பேச்சு:வானூர்தி நிலையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல ஆர்வமூட்டும் தகவல்கள், பாண்டியன்! --செல்வா 21:14, 16 மார்ச் 2009 (UTC)

நன்றி செல்வா. குறும்பாக சொல்லுவது போல் இருந்தாலும் தாங்கள் செல்லுவதால் என்க்கு மகிழ்ச்சியே :) ! --Daniel pandian 21:17, 16 மார்ச் 2009 (UTC)

இல்லை, இல்லை. மிகவும் பயனுடைய பட்டியல். பல நாடுகளில் பிரான்சு, இங்கிலாந்தை விட கூடுதலான எண்ணிக்கையில் வானூர்தி நிலையங்கள் இருப்பதைப் பார்த்து வியந்தேன். மிகவும் பயன் தரும், ஆர்வம் ஊட்டும் பட்டியல். வானூர்தி நிலைய எண்ணிக்கையை எப்படி அடைந்தார்கள் என்னும் குறிப்பும் கிடைத்தால் சேர்க்கலாம். அதாவது கணக்கில் எடுத்துக்கொள்ள எவ்வளவு பெரிய வானூர்தி நிலையமாக இருக்க வேண்டும். பயிற்சி அளிக்க சிறு வானூர்திகள் மட்டும் ஏற-இறங்க வசதி பெற்றவையும் இவற்றில் அடங்குமா எனத் தெரியவில்லை. குறும்பாக சொல்லவில்லை! நன்றி.--செல்வா 21:25, 16 மார்ச் 2009 (UTC)

செயல்படாத வானூர்தி நிலையங்கள், பயிற்சி வானூர்தி நிலையங்கள், இராணுவ வானூர்தி நிலையங்கள் இதில் அடக்கம் என்று நினைக்கிறேன். இலத்தீன் அமெரிக்காவின் ஏழை நாடான பொலிவியாவில் 1061 வானூர்தி நிலையங்கள், நம்ப முடியவில்லை. தனியார் நிறுவனங்களின் உலங்கு வானூர்தி நிலையங்களும் இதில் அடக்கமோ? --குறும்பன் 15:09, 17 மார்ச் 2009 (UTC)