தீர்மானிப்பது? அல்லது, நீங்கள் குறிப்பிட்ட விழுக்காடு, பிற ஊடகங்களில் அவர் எப்படி குறிப்பிடப்படுகிறார் என்ற அளவா?--ரவி 07:51, 23 ஜூன் 2006 (UTC)

95 என்ற விழுக்காட்டை யாரும் பரிந்துரைக்கவில்லை. நானாக எடுத்துக்காட்டியது. :p இந்த சிக்கலுக்கான தீர்வு, பிற மதிக்கத்தக்க ஊடகங்கள் - பி.பி.சி மற்றும் பன்னாட்டு செய்தி நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள், அரசு வெளியீடுகள் - ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விதத்தை ஒத்து நாமும் பயன்படுத்தலாம். -- Sundar \பேச்சு 08:41, 23 ஜூன் 2006 (UTC)

ஆம். முடிந்தவரை அடைமொழிகளைத் தவிர்க்க வேண்டும். தகவல் செறிவு, அதற்கே முதன்மை. --Natkeeran 14:37, 23 ஜூன் 2006 (UTC)