பேச்சு:வி. எஸ். குமார் ஆனந்தன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பில் வரும் ஆழிக்குமரன் என்ற அடைமொழி நீக்கப்பட வேண்டும். இவரது பெயரில் மட்டும் தலைப்பு அமைவது தான் வழமை.--டெரன்ஸ் \பேச்சு 01:28, 1 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

டெரன்ஸ், நீங்கள் சொல்வது "பொது"வாகப் பொருந்தும். ஆனாலும், ஆனந்தன் என்ற தலைப்பு அவ்வளவு பொருத்தமாக இல்லை. இது ஒரு பொதுவான பெயர். ஆனந்தன் (ஆழிக்குமரன்) என்று பெயர் வைக்கலாம். அதைவிட இப்போதுள்ள தலைப்பு பொருத்தமாக இருக்கும். இவர் எப்போதும் ஆழிக்குமரன் ஆனந்தன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். வெளி இணைப்புக் கட்டுரையைப் பாருங்கள். இவருடைய முழுப் பெயர் தெரிந்தால் அப்பெயரில் தலைப்பு வைக்கலாம்.--01:37, 1 செப்டெம்பர் 2007 (UTC)
கனக்ஸ் இக்கட்ட்டுரை கட்டாயமாக தலைப்பு மாற்றப்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் சொல்வது போல "இவர் எப்போதும் ஆழிக்குமரன் ஆனந்தன் என்றே அழைக்கப்பட்டு வந்தார்" என்பது ஏற்கக்கூடிய ஒன்றல்ல. இப்படி அழைக்கப்பட்ட பலரின் கட்டுரைகளை அவர்களின் சொந்தப் பெயரில் ஆக்கப்பட்டுள்ளதைக் கவணிக்கவும். (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) ஆழிக்குமரன் ஒருவகையில் கேணல், மகாகவி, பரமாத்மா..... போன்ற ஒரு பட்டப் பெயர் தானே. இவரது முழுப்பெயர் அறியப்பட்டு தலைப்பு மாற்றப்பட வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 03:24, 1 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]