பேச்சு:வெய்ச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தலைப்பு போன்ற சொற்களில்தான் இடர்ப்பாடு அதிகம். இவ் இவ்விளையாட்டு ஆங்கிலத்தில் Go என்று அழைக்கப்படுகின்றது. தமிழில் நாம் கோ என்று எழுதி Ko என்றே ஒலித்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால், ஒலிக்கும் பொழுது Go என்றும் எழுதும் பொழுது கோ (=Ko) என்றும் எழுதினால், நுட்பமான தமிழ் ஒலிப்பு முறை மழுங்கடிக்கப்படுகின்றது. இக் கருத்தை பல இடங்களில் நாம் சந்தித்திருந்தாலும், புதிதாக வருபவர்களுகேனும் கூற வேண்டியுள்ளது. நாம் கோபால், கோவிந்தன் என்னும் சொற்களில் கேட்டிருக்கின்றோம். இச்சொற்களை KÔbaal என்றோ KÔvindhan என்றோ சொல்பவர்கள் நிறைய பேர் இருந்தாலும், GÔpāl என்றும் GÔvindhan என்று சொல்பவர்கள் இருப்பதால், தமிழ் ஒலிப்பு முறை பாழ்படுகின்றது. இவ்விளையாட்டை ஆங்கில விக்கியில் முதல் சில வரிகளில் கீழ்க்காணுமாறு அறிமுகப்படுத்துகிறார்கள்: Go is a strategic board game for two players. It is known as wéiqí in Chinese (Traditional: 圍棋; Simplified: 围棋), igo (囲碁, igo?) or go (碁, go?) in Japanese, and baduk in Korean (hangul: 바둑). To differentiate it from the common English verb to go, it is sometimes capitalized. An alternate spelling is also used occasionally.[nb 1]

நாம் ஏன் வெய்ச்சி(围棋 wéiqí) என்றோ, இகோ என்றோ கூறலாகாது? கொரிய மொழியில் படுக் என்கிறார்கள். எனவே இதன் தலைப்பை இகோ என்றோ, வெய்ச்சி என்றோ மாற்றலாம் என நினைக்கிறேன். நாம் நமக்குப் புரியுமாறு கார்வெள்ளை (கார் = கறுப்பு) என்றுகூடக் கூறலாம். எ.கா: வெய்ச்சி என்றும் இகோ என்றும் அழைக்கப்படும் கார்வெள்ளை ஆட்டம், கறுப்பு, வெள்ளை சிறு வட்டக் காய்களைக் கொண்டு 19x19 கட்டங்கள் அல்லது 13x13, 9x9 ஆகிய கட்டங்கள் அடங்கிய பலகையில் வைத்து ஆடும் ஆட்டம். --செல்வா 16:03, 13 டிசம்பர் 2008 (UTC)

இது சீனாவில் தோற்றம் பெற்றதால் தலைப்பை "வெய்ச்சி" என்றே வைத்துக்கொள்ளலாம். கட்டுரையில் பிற மொழிப் பெயர்களையும் குறிப்பிடலாம். மயூரநாதன் 16:54, 13 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெய்ச்சி&oldid=317741" இலிருந்து மீள்விக்கப்பட்டது