பேச்சு:வெந்நீரூற்று

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெந்நீரூற்று

பாக்டீரிய வகைகளைப் பற்றி படித்துக் கொண்டு இருந்த போது, இக்கட்டுரையைக் கண்டேன். மகிழ்ச்சி. ஒரு எண்ணமொன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாதெனில், படத்தில் காட்டிய படி அனைத்து ஊற்றுகளும், உயிரிகளுக்கு பயன்படும் வகையில், வெந்நீராக இருப்பதில்லையே. வெந்நீர் என்ற சொல், ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கும் கொதிநீரையே குறிக்கிறது. வெந்நீரின் வெப்பம் அதிகமாக இருக்கக் கூடிய சூழ்நிலையிலுள்ள நீரை, நாம் வெந்நீர் அழைப்பதில்லேயே. கொதிகலன், கொதிநிலை, கொதிபண்பு என்றே பலசொற்களுக்குச் பெயர் சூட்டியுள்ளனர். உங்கள் கருத்தறிய ஆவல் --≈ உழவன் ( கூறுக ) 09:06, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]

கொதி நீர் என்றால் நீர் கொதிக்கும் நிலை. அஃதாவது கொதிக்கும் நீர். 100 பாகை செல்சியசில் கொதிக்கத் தொடங்குகிறது. பொதுவாக நாம் வெந்நீர் என்று கூறுகையில், கொதிநிலையை அடைந்தாலும் அடையாவிட்டாலும் வெப்பமான நீரைக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலும் கொதி நிலையை எட்டாதனவாகவே வெந்நீரூற்றுக்கள் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 10:08, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]
நான் நேரில் பார்த்ததில்லை. பல காட்சிவானொலி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன். இங்குள்ள படத்தின் சுற்றுச்சூழல், அடர்பனியாகவே இருக்கிறது. சாதரண வெப்பநீர், அப்பனியில் நீராகவே இருக்காது என்றே எண்ணுகிறேன். கொதிநிலையில் கீழிருந்து வரும் நீர், மேலேவரும்போது, அப்பனியால் பயன்படுத்துவதற்கு ஒப்ப மாறிவிடுகிறது என்பதே இயற்பியல் நிலை. மேலும், ஒரு கொதிகலனில் நீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கொதித்தாலும், கொதிக்காவிட்டாலும் அதன் பெயர் கொதிகலனே. அது தாங்கும் இயல்பைப்பொறுத்தே, அப்பெயரைப் பெறுகிறது. அதுபோலவே, இங்கு மேலே உள்ள நீரின் இயல்பு எப்படி இருப்பினும், அது கொதிநிலையிலேயே(எரிமலையிலேயே) உருவாகிறது என்பதால் அப்பெயரை எண்ணினேன்.--≈ உழவன் ( கூறுக ) 13:35, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெந்நீரூற்று&oldid=1458555" இலிருந்து மீள்விக்கப்பட்டது