பேச்சு:விசிய மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஜி மொழிப் பெயர்கள்[தொகு]

பிஜிய மொழியில் உள்ள இடப் பெயர்களையும், ஆள் பெயர்களையும் எப்படி எழுத வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளை கீழே காணவும்.

பிஜிய மொழி, லத்தீன் எழுத்துகளை பயன்படுத்துகிறது. இருந்தபோதும், ஆங்கில உச்சரிப்பு படி எழுத்துப்பெயர்ப்பு செய்து எழுதுவது பிழையாக அமையும்.

கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.

B - ’ம்ப’ ஒலி (கம்பு என்ற சொல்லில் உள்ளது போல்)
எ.கா: bula - ம்புலா, ba - ம்பா
C - மென்மையான ’த’ ஒலி (மதம்)
D - ’ண்ட’ (பண்டம்)
Dr - ’ன்ற/ண்ட்ர’ (பன்றி)
G - ’ங்’ (அங்ஙனம்)
Q - ’ங்க’ (பங்கு)
e - எ
i - இ
o - ஓ
u - ஊ

மேலும், இந்த மொழியில் பதிவான ஒலிகளை கிடைத்தாலும் பகிரவும். fricative, glottal உள்ளிட்ட வேறுபாடுகளை தெளிவாக விளக்கினால், இந்த மொழியின் ஒலிகளை புரிந்துகொள்ள முடியும். மற்றைய எழுத்துகளையும், எழுத்துக்கூட்டல்களையும் அறிய உதவும். செல்வாவின் கவனத்திற்கு. தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:22, 29 சூலை 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசிய_மொழி&oldid=1698592" இலிருந்து மீள்விக்கப்பட்டது