பேச்சு:வாழை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
வாழை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஓங்குக தமிழ் வளம் ! [தொகு]

வாழை - நான் முதன்முதலாக அதிக நேரம் எடுத்துக்கொண்டு, இவ்விக்கிப்பீடியாவில் படங்களுக்காகத் தொகுத்தக் கட்டுரை இதுவே. இக்கட்டுரையை இன்றே முதன்மைப்பக்கத்தில் பார்த்தது, மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. 'விக்கி' என்றால் 'விரைவு' என்பர். உண்மையிலேயே விரைவுதான். அனைத்து நிர்வாகிகளுக்கும், என் உளமார்ந்த நன்றி.

த* உழவன் 12:37, 14 ஜூலை 2009 (UTC)

தகவல் உழவன், அருள்கூர்ந்து "ஓங்குக தமிழ் வளம்" போன்ற வாசகங்களை நீங்கள் மறுமொழி தரும் இடங்களில் (விக்கியில்) இட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கத்தில் இடுங்கள். தமிழ் மொழிபால் நம் அனைவருக்குமே ஈடுபாடு இருக்கும், தமிழ் வளரவேண்டும், ஓங்க வேண்டும் என்றே நாமும் நினைக்கின்றோம். எதோ பரப்புரை என்று பிறர் நினைக்க வாய்ப்பு ஏற்படும். உங்கள் கருத்துடன் ஒத்த கருத்துடையேன் ஆயினும் இவ்வேண்டுகோளை தமிழ் விக்கிப்பீடியாவின் நலன் கருதி விடுக்கின்றேன். --செல்வா 13:23, 14 ஜூலை 2009 (UTC)

வாழையின் உறுப்புகள்[தொகு]

என் சிறுவயது நினைவுகளின் அடிப்படையிலும் பள்ளிக்கூட அறிவின்படியும் வாழையின் உறுப்புகள் பகுதியை எழுதியுள்ளேன். தகவல்களைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆங்கில விக்கிக் கட்டுரையில் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் இல்லை. விளக்கப்படம் ஒன்றை இணைத்தால் மிக நன்றாக இருக்கும். இந்தப் படத்தைத் தரும்படிக் கேட்டுக் கொணடுள்ளேன். கிடைத்தால் தமிழாக்கம் செய்து கட்டுரையில் சேர்க்க வேணடும். -- சுந்தர் \பேச்சு 08:18, 19 ஜூலை 2009 (UTC)

bananas , plantains[தொகு]

bananas , plantains தமிழில் இவை வேறு படுத்தி காட்டப்படுகிறதா?--Terrance \பேச்சு 01:17, 18 ஆகஸ்ட் 2009 (UTC)

இல்லை என்றுதான் நினைக்கின்றேன். banana என்பது அமெரிக்க வழக்கம், plantain என்பது பழைய பிரித்தானிய வழக்கம் (இன்று பலருக்கும் இவ் ஆங்கிலச்சொல் விளங்காமல் கூட இருக்கலாம்). --செல்வா 02:18, 18 ஆகஸ்ட் 2009 (UTC)

பழுக்க வைத்தல் என்கிற தலைப்பை கனிய வைத்தல் அல்லது கனியாக்குதல் என்கிற சொல்லை ஆளலாமா?

-- மகிழ்நன் 15:56, 26 ஆகஸ்ட் 2009 (UTC)

வாழை வகைகள்[தொகு]

மொந்தன் பழம் என்பதைத்தான் பேயன் என்று கன்யாகுமரி மாவட்டத்திலும் நாட்டு வாழை என்று தூத்துக்குடி திருநெல்வேலி பகுதிகளிலும் வழங்குவர்.

ஆங்கிலத்தில் cavendish என்று அழைக்கப்படும் வாழை பழ வகைதான் தமிழில் பெங்களூர் பச்சை வாழைப்பழம் என்கிறோமா ?

எனது ஊர் தூத்துக்குடி. நான் வாழும் பகுதிகளில் கடைகளிலும் மற்ற பொது இடங்களிலும் மக்கள் ரஸ்தாளி வகை பழத்தை கோழிக்கூடு(கோலிக்கூடு என்பதே சரி ஏனென்றால் தென் தமிழக மக்கள் சிறப்பு ழகரத்தை பொதுவாக உச்சரிப்பது இல்லை) என்றே வழங்குகின்றனர். --Cangaran 13:55, 4 சனவரி 2012 (UTC)[பதிலளி]


பேச்சு:பெங்களூரு வாழை உரையாடல்[தொகு]

Cavendish banana என்பதற்கேற்ப பெயரிடப்படல் வேண்டும். --~AntanO4task (பேச்சு) 09:45, 1 ஏப்ரல் 2017 (UTC)

மஞ்சள் வாழை(பல குறு இரக பழங்களுக்கும் இப்பெயர் பரவலாக பயன்படுத்துவர், இரசுத்தாளி, பூவன்..), பி.டி. வாழை(பி.டி. என்பது துண்ணுயிர் அது இதில் இல்லை.) சிலர் எனவும் அழைப்பர்.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பெரியகடைகளில்(super market) இவ்விதமாகவே விற்கப்படுகிறது. .சான்று:. மேலும், யூடிப் தேடு சாளரத்தில் // கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் | BioScope// எனத்தேடி, 5நிமிட நிகழ்படத்தைக் காணவும். (ஒரு யூடிப் தொடுப்பை அளிக்கும் போது, எரிதம் எனக்கூறி சேமிக்க இயலவில்லை. அதனால் இங்கு உரிய தொடுப்பை தர இயலவில்லை. https://www.ADD.com/watch?v=D_kB8JiyfVI) (replace ADD=youtube)இலங்கையில் இவ்விதமான பழங்களுக்கு ஏதேனும் தமிழ் பெயர் இருப்பின் அதையே வைத்து விடலாம். இல்லையேல் என்ன பெயர் வைக்க வேண்டும் என பரிந்துரைத்தால் சிறப்பு.--உழவன் (உரை) 03:09, 2 ஏப்ரல் 2017 (UTC)
கவன்டிஸ் வாழை என அழைக்கப்படுகிறது. இதுவே சரியான பெயராகவும் உள்ளது. --~AntanO4task (பேச்சு) 03:21, 2 ஏப்ரல் 2017 (UTC)
ஆங்கில ஒலிப்பெயர் வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழக சூழ்நிலையில் ஏற்கனவே பெங்களூரு தக்காளி மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. இப்பெயரும் வளர்ந்து வருகிறது. இச்சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வு கட்டுரையாக இதனை அமைக்க முயலுகிறேன். ஆங்கிலப் பெயருக்கு வழிமாற்று வைக்க விருப்பம்.உழவன் (உரை) 06:26, 2 ஏப்ரல் 2017 (UTC)
பெங்களூரு வாழை என்ற பெயர் எங்கிருந்து வந்தது? மேலும், கவன்டிஸ் வாழை என்பது வணிகப் பெயராக கவன்டிஸ் என்பவரின் பெயரல் இருந்து கிடைத்தது. அதற்கு எப்படி பெங்களூரு என்ற பெயரை இடலாம். --~AntanO4task (பேச்சு) 08:15, 2 ஏப்ரல் 2017 (UTC)

வாழை - வாழைப்பழம் இருவேறு கட்டுரைகள் உள்ளன. இவை சரியான ஆங்கில பக்கங்களுடன் தான் இணைக்கப்பட்டுள்ளனவா? --சத்தியராஜ் (பேச்சு) 14:54, 22 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாழை&oldid=3663797" இலிருந்து மீள்விக்கப்பட்டது