பேச்சு:வீ. கே. சமரநாயக்க

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"43 வருட காலப் பகுதியில் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் கணணிக் கல்லூரியின் நிறுவுனராகவும் இதன் இயக்குனராகவும் பணி புரிந்தார்." என்பது 43 வருடகாலமாகவே கணினிக் கல்லூரி இலங்கையில் இருப்பதைப் பொன்ற ஓர் மயக்கத்தை உண்டுபண்ணுகின்றது. இவர் சென்ற ஆண்டு மைக்ரோசாப்ட் TecEd 2006 இல் கலந்துகொண்டு பேசுகையில் சிங்கள மொழிக்கு மைக்ரோசாப்ட் ஆதரவளித்து பற்றிக் கருத்துதெரிவித்தபோதும் தமிழ் ஆதரவு பற்றி மூச்சுக்கூட விடவில்லை. இவர் தமிழர்களிடையே பிரபலமானவரா? இப்படியானவர்களின் கட்டுரை ஏன் தமிழ் விக்கிபீடியாவில் இருக்கவேண்டும். --Umapathy (உமாபதி) 16:13, 30 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

உமாபதி, "43 வருட காலப் பகுதியில் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் கணணிக் கல்லூரியின் நிறுவுனராகவும் இதன் இயக்குனராகவும் பணி புரிந்தார்" என்பது சரியான சொற்றொடரே. வேண்டுமானால் "இவர் தனது.." என்பதை தொடக்கத்தில் சேர்க்கலாம். மற்றும், தமிழர்களிடையே பிரபலமானவர்கள் பற்றி மட்டும் தான் தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா? கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திலோ அல்லது கணினிக்கல்லூரியிலோ தமிழர்கள் எவரும் கல்வி பயிலவில்லையா?--Kanags 21:10, 30 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
ஆம் சிறீதர் அண்ணா, தவறு என்னுடையது கட்டுரை அவசியமானதும் நிச்சயாமாக இருக்கவேண்டிய ஒன்றே. --Umapathy (உமாபதி) 06:07, 31 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீ._கே._சமரநாயக்க&oldid=179338" இலிருந்து மீள்விக்கப்பட்டது