பேச்சு:வீரப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீரப்பனை அவன், இவன் என்று குறிப்பதை மாற்றி அவர், இவர் என்று எழுதி இருக்கிறேன். எல்லா மனிதர்களையும் மதிப்புடனேயே எழுதுவதை ஒரு விக்கிப்பீடியா கொள்கையாகவே பின்பற்ற பரிந்துரைக்கிறேன். (மன்னர்கள், கவிஞர்கள் போன்றோரை நேர்மறையாக இப்படி அவன், இவன் என்று எழுதுவதுண்டு. அது வேறு. அது ஏற்புடையதே)--ரவி 22:13, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

தலைப்பினைக் கூட வீரப்பனார் என்று மாற்றுதல் நன்றாக இருக்கும்.

\\வீரப்பன் (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.\\

ஒரு சார்பு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அது கூட விரிவாக இல்லை. நண்பர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். விரைவில் இந்தப் பக்கம் வெகுவாக சீர்தூக்கப்பட்டு வீரப்பன் என்ற மாமனிதனின் சரித்திரம் சொல்வதாக மாறும். நடிகர் ராஜ் குமார் கடத்தல், சில கொலைகள் என்று எதிர்மறை விமர்சனம் தவிர்த்துப் பார்த்தால் பெயருக்கேற்ற வீரம் கொண்டவன் என்பது புலப்படும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகன் அவர்களே விரும்பி பார்த்த வீரப்பனின் கேசட்,. வீரப்பனின் தமிழ்ப் பற்று இப்படி நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

இப்போது கட்டுரையில் சிலவற்றை இணைத்துள்ளேன். முழுவதுமாக எழுதும் முன்னரே இக்கட்டுரையைப் பார்க்கும் பல நண்பர்கள் வீரப்பனை பற்றி தவறாக எண்ணாமல் இருக்க அது உதவும்.

இன்னும் என்ன என்ன சேர்க்க வேண்டும் என நண்பர்கள் கூறவும்.

அதையும் புறக்கணிக்காமல் எழுதவும்.

- அன்புடன்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:07, 3 ஏப்ரல் 2012 (UTC)

சற்று செம்மை செய்தமைக்கு மிக்க நன்றி. கட்டுரை இன்னும் ஒழுங்கு நிலைக்கு வரவில்லை என்பது வருத்தமே. இருந்தும் நக்கீரன் கோபால் அவர்கள் வீரப்பனுடன் இருந்த காலக்கட்டங்களை யுத்தம் என்ற தொடராக எழுதினார். அதை இணையத்தில் கிடைக்கிறது..

http://shockan.blogspot.in/2010/06/58.html

வலைப்பூ இணைப்பினை கொடுக்க வரன்முறை செய்யப்படாதாக அறிந்தேன். ஆனால் இது அவசியமானதாக தெரிகிறது. இணைக்கலாமா..

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:07, 3 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ் நாட்டின் சில பகுதிகளில் வீரப்பனுக்குச் சிலை வைத்து வழிபடப்படுவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா?--பாஹிம் (பேச்சு) 03:03, 8 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீரப்பன்&oldid=2828425" இருந்து மீள்விக்கப்பட்டது