பேச்சு:விக்கிமேப்பியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிமேப்பியா என்றே தலைப்பை வைக்கலாமே? mapமேப் என்றே தமிழ்நாட்டில் பலுக்குகிறார்கள்--ரவி 15:44, 15 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி தங்களின் விருப்பதிற்கு அமைவாகப் பக்கமானது வழிமாற்றப் பட்டுள்ளது எனினும் இலங்கையில் Map மப் என்றவாறே அழைப்பதால் இதன் வழிமாற்றுப் பக்கத்தை நீக்கவேண்டாம். இது புதிய கட்டுரை இதே பெயரில் உருவாகுவதைத் தடுக்கும்.--Umapathy 14:54, 17 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

உமாபதி, இலங்கை வழக்கா தமிழ்நாட்டு வழக்கா என்பதைக் காட்டிலும் ஆங்கிலச் சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பு எது என்று கருதலாம். மேப் என்பது ஆங்கில உச்சரிப்புக்கு சற்று நெருக்கமானது. (ஆங்கில சொல்லை நினைக்காமல் வெறும் மேப் என்பதை தமிழ் முறைப்படி சொன்னால் உச்சரிப்பு மாறும் என்பது நாம் அறிந்தது தான்.) வழிமாற்றுப் பக்கம் நிச்சயம் இருக்கட்டும். அண்மைய இணைய, கணினி, தொலைத் தொடர்புத் தொழில்நுட்பங்கள் குறித்து நீங்கள் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது கண்டு மகிழ்கிறேன். ஆர்குட் (orkut) பற்றியும் ஒரு கட்டுரை எழுதுவீர்களா?--ரவி 18:30, 17 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிடிரான்சின் மொழிபெயர்ப்பு[தொகு]

Wikitrans, நீங்கள் ஏற்கனவே எழுதிய கட்டுரையை (தமிழ்) விக்கி நடைக்கேற்ப திருத்தியிருந்தேன். நீங்கள் மீளவும் அதனை இட்டுள்ளீர்கள். எனவே இக்கட்டுரையை முபிருந்த நிலைக்கு மீள்வித்திருக்கிறேன். உங்களது கட்டுரையில் எதையும் நான் மாற்றவில்லை. ஆனாலும் சில ஆங்கில விக்கியிடை இணைப்புளை மட்டும் நீக்கியுள்ளேன். அவை தேவையற்றது. நன்றாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.--Kanags \பேச்சு 13:30, 12 ஜூன் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விக்கிமேப்பியா&oldid=389926" இலிருந்து மீள்விக்கப்பட்டது