பேச்சு:வாயுப் பரிமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png வாயுப் பரிமாற்றம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இப்பொழுது இருக்கும் வரிகள்:

வாயுப் பரிமாற்றம் என்பது நுரையீரலின் ஒரு முக்கிய பணியாகும். இது காற்றில் உள்ள பிராணவாயுவை இரத்தத்தில் சேர்ப்பதும் இரத்தத்தில் உள்ள கரியமிலவாயுவை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதுமாகும்.

கீழ்க்காணுமாறு மாற்றலாமா?

தலைப்பு: வளிமப் பறிமாற்றம்

வளிமப் பரிமாற்றம் என்பது பொதுவாக உயிரினங்கள் தம் உடலுக்கு வெளியே இருக்கும் காற்றிலிருந்து தம் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத வளிமப் பொருளை உள்வாங்கி, தம் உடலில் இருந்து உண்டாகும் கழிவுப்பொருளாய் உள்ள வளிமத்தை வெளியேற்றும் ஒரு அடிப்படை நிகழ்வு ஆகும். இது ஒரு கண்ணறை (ஒரு செல்) உயிரினம் முதல் மாந்தன் வரையிலும் எல்லா உயிரினங்களிலும் நிகழ்கின்றது. எளிய உயிரினங்களாகிய ஒற்றைக் கண்ணறை (ஒரு செல் கொண்ட) உயிரினங்களில், இவ்வளிமப் பரிமாற்றமானது கண்ணறையைச் சூழ்ந்திருக்கும் ஊடுருவும் தன்மையுடைய மென்படலம் வழியாகவே நிகழ்கின்றது. ஆனால் மாந்தன் (மனிதன்), மற்றும் பிற பாலூட்டி விலங்குகளில் இந்த வளிமப் பரிமாற்றம் நிகழத் தனி உறுப்புகள் உள்ளன. மாந்தர்கள் மூச்சை உள் வாங்கும் பொழுது, வெளியில் இருந்து காற்றணுக்கள் மூக்கின் வழியாக நுழைந்து, மூச்சுக்குழாய் வழியாக மார்புப் பகுதியில் உள்ள நுரையீரல்கள் என்னும் பகுதியை அடைகின்றன. அங்கே மிக நுண்ணிய காற்றுப்பைகளில் உள்வாங்கிய காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வளிமம் மெல்லிய அழுத்த வேறுபாடால் ஈர்க்கப் படுகின்றது. நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் காற்றழுத்தம் சற்றுக் குறைவாக இருக்கும். வெளியே இருக்கும் காற்றழுத்தம் 760 மில்லி மீட்டர் அளவு பாதரச உயரமானால், அதில் ஆக்ஸிஜனின் பகுதியழுத்தம் (pO2) 160 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். ஆனால் நுரையீரலின் நுண்ணறையில் ஆக்ஸிஜனின் பகுதியழுத்தம் 100 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். எனவே உள்ளிழுக்கப்பட்ட காற்றிலுள்ள ஆக்ஸிஜனனது நுரையீரலின் நுண்ணறையை ஒட்டிக்கொண்டு ஓடும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்களில் குழாய்ச்சுவர் வழியாக ஊடுருவி இரத்ததில் கலக்கின்றன. அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது. பின்னர் மூச்சை வெளி விடும்பொழுது இந்த கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படுகின்றது. இப்படி ஆக்ஸிஜனை ஏற்றுக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவது வளிமப்பரிமாற்றம் எனப்படும். (இன்னும் சற்று விரித்தும் படங்கள் சேர்த்தும் விரிவாக்கலாம்) --C.R.Selvakumar 01:11, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா

செல்வா, உரை நன்று. இதையே பயன்படுத்தலாம். cellக்கு தற்பொழுது கலம் என்று விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முன் செல், திசுள் என்றும் பயன்படுத்தினோம். இப்பொழுது கண்ணறை என்ற சொல்லை நீங்கள் ஆண்டிருக்கிறீர்கள். மிக அடிப்படையான உயிரியல் கலைச்சொற்களைக் கூட நாம் (தமிழர்கள்) இறுதி செய்யாமல் இருக்கிறது கவலை அளிக்கிறது--ரவி 06:30, 7 அக்டோபர் 2006 (UTC)

அத்துடன் ஒக்ஸிஜனுக்கு பிராணவாயு என்றும் கார்பன்-டை-ஒக்ஸைட் கரியமிலவாயு என்றும் பயன்படுத்துங்கள்.--Kanags 09:32, 7 அக்டோபர் 2006 (UTC)

ரவி, கனகு: கண்ணறை என்னும் சொல் cell என்பதற்கு 1930-1950களில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வரும் சொல். கண்ணறை என்றால் மிகச் சிறிய அறை என்று பொருள். கழகத்தமிழ் அகராதியிலே (1974 ஆம் ஆண்டுப் பதிப்பு), பக்கம் 270 பார்க்க. இதன் முதல் பதிப்பு 1964. 2002ஆம் அண்டுப் பதிப்பாகிய 17ஆவது பதிப்பில் பக்கம் 273ல் பார்க்க. அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி (1997 ஆம் ஆண்டுப் பதிப்பு) அதில் பக்கம் 111ல் cell என்பதற்கு கண்ணறை என்று கொடுக்கப்பட்டுளது. Tamil Lexicon னில் பக்கம் 187ல் கண்ணறைத்தசை என்பதற்கு Cellular tissue என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் (சிறு)வழக்கில் உள்ள சொற்கள். எனவே உறுதி செய்யப்படாத சொல் என்பது சரியில்லை. செல் என்பதையே ஆளுவதிலும் எனக்கு உடன்பாடே. கலம் என்பது எங்கிருந்து வந்தது என்பதை அறியேன். கலம் திசுள் எல்லாம் நல்ல சொற்கள்தாம் (திசு தமிழ்ச்சொல்லா என அறியேன்), ஆனால் செல் என்னும் சொல்லையோ, கண்ணறை என்னும் சொல்லையோ நான் பரிந்துரைக்கிறேன். கலம் என்னும் சொல் cell என்னும் மின்கலத்தை வேண்டுமென்றால் குறிக்கலாம். கண்ணறைக்கு வேண்டாம் என்பது என் கருத்து. செல் என்பது ஆங்கிலவழி பெற்ற சொல்லாய் இருந்தாலும், தமிழ்வழி நல்ல பொருத்தமான பொருள் உண்டு. செல் என்பது செல்லுவது (இயங்குவது), (உடல் இயக்கத்தை செலுத்துவது (இயக்குவது)) என்னும் பொருளும் தரும். சொல்வது சொல் என்பது போல், வில்லுவது வில் (வில் என்னும் ஏவலானது வெளியேற்று, கொண்டு பற்றச்செய் என்று பொருள் தரும்; வில் என்றால் sell, இதிலிருந்து தான் விற்றல், விற்பனை என்பன வந்தன - கல்-கற்றல் என்பது போல). எனவே செல் என்றே சொல்லலாம். செல் என்பது ஆங்கில வழக்கைத் தழுவித்தான் கொண்டோம் என்று தெளிவாகவும் எழுதி வைக்கலாம், ஆனால், தமிழ்வழி எங்களுக்குப் பொருள் தருவதால் தமிழ்ச்சொல்லாக ஆளுகிறோம் எனலாம். மற்ற கருத்தாகிய பிராணவாயு, கரியமில வாயு என்பதெலாம் வேண்டும் என்று சொன்னால், உயிர்வளி வேண்டும் (உயிர்வளி இருக்கையில் ஏன் பிராணவாயு??), கரிம-ஈருயிர்வளி-வளிமம் வேண்டும் என்று சொல்வோர் இருப்பர். உயிர்வளி, கரிமக்காடி வளிமம் அல்லது கரியமில வளிமம், கரிப்புளிம வளி என்பதை ஆளலாம். வளிமம் என்னும் சொல் பல வகையிலும் வளம் கூட்டும் சொல். வாயு என்பதைவிட வளிமம் என்பதே நல்ல சொல். வாயு வடமொழி (தமிழ்ச்சொல் இல்லை என்றதனால் ஏற்பதில் மறுப்பு இல்லை, ஆனால் தமிழ்ச்சொல்லை விலக்கி வடமொழிச்சொல்லை ஏற்பதை வேண்டாம் என்கிறேன்). நாமே நம் மொழியை விலக்கினால், யாரைய்யா நம் மொழியை காப்பர். மொழிப்பற்றினால் மட்டும் கூறவில்லை, பல்வேறு வழிகளிலே சொற்கள் வளர வாய்ப்பு தரும். அருள்கூர்ந்து தமிழை விலக்காதீர்கள் !!--C.R.Selvakumar 13:48, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா

செல்வா, கலம் என்ற சொல்ல மயூரன் தான் தமிழ் விக்கிபீடியாவில் முதலில் ஆண்டார். ஒருவேளை இலங்கை பாடப்புத்தகங்களில் இவ்வழக்கு இருக்கலாம். கண்ணறை வேண்டாம் என்று சொல்லவில்லை. எனக்குப் புதிதாக இருந்ததால் கேட்டேன். அவ்வளவுதான். தமிழகப் பாடப் புத்தகங்களில் இன்னும் செல் என்று தான் குறிப்பிடுகிறார்கள். தமிழ் ஒலிப்புக்கு ஒத்து பொருளும் நீங்கள் குறிப்பிடுவது போல் ஒத்து வருவதால் அதையும் பயன்படுத்தலாம். உங்கள் அனைத்துக் கருத்துக்களுடனும் உடன்படுகிறேன். எதை பயன்படுத்தினாலும் நிலையாக அனைத்துக்கட்டுரைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதே விருப்பம். இல்லாவிட்டால், குழப்பம் வரும். கணினிக் கலைச்சொற்களை இறுதி செய்ய உலகலாளவிய குழுக்கள் இருப்பது போல் அனைத்துத் துறைகளுக்கும் குழுக்கள் உருவாக்க வேண்டும். இது குறித்த கருத்துக்களை பல முறை விக்கிபீடியாவிலேயே பதிவு செய்து அயர்ந்து விட்டேன் :( இன்னொரு நாள் இது போன்ற பழைய உரையாடல்களை தனிப்பக்கத்தில் தொகுத்துத் தருகிறேன். எப்பொழுதும் உங்கள் விளக்கங்கள் தெளிவூட்டுவனவாக அமைவதில் மகிழ்கிறேன். அதனாலேயே, நீங்கள் ஊருக்குப் போனால் பல பேர் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள் :)--ரவி 16:42, 7 அக்டோபர் 2006 (UTC)

தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்தும் வேளையில் புழக்கத்தில் உள்ள சொற்களையும் உடன் உபயோகித்தால் குழப்பம் குறையும் என்பது என் கருத்து. புருனோ மஸ்கரனாஸ் 02:04, 9 அக்டோபர் 2006 (UTC)
ஆமாம், கலம் இலங்கையில் பாடப்புத்தகங்களில் பயன்படுத்துகின்றார்கள் (கலம், கலச்சுவர், கலமென்சவ்வு ...). --Natkeeran 02:28, 9 அக்டோபர் 2006 (UTC)

செல்வா, ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைட் போன்ற ஆங்கிலச் சொற்களைப் பாவிக்கலாம் என்றால் வடமொழி கலந்த தமிழ்ச்சொற்களைப் பாவிப்பதில் என்ன நட்டம்?--Kanags 02:33, 9 அக்டோபர் 2006 (UTC)

கனகு oxygen, CO2 என்பவை பொது அறிவியல் சொற்கள். O, C, என்பவை இலக்கங்கள் போன்றவை. இவற்றை தமிழ்ப்படுத்துவது நேர அறிவு விரயம். --Natkeeran 02:44, 9 அக்டோபர் 2006 (UTC)

கனகு, என் கருத்து என்னவென்றால், நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும் (ஏன் என்று பல இடங்களிலே விளக்கியிருக்கின்றேன்), சில இடங்களில் அறிவியல் பொது மொழியாக பயன்படுவதால் வேதியியல் கலைச்சொற்கள் போன்றவற்றை அப்படியே எடுத்து ஆள வேண்டும், வேறு சில இடங்களில் சிறந்த அல்லது பொருத்தமான தமிழ்ச்சொற்கள் இல்லாத விடத்து பிறமொழிச்சொற்களை (வடமொழி உட்பட) எடுத்தாளலாம். தமிழகத்தில் தமிழ் மொழியின் வரலாற்றைப் பார்த்தீர்களானால் (கடந்த 50 ஆண்டுகளாக), தமிழ் மொழி வடமொழி-பிறமொழித் தாக்கங்களில் இருந்து விடுபட்டு வளர்ந்துள்ளது என்று அறிவீர்கள். வடமொழியை வலிந்து புகுத்தியும், மிகுதியுமாகப் பயன்படுத்தும் பலரும் கூட நல்ல தமிழ்ச்சொற்களை ஆளுகின்றனர். ஏன் எனில், அவை வலுவாக தமிழர் உள்ளத்திலே பாய்வதால். நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கையில் தமிழ்ச்சொற்களை விலக்கி வடமொழி, மற்றும் பிற மொழிச்சொற்களை ஏன் ஆளவேண்டும்? பிறமொழி தாக்கங்களினால் தமிழ்ச்சொற்கள் எவ்வாறு வழக்கு குன்றியும் அழிவுற்றும் வந்தன, இர்ன்றும் வருகின்றன என்பதை அறியும் யாரும் நட்டம் என்ன என்பதை அறிவர். வாயு என்னும் சொல்லை ஆளுவதால் வளி, வளிமம் என்னும் சொற்களின் வழக்கு குன்றுகின்றன (இன்று சூறாவளி முதலிய ஓரிரு சொற்களில் ஒட்டிக்கொண்டிருப்பதோடு சரி). பிராண வாயு எனில் ஒரு சொல்லும் அதில் தமிழ் இல்லை. கரியமில வாயு எனில் கரி ஒன்றுதான் தமிழ், அமிலம், வாயு தமிழில்லை. தமிழ் மொழி கோயில்களிலும், அறமன்றங்களிலும், இசை மன்றங்களிலும், ஆட்சித் துறைகளிலும், ஏன் கல்வி நிறுவனங்களிலும், திருமணம், இறந்தார் வழிபாடு போன்ற மரபுவழி முறைச் சடங்குகளிலும் இல்லாமலும், மிக அருகியும் வழக்கில் இருந்து வருகின்றது. தமிழ் எத்தனையும் பின் தள்ளப்படுகின்றது என்றும், தமிழ் எத்தனையும் வளமான திறமான மொழியும், வாழ வேண்டிய மொழியும் என்று உணர்ந்தால் தமிழர்கள் தமிழை போற்றுவார்கள். இவைகளை விளக்கினால் மிக விரியும். --C.R.Selvakumar 03:34, 9 அக்டோபர் 2006 (UTC)செல்வா

ஆக்ஸிஜன் vs பிராணவாயு[தொகு]

ஆக்ஸிஜன் என்பதற்கு பிராணவாயு என்ற சொல் தமிழில் உள்ளதென்பதும் கார்பன்-டை-ஆக்ஸைடு என்பதற்கு கரியமிலவாயு என்ற சொல் தமிழில் உள்ளதென்பதும் தமிழ்வழி மூலம் கல்வி பயிலாத எனக்கே தெரிகிறது. எனவே இது போன்ற சொற்களை தமிழிலேயே பயன் படுத்தலாம் என்பது என் கருத்து. இது போன்ற சமயங்களில் தமிழ் சொல்லை அடுத்து அதே பொருள் தரும் பிற சொற்களையும் பயன்படுத்தலாம்.

இது குறித்து பிற பயணர்களின் கருத்தை அறிய ஆர்வமாக இருக்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் 02:27, 10 அக்டோபர் 2006 (UTC)

இந்த குறுங்கட்டுரையிலேயே 7 இடங்களில் பிராண வாயு என்றும் 5 இடங்களிலே கரியமில வாயு என்றும் ஆளப்பட்டுள்ளது. பிராண வாயு என்பதற்கு பதிலாக உயிர்வளி என்று பயன்படுத்தினால் உயிர் என்ற சொல்லும் வளி என்ற சொல்லும் வலுப்பெறும். ஆக்ஸிஜன் என்று பயன் படுத்தினால் அறிவியல் உலகத்தோடு பொதுச்சொல் நெருக்கமாவது ஏற்படும். உயர்நலம் கருதாது, வெறும் குறுங்காலப் புழக்கத்தை (அதுவும் தமிழ் வளர்சியைக் கெடுக்கும் புழக்கத்தை) வலியுறுத்துவது சரியில்லை என்பது என் கருத்து. ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கான், புரோமின் போன்ற வேதியற்சொற்களை அப்படியே ஆளுவதுதான் சிறந்தது. வேறு சொற்கள் ஆளவேண்டுமெனிலும், நல்ல தமிழ்ச்சொற்களை ஆள வேண்டும். உயிர்வளி என்றால் உயிரினம் ஆகிய சொற்களில் உள்ள உயிர் என்னும் சொற்பகுத்திக்கு வளம் சேர்க்கும், சூறாவளி என்றும், தொல்காப்பியர், திருவள்ளுவர், மற்றும் பிற்காலச் சித்தர்கள் ஆண்ட வளி என்னும் சொல்லும் வலுப்பெறும். புருனோ அவர்களும் பிற பயனர்களும், உயர்நலம் எது என்று உணர்ந்து செயல்படுவது நல்லது. There is an intricate and subtle linguo-ecology in languages and it is importantant to strengthen the connections and not weaken the connections. இதனை நான் பல முறை எடுத்தியம்பி உள்ளேன். --C.R.Selvakumar 12:29, 10 அக்டோபர் 2006 (UTC)செல்வா
உயிர்வளி என்ற சொல் விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படுவதால் ஓரளவேனும் வலுப்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. இங்கே நான் குறிப்பிட்டிருந்த விருப்பத்தேர்வு ச்சுழல்களில் ஆக்சிஜன் என்பது இத்துறையில் கல்வி பயின்றவர்களுக்கு எளிதில் புலப்படும் என்ற அடிப்படையில் சிறிது மதிப்பெண் பெறும். ஆனால், துறைக்கல்வி எதுவும் பெறாத தமிழர்க்கு ஆக்சிஜன், பிராண வாயு இரண்டுமே அறிமுகமிலாமலிருக்க வாய்ப்புண்டு. இந்த சூழலில் உயிர்வளி என்ற நல்ல தமிழ்ச்சொல்லை நாம் ஆளுவதில் அவர்களுக்கு குறைவில்லை, அச்சொல்லின் பயன்பாடும் வலுப்பெறும் (செல்வா கூறியதைப் போல). துறைக் கல்வி பெற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் முதல் வரியில் மாற்றுச் சொற்களாம் ஆக்சிஜன் மற்றும் பிராண வாயு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். வழிமாற்றுப் பக்கங்களும் தேவை. இதன்மூலம் தேடுபொறி மூலம் வருபவர்களுக்கும் துணைபுரியும். -- Sundar \பேச்சு 13:12, 10 அக்டோபர் 2006 (UTC)
செல்வா, சுந்தர் மற்றும் புரூனோமஸ்கரனாதாஸிற்கு, எனது கருத்துப் படி ஆக்சிஜன் கூடுதலாகப் பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்.
கூகிள் தேடல் முடிவுகள்
ஆக்ஸிஜனே கூடுதல் தேடல் முடிவுகளைக் காட்டுகின்றன. நாம் கட்டுரைகளில் ஆக்ஸிஜன் என்றே ஆரம்பித்து ஏனையவற்றிற்கு வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கலாம். இலங்கையில் ஆக்ஸிஜனை ஒட்சிசன் என்றவாறு அழைக்கின்றார்கள் இதற்கும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கலாம். இவ்வாறே காபன்டையொக்சைட்டை காபனீரொட்சைட்டாகப் பாவிக்கின்றார்கள்.இதில் ஈர் என்பது இரண்டு என்வாறு வருவதால் ஓரளவு விளக்கத்தைத் தந்தாலும் காபன்டையொக்சைட்டையே கட்டுரையாகப் பாவித்து ஏனையவற்றிற்கு வழிமாற்றுப் பக்கங்கள் அமைக்கலாம். ஆங்கில் வழியொற்றிய தமிழை நாங்கள் பாவிப்பதால் பிற்காலத்தில் தமிழ்மொழியில் கற்கும் மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத்தில் கற்கும்போது சிரமங்கள் குறைவாகவரும். உசாத்துணைகளை கூகிளில் தேடினால் கிட்டிய சரியான சொல்லைப் பாவித்தால் அவர்கள் வேண்டிய கட்டுரைகளையும் பெறலாம். தவிரக் கட்டுரையிலேயே இது இவ்வாறும் அழைக்கப் படுவதாக் கூறலாம். கணினி தொடர்பான கட்டுரைகளில் வர்த்தகப் பெயர்களை அவ்வாறே தமிழில் அழைக்கின்றோம் இதையே மூலகங்களுக்கும் (elements) பின்பற்றலாம் எனப்பரிந்துரைக்கின்றேன்.--Umapathy 15:26, 10 அக்டோபர் 2006 (UTC)

நைட்ரஜன், ஆர்கான், புரோமின் ஆகிய சொற்களுக்கு அனைவரும் அறிந்த தமிழ் சொல் இல்லை. ஆனால் பிராணவாயு என்ற சொல் பரவலாக (பத்திரிகைகளில்) பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஒரு தமிழ் சொல் பரவலாக புழக்கத்தில் உள்ள போது, ஆக்ஸிஜன் என்ற சொல்லை முதன்மைப்படுத்த வேண்டுமா என்பதே என் கேள்வி. யூரேனியம், டெக்னிஷியம் ஆகிய சொற்களை அப்பிடியே பயன்படுத்துவதில் எனக்கு சம்மதமே. ஆனால் கரியமிலவாயு என்பதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து புருனோ மஸ்கரனாஸ் 16:53, 10 அக்டோபர் 2006 (UTC)

"பிராண" என்பது பிற மொழி சொல்லோ புருனோ மஸ்கரனாஸ் 02:15, 12 அக்டோபர் 2006 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்தக் கட்டுரையின் தலைப்பை வளிமப் பரிமாற்றம் என மாற்றலாமா?--கலை (பேச்சு) 13:47, 11 சனவரி 2013 (UTC)