பேச்சு:வல்வெட்டித்துறை சிவன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Dear Anton Sir,
வல்வெட்டித்துறை சிவன் கோவில் இற்றைக்கும் 150 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச்சின்னமாக இருப்தோடு மட்டுமல்லாது, இந்திய இந்துக் கோயில்களையும் பிரதி பலிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையில் வடமாகாணத்தில் இப்படியான அரும்பெரும் கோயிலொன்று உலக தமிழ் மக்கள் அறியப்படவேண்டிய விடயமாகும். ஆகையால் தான் இக்கோயில் சம்மந்தமான அனைத்து விடயங்களையும், நான் குறிப்பிட்டு காட்டிய, முக்கியத்துவம் பெற்ற உசாத்துணை நூல்களில் இருந்து தொகுத்தும், மேலும் நான் நேரில் சென்று கேட்டறிந்த விடயங்களையும் அடிப்படையாக கொண்டு Wikipedia வில் தொகுத்து வழங்கியுள்ளேன். இவற்றில் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் உள்ளடங்கவில்லை. இருப்பினும் தாங்கள் குறிப்பிட்டவற்றை நீக்கியதன் காரணம் எனக்கு விளங்கவில்லை. குறிப்பாக "வருடாந்த உற்சவ நிகழ்வுகள்" தொடர்பான விடயத்தையும், இக்கோயில் புகைப்படத்தையும் நீக்கியுள்ளீர்கள். தயவுசெய்து இதனை மறுபடியும் தரவேற்ற அனுமதி தருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

அன்ரன் சேர்,
விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கோயில்கள் சார்ந்த கருத்துக்கள் காணப்பட்டமையினாலும் நான் இக்கட்டுரை எழுத துணையாயிருந்தது. இருப்பினும் எனது கட்டுரையை மீளமைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டுரையில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட உள்ளது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் காணப்படும் தங்களது slide இனை நீக்க வழிகூறுங்கள், காரணம் இக்கட்டுரை எக்கோயில் பற்றியதோ, அக்கோயில் சார்ந்தவர்களுக்கும் நான் சமர்ப்பித்து காண்பிக்க வேண்டியுள்ளது. அவர்களாலும் இக்கட்டுரை மீண்டும் மேம்படுத்தப்படும். ஆகவே slide தேவையில்லை என கருதும் பட்சத்தில் விரைவாக அதனை நிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.