பேச்சு:வெண்கலக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg வெண்கலக் காலம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

வெண்கலமா அல்லது வெங்கலமா இலங்கை வழக்கு வெண்கலம் என எழுதுவது.செல்வா சரிபார்க்க--கலாநிதி 17:24, 23 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ்நாட்டிலும், வெண்கலம் என்றே பொதுவில் கூறுகிறார்கள். அறிவியல் புத்தகங்கிலும் அப்படியே இருக்கிறது. மயூரனாதன் ஏதேனும் காரணத்தோடு எழுதி இருப்பாரோ? இல்லை இது bronze age இல்லையா?--Ravidreams 19:58, 23 பெப்ரவரி 2007 (UTC)

கலத்தின் வண்ணம் குறிப்பதாக இருப்பின் = "வெண்கலம்" கலம் செய்யப்பட்ட உலோகம் பற்றியதாயின் = "வெங்கலம்"

அப்படித்தான் நானும் படித்ததாக ஞாபகம். அதனால் தான் வெங்கலக் காலம் என்று தலைப்புக் கொடுத்தேன். ஆனால் கலாநிதியின் கேள்வி எழுந்தபோது அகராதிகளில் தேடிப் பார்த்தேன். வெங்கலம் என்பதற்குச் சார்பாகப் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. மதராஸ் தமிழ் அகராதியிலும், வெண்கலத்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதனால் வெண்கலக் காலம் என்று மாற்றினேன். இது பற்றி மேலும் ஆதாரங்கள் இருந்தால் அறிய ஆவல். Mayooranathan 04:37, 16 மார்ச் 2007 (UTC)

கழக அகராதி: வெங்கலம் = சுடுகையுள்ள பாத்திரம்.
வெண்கலம் =செம்பும் வெள்ளீயமும் சேர்ந்த உலோகம்.
சூடாமணி நிகண்டு பக்-117 - வெண்கலம்= கஞ்சம், உறை.
அபிதான சிந்தாமணி பக்-1498 = வெங்கலம்.

ஆக, சுடுகையுள்ள பாத்திரத்திற்கும் உலோகத்திற்கும் "வெங்கலம்" என புழங்குவோமே!--ஞானவெட்டியான் 05:16, 16 மார்ச் 2007 (UTC)