பேச்சு:விண்வெளி விமானம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமானம் போல் இது மீண்டும் தரையைத் தொடும் அமைப்பாகையால், விண்வெளி விமானம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விண்ணோடம் என்பது spaceship ஐக் குறிக்கும் என்றே எண்ணுகிறேன். பிறர் கருத்தையும் கேட்போம். உங்கள் கருத்துக்கு நன்றி கனகு. --பரிதிமதி 21:32, 01 ஆகஸ்ட் 2009 [IST]

என் பரிந்துரை விண்ணூர்தி. கடலில் ஓடுவது கடல்நீரோடம், விண்ணில் ஓடுவது விண்ணோடம். விண்ணோடம் என்பதை விண்ணூர்தி/விண்வெளி விமானத்துக்கும் கூறலாம். மரக்கலம் என்பது கடல்நீரில் ஓடும் முற்கால கடல்நீரூர்தி. விண்கலம் என்பது விண்ணில் செல்லும்/செலுத்தப்படும் கலம். வேறு எங்கோ விக்கியில் சிவக்குமாருடன் உரையாடும்பொழுது ஊர்தி என்னும் சொல் பற்றியும் உரையாடிய நினைவு. இன்னும் ஒன்று தமிழில் விமானம் என்னும் சொல் கோயிலின் உயர்ந்த மேற்பகுதியைக் குறிக்கும். வானூர்தி, விண்ணூர்தி, கடலூர்தி, நீருள்ளூர்தி முதலான சொற்கள் இன்னும் பெருவழக்காக வேண்டிய பொருத்தமான சொற்கள். --செல்வா 16:36, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
நான் கூறிய உரையாடல் பேச்சு:சிலெட் நாய் என்னும் பக்கத்தில் உள்ளது.--செல்வா 17:03, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
வானூர்தி எனப்படுவது பொதுவாக வானில் பறக்கும் அனைத்து ஊர்திகளையும் குறிக்கலாம். அதுபோல விண்ணூர்தி என்றால் விண்ணில் பறக்கும் அனைத்து ஊர்திகளையும் குறிக்கலாம் என்பது என் கருத்து. space shuttle என்பதற்கு விண்ணோடம் பொருத்தமாக இருக்கும்.--Kanags \பேச்சு 04:41, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விண்வெளி_விமானம்&oldid=411994" இலிருந்து மீள்விக்கப்பட்டது