பேச்சு:விசையுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோட்டர்பைக்கு என்பதில் உள்ள மோட்டர் என்பதை நேரடியாக விசை என்று பெயர்த்தது போல் தெரிகின்றது. மோட்டர்பைக்கு, இசுக்கூட்டர், மோப்படு, மிதிவண்டி, போன்ற பல வகையான உந்துகளும் இரண்டு ஆழிகள் (சில்லுகள், சக்கரங்கள்) கொண்ட்ருந்ததலும், தமிழில் கூறுவதாயின் சிறிது வேறுபடுத்திக் கூறலாம். மோட்டர்பைக்கு என்பதைச் சிலர் ஈருருளி என்கின்றனர், ஆனால் ஈருந்து என்றும் சொல்லலாம் (ஈராழியுந்து என்பதன் சுருக்கம்). இசுக்கூட்டர் என்பதை சிட்டீருந்து என்றும், மோப்படு என்பதை மெல்லீருந்து (அல்லது மெல்லுந்து) என்றும் சொல்லலாம். சிட்டீருந்து என்பதைச் சிட்டுந்து என்று சுருக்கிவிடலாம். சிட்டெனப் பறந்தான் என்பது போல இசுக்கூட்டர் என்பது சட்டென்று ஏறி சென்று வருவதைக் குறிக்கும். எனவே சிட்டுந்து. மோட்டர்பைக்கை மட்டும் ஈருந்து எனலாம். அதிலும் விரைவோட்ட தானுந்துகளை வீறுந்து என்பது போல, விரைந்து வீறும் ஈருந்துகளை வீறி எனலாம். அல்லது துணிவு இருந்தால் துணவு எனலாம் (துணவு = விரைவு). "அவன் அந்த வீறியில் போவதைப் பார்த்துத் திகைத்தேன்" எனலாம். --செல்வா (பேச்சு) 14:23, 1 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசையுந்து&oldid=1040229" இருந்து மீள்விக்கப்பட்டது