பேச்சு:வீரமாமுனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரைப்பக்கத்திலிருந்த கருத்துக்கள்[தொகு]

எனினும் இன்றைய கிறித்துவத் தமிழ் தனக்கென ஒரு வகை முறைமையை வகுத்துக் கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒரு வகைத் தமிழைக் கொண்டிருப்பது குறித்துக் கிறித்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிறித்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து. (Vmt164 - கருத்து)

ஆங்கில பெயர் தவறு[தொகு]

Father Constantine Joesph Beschi தவறு . Costanzo_Giuseppe_Beschi என்பதே சரி. ஆதாரங்கள்

மூல பெயரையிடுதலே சால சிறந்தத முறையாகும்

இதில் இவரது காலம் பிழையாக தரப்பட்டுள்ளது[தொகு]

--Natkeeran 16:23, 1 பெப்ரவரி 2009 (UTC)

வீரமாமுனிவர் இறந்த ஆண்டும் இடமும்[தொகு]

தமிழ்க்குரிசில், வீரமாமுனிவர் மணப்பாட்டில் இறந்ததாக தினமலர் செய்தி உள்ளதாக நீங்கள் குறிப்பிட்டிருந்ததை மாற்றியிருக்கிறேன். வீரமாமுனிவரைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் ஆய்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் என்னும் அறிஞரின் கூற்றே வரலாற்று அடிப்படையில் அமைந்துள்ளதால் அதை இக்கட்டுரையில் மேற்கோள் காட்டி, நூல் குறிப்பும் பக்கமும் கொடுத்துள்ளேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 23:11, 18 ஆகத்து 2013 (UTC)

தொகுத்த நூல்களின் பட்டியல் ஐயத்துக்கிடமானது.[தொகு]

// திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் [2] //

என்ற மேற்கோள் சுட்டி விகடனை மேற்கோள் காட்டுகிறது. இது ஐயத்துக்கிடமானது. வலுவான சான்றுகள் இல்லாவிடில் இது நீக்கப்பட வேண்டும். வீரமாமுனிவர் இவை அனைத்தையும் கற்று அனைத்தையுமே மொழிபெயர்த்திருப்பார் என்பது நம்பத்தக்கதல்ல. அதற்கான வேறு சான்றுகள் இதுவரை தேடியதில் கிடைக்கவில்லை.

-- பயனர்: KaNiJan2

மலையாள எழுத்து சீர்திருத்தம்[தொகு]

வீரமாமுனிவர் தமிழை போல மலையாளத்திலும் எழுத்து சீர்திருத்தம் செய்ததாக தெரிகின்றது உண்மையா? உண்மை என்றால் இங்கு குறிப்பிடவா? "ே" இரட்டை சுழி கொம்பை உருவாக்கியது வீரமாமுனிவர் என்றால் எப்படி மலையாளத்திலும் உள்ளது? சதீஸ் (பேச்சு) 15:05, 25 அக்டோபர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீரமாமுனிவர்&oldid=2591710" இருந்து மீள்விக்கப்பட்டது