பேச்சு:வெள்ளி (உலோகம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடினத்தன்மை குறித்து..[தொகு]

தொகுப்பு பேச்சு:வெள்ளி (உலோகம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil தொகுப்பு பேச்சு:வெள்ளி (உலோகம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வெள்ளி தங்கத்தினை விட கடினமானது என்பது சரியா.??? −முன்நிற்கும் கருத்து 60.32.152.82 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மறுமொழி[தொகு]

உங்கள் கேள்விக்கு நன்றி. இக் கட்டுரை இன்னும் விரிவாக எழுதப்படாத ஒன்று. கடினம் என்பது பல்வேறு வழிகளில்/கோணங்களில் உணரப்படுகின்றது. கீழ்க்காணும் ஒப்பீட்டைப் பார்க்கலாம். யங் தகைமை, விக்கர் கடினத்தன்மை அளவீடு முதலியவற்றின்படி வெள்ளி கடினமானது எனக் கூறலாம், ஆனால் பருமத் தகைவின் படி தங்கம் கடினமானது என்று கூறலாம். வெள்ளியும் தங்கமும் கிட்டத்தட்ட ஒரேயளவான கடினத்தன்மை உடைய மாழைகளே (உலோகங்களே). இரும்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் விளங்கும். (ஆங்கில விக்கியில் இருந்து பெற்ற குறிப்புகள்). இங்குள்ள தரவுகள் சரிதானா எனப் பிற நூல்களில் இருந்து பார்த்து ஒப்பிட்டுப் பின்னர் எழுதுகின்றேன்.

இயற்பியல் பண்பு தங்கம் வெள்ளி (உலோகம்) இரும்பு
Young's modulus 78 Gpa  83  GPa 211 GPa
Bulk modulus 220  GPa 100  GPa 170 GPa
Mohs hardness 2.5 2.5 4.0
Vickers hardness 216  MPa 251  MPa 608 MPa
Brinell hardness 24.5 MPa (?) 24.5  MPa 490 MPa

--செல்வா 00:24, 5 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெள்ளி_(உலோகம்)&oldid=192637" இலிருந்து மீள்விக்கப்பட்டது