பேச்சு:வெப் மாஸ்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை எழுதும் புதியவரின் முயற்சியை பாராட்டுவோம், மகிழ்வோம். முதலில் நாமும் இப்படியே இருந்தோம் என்பதை அறிவேன். நீக்கல் வார்ப்புரு இடுவதில் எனக்கு கொஞ்சமும் மனமில்லை. முதல் முயற்சியை குலைக்கும் நோக்கமாகிவிடுமே. இருப்பினும், சில நேரங்களில் இவற்றை கண்கானிக்க மறந்து விடுவோம். தேங்கி விடுமே என்று பயந்தே இவ்வாறு செய்ய நேர்ந்தது:-( தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:36, 8 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில், முற்று முழுதாக ஆங்கிலத்தில் இடும் கட்டுரைகளுக்கு மட்டும் தமிழாக்கம் தேவை வார்ப்புரு இடலாம். தமிங்கிலக் கலப்புடைய கட்டுரைகளைத் திருத்த முனைவோம். வேண்டுமானால், இதற்கு ஒரு தகுந்த வார்ப்புரு உருவாக்கலாம். தலைப்பை மாற்றுக வார்ப்புரு இடும்போது பேச்சுப் பக்கத்தில் மாற்றுத் தலைப்பை இட வேண்டும். அல்லது, ஏன் தலைப்பை மாற்ற வேண்டும் என்று விளக்குவது நன்று. இந்தக் கட்டுரைக்கு நீக்கல் வார்ப்புரு இட்டிருக்கத் தேவை இல்லை. வேண்டுமானால், வார்ப்புரு:தரமுயர்த்து இடலாம். விக்கி தரக் கண்காணிப்பு தேவை தான். ஆனால், அது புதியவர்களைக் குழப்பாத வகையில் இருப்பது நன்று.--இரவி (பேச்சு) 12:07, 8 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
புரிந்து கொண்டேன். தரமுயர்த்து என்னும் வார்ப்புரு எனக்கு புதிது. multiple issues என்பதற்கான வார்ப்புரு என்ன?:-) தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 8 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]


தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

webmaster என்றால் வலை மேலாளர், வலை நிர்வாகி, வலை அணுக்கர் எனப் பொருள் கொள்ளலாம். இவற்றில் ஏதாவதொன்றிற்கு கட்டுரையை நகர்த்தலாமா?--தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:55, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெப்_மாஸ்டர்&oldid=1267765" இலிருந்து மீள்விக்கப்பட்டது