பேச்சு:வளிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg வளிமம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இது gas என்பதற்கு இணையாணதா? தெரிந்தால் ஆங்கில இணைப்பு கொடுக்கலாம். --சிவகுமார் 13:55, 6 ஜூலை 2006 (UTC)

வளி என்றால் காற்று (சூறாவளி என்பது போல). வளிமம் என்றால் காற்றுபோன்ற வடிவுடைய பொருள் எனவே gas தான். இதே போல நீர் -> நீர்மம் (liquid). பாய்மம் = fluid.--C.R.Selvakumar 14:03, 6 ஜூலை 2006 (UTC)செல்வா
நன்றி செல்வா! --சிவகுமார் 14:10, 6 ஜூலை 2006 (UTC)

நல்ல தமிழாக்கம் வாழ்த்துக்கள்![தொகு]

நாங்கள் இங்கே இலங்கையில் பாடத்திட்டத்தின்படி வாயு என்றே படிக்கிறோம். வளிமம் மிக நேர்த்தியான அழகான தமிழ் சொல், உச்சரிக்கவே நன்றாக இருக்கிறது. வளியைப்போன்ற வடிவத்திலிருக்கும் பொருள் என்றாலே போதுமானதல்லவா? காற்றுப்போன்ற எனும் போது பொருட்குழப்பம் ஏற்படலாம். காற்று என்பது அசையும் வளி தானே? --மு.மயூரன் 15:34, 6 ஜூலை 2006 (UTC)

நன்றி. ஆமாம் வளி போன்ற வடிவம் என்று சொல்லலாம். இப்பொழுதிருக்கும் தமிழ்நாட்டில், வளி என்றால் பலரும் உடனே அறிந்து கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு, சூறாவளி என்று ஏதேனும் அவர்களுக்குத் தெரிந்த ஒரு சொல்லைச் சொனால் தான் விளங்கிக் கொள்ளுவார்கள். காற்று என்பது வீசுவது (நகர்வது) தான். ஆனால் அதன் அடிச்சொல் கால் என்பதே. கால் என்றாலும் வளி என்றாலும் ஒன்றே. கால் > காற்று ஆயிற்று (ல் > ற் ஆவது: கல் > கற்றல், பல்>பற்கள், சொல் > சொற்கள் வில் > விற்றல், விற்பனை). வளி என்னும் சொல்லை 2000 ஆண்டுகளகாக நூற்றுக்கணக்கான பாடல்களில் ஆண்டிருந்தும் வளி என்பது உடனே விளங்காமல் இருப்பது நம் நிலை. --C.R.Selvakumar 15:48, 6 ஜூலை 2006 (UTC)செல்வா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வளிமம்&oldid=2292844" இருந்து மீள்விக்கப்பட்டது