பேச்சு:வாசித்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், இக்கட்டுரை வளருமாயின் பயன் தரலாம், ஆனால் இப்படிப்பட்ட குறுங்கட்டுரைகளால் என்ன பயன் என்று விளங்கவில்லை. பல மொழிகள் எழுத்து வடிவம் பெறாமல் உள்ளன, அவர்களால் படிக்க இயலாது. எழுத்தின் வரலாறு, படிப்பின் வரலாறு என்று எழுதினால் எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் ஊட்டமான கருத்துக்கள் இருக்கும் என நினைக்கிறேன். அல்லது படிப்பதின் வேகம் (மனிக்கு எத்தனை பக்கம் படிக்கிறார்கள் சராசரியாக), படிக்கும் புத்தகங்களின் மொத்த விற்பனை (ஒரு மக்கள் தொகை படிக்கும் மொத்த பக்கங்களின்) இப்படி ஏதேனும் புதிய செய்திகள் இருந்தால் கட்டுரை பயனுடையதாக இருக்கும்.--செல்வா 03:32, 10 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

செல்வா, நான் எழுதும் குறுங்கட்டுரைகள் பொதுவாக மூன்று வரைப்படும்.

  1. வரயறைகள் - இவை பிற பயனர்களும் மேம்படுத்துவர் என்ற எதிர்பார்ப்போடு ஆக்கப்படுவை.
  2. முக்கிய தலைப்புகள் - இவையும் பொதுவாக மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்போடு ஆக்கப்படுவை.
  3. குறுங் குறுங் கட்டுரைகள் - இவற்றை நானே பெருமாலும் மேம்படுதவேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுப்புக்குள்தான் ஆக்குவேன். பின்னர் விரிக்க முடியாவிடில் ஒரு கட்டுரைக்குள் தகவல்களைச் சேர்த்து விடுவேன்.

இருப்பினும் இவை ஆரோக்கியமான முன்மாதிரி இல்லை. இனி சற்று அவதானத்துடன் நடந்து கொள்கிறேன். நன்றி. --Natkeeran 22:38, 10 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன், இப்பொழுது நாம் 12,000 கட்டுரைகளை நெருங்கிவிட்டோம் என்று தோன்றினாலும், நம் முயற்சி பிற இந்திய துணைக்கண்ட மொழிகளை ஒப்பிடும்பொழுது வேண்டுமானால் சிறிதளவு முன்னணியில் இருப்பது போல் தோன்றுகின்றது. ஆனால் உண்மையில் தமிழ் விக்கியின் நிலைமை அப்படி உயர்வாக இல்லை. தமிழில் வெறும் 46 கட்டுரைகளே 16 கிலோ பைட்டைத் தாண்டி இருப்பதுபோல் தெரிகின்றது. கனடா, தமிழ் போன்ற மிகமிகச்சில கட்டுரைகளைத்தவிர மிகப்பெரும்பாலான கட்டுரைகள் (95.8%) 4 கிலோ 'பைட்டுக்கும் குறைவாக உள்ளன! அதாவது 487 கட்டுரைகள்தாம் 4 கிலோ 'பைட்டைத் தாண்டியுள்ளன!! கருத்துச் செறிவைப் பார்த்தால் இன்னும் குறைவான மதிப்பே தர இயலும். 25.2% கட்டுரைகள் 512 'பைட்டுக்கும் குறைவாக உள்ளன. எனவே, பைட் அளவைத்தாண்டி, நாம் கருத்துச் செறிவு உள்ளவற்றை ஆக்கவேண்டும் என்னும் என் நினைப்பைப் பகிர்ந்துகொள்ளுகிறேன். தவறாக நினைக்காதீர்கள். பங்களிப்பவர்கள் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். --செல்வா 03:28, 11 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாசித்தல்&oldid=172894" இலிருந்து மீள்விக்கப்பட்டது