உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரா வி.கே,

  • Range என்பதற்கு மிக அருமையான பழம் கலைச்சொல் தமிழில் உண்டு. வீச்சு என்பது மிக நல்ல சொல், உடனே புரியும் சொல்லும் கூட. என்றாலும், இந்த பழம் கலைச்சொல்லைப் பற்றி இங்கு கூறுவது பொருந்தும். ஓர் அம்பை எய்தால் அது சென்று விழும் தொலைவைத் தமிழில் ஏப்பாடு. தமிழில் அம்புக்கு என்று பெயர். எய்யும் தொழிலுக்கும் என்று பெயர். ஏப்பாடு என்பது Range. இச்சொல் பல அறிவியல் துறைக் கருத்துக்களுக்குப் பொருந்தி வருவது. வீச்சு என்னும் சொல்லை மாற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. தொடர்புடைய கருத்தைப் பகிர்வதே (பிற இடங்களில் பயன்படலாம்) என் நோக்கம்.
  • Associated என்பதற்கு "தோழமைப்படுத்தப்பட்ட" என்று நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். இங்கே "உறவுற்ற", "உறவான", "தொடர்புற்ற", "தொடர்புடைய" முதலியனவற்றுள் ஏதேனும் ஒன்று கூடிய பொருத்தம் உடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். --செல்வா 17:10, 18 ஜூலை 2007 (UTC)

Start a discussion about வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு

Start a discussion