பேச்சு:வாகைத் திணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திணை ஐந்து தான். ஆனால், ஏதோ ஒரு திணையில் ஒரு கூறாக இப்படி வாகைப்பூ அணிந்து கொண்டாடுவது உண்மை தான். ஆதாரம் தேவை இல்லை. பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கணத்தில் படித்த நினைவு. கட்டுரைத் தலைப்பு தேவையானால் மாற்ற வேண்டும். கட்டுரையை நீக்க வேண்டாம், கோபி. விரிவாக்க முடியாவிட்டால் பொருத்தமான கட்டுரையில் இணைத்து விடுவோம்--Ravidreams 22:34, 26 நவம்பர் 2006 (UTC)

திணை என்பது பிரிவு என்பதுதான். நீங்கள் குறிப்பிடும் ஐந்து, நிலத்திணைகள், அதாவது நிலப் பிரிவுகள். வேறு வகையான பிரிவுகளையும் திணைகள் என்று அழைப்பதுண்டு. (உயர் திணை, அஃறிணை). தமிழ் இலக்கியத்திலே தமிழர் வாழ்வியல் அகத்திணை, புறத்திணை என இரண்டாகப் பார்க்கப்படுகின்றது.
அகத்திணையானது, கைக்கிளைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பெருந்திணை என ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புறத்திணையும், வெட்சித்திணை, வஞ்சித்திணை, உழிஞைத்திணை, தும்பைத்திணை, வாகைத்திணை, காஞ்சித்திணை, பாடாண்திணை என ஏழாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இப் புறத்திணைகளில் ஒன்றே வாகைத்திணை ஆகும். போர்க்களத்தில் வெற்றியை வாகைப்பூச்சூடிக் கொண்டாடுதல் பழந்தமிழர் மரபு. வெற்றிவாகை சூடுதல் என்று சொல்வதைக் கேள்விப்படதில்லையா? அதுதான் இது. போர்களத்தின் வெற்றிச் செய்திகளைக் குறித்த பாடல்கள் இலக்கியத்தில் வாகைத் திணையுள் அடக்கப்படுகின்றன. Mayooranathan 17:57, 27 நவம்பர் 2006 (UTC)

மயூரனாதன், மறந்து போன புறத்திணை இலக்கணத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி. நீங்களே இத்தகவல்களோடு இன்னும் சிலவும் சேர்த்து கட்டுரைப் பக்கத்தில் இடுவீர்களா? வெற்றி வாகை என்று சொல்வது இதனோடு இணைத்து தான் என்பதை நன்கு அறிவேன். பழந்தமிழ் சொற்கள் நம்மை அறியாமல் இன்றும் புழக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி தான்--Ravidreams 23:05, 27 நவம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாகைத்_திணை&oldid=85380" இருந்து மீள்விக்கப்பட்டது