பேச்சு:வலைப்பதிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை. பாராட்டுக்கள். வலைப்பதிவுகளின் வரலாறு, வளர்ச்சி, இணைய ஊடகத்தில் அவற்றின் முக்கியத்துவம், வருங்காலப் போக்கு குறித்தும் எழுதலாம். ஆங்கில விக்கி கட்டுரை இதற்கு உதவக்கூடும். வெளி இணைப்புகளில் பிரபல வலைப்பதிவு சேவை வழங்கிககளை குறிப்பிடலாம்--ரவி 17:43, 2 ஜனவரி 2006 (UTC)

வலைப்பதிவு தொடர்பான கட்டுரைகள் பகுதியில் எனது கட்டுரைகளையே இணைத்துள்ளேன். பத்ரி, காசி போன்றவர்கள் இந்த விடயம் தொடர்பில் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளனர். அத்தோடு நவன் தமிழில் முதல் வலைப்பதிவராக அறியப்படுகிறார். அவரது வலைபப்திவுக்கான இணைப்பும், திசைகள் இதழில் வெளியாகிய முதல் வலைப்பதிவு பற்றிய ஆசிரியர் தலையங்கமும் இணைக்கப்படவேண்டும். இந்த சுட்டிகளை தேடிக்கண்டுபிடித்து எவராவது இணைக்க முடியுமானால் மிகவும் நல்லது. நன்றி. --மு.மயூரன் 09:27, 10 ஜனவரி 2006 (UTC)

இடுகை?[தொகு]

இப்பொழுது புதிதாக நந்தவனம் தளத்தில் வலைப்பதிவுகளை இடுகை என்கிறார்கள். அத்தளம் பிரபலமாக இருக்கும் காரணத்தால் வருங்காலத்தில் இடுகை என்ற பெயரும் பிரபலமாகக் கூடும். தனிப்பட்ட முறையில் வலைப்பதிவு என்னும் சொல் எனக்கு எளிமையாகப் படுகிறது. இக்கட்டுரையை சிறப்பாக எழுதியதற்கும் அது குறித்து தமிழ்மணம் மடற்குழுவில் தெரியப்படுத்தியதும் நன்று. கொஞ்சம் மெனக்கெட்டு இதை சிறப்புக் கட்டுரையாக மேம்படுத்தினால் அதையே கூட ஒரு பதிவாக மாற்றி யாராவது ஒருவர் அவர்கள் வலைப்பதிவில் போடலாம் :)--ரவி 21:39, 11 ஜனவரி 2006 (UTC)

I guess இடுகை is the name for post :)--ரவி 08:59, 12 ஜனவரி 2006 (UTC)

முதல் தமிழ் வலைப்பதிவர்[தொகு]

முதல் தமிழ் வலைப்பதிவர் குறித்த தகவல் அடையாளம் காணாத பயனர் ஒருவரால் இன்று மாற்றப்பட்டுள்ளது. இதில் உண்மை எது என்பதை ஆதாரத்துடன் தந்தால் நன்று. --ரவி 21:10, 22 மார்ச் 2007 (UTC)

இப்படியான மாற்றங்களை அடையாளம் காட்டாமல், பேச்சுப்பக்கத்தில் உரையாடாமல் செய்துவிட்டுப்போவது கோபத்தை வரவழைக்கிறது. இதுபற்றி விசாரித்துத்தெளியும் வரைக்கும் அழிக்கப்பட்ட, இடப்பட்ட இரண்டு தகவல்களையுமே வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். --மு.மயூரன் 01:32, 23 மார்ச் 2007 (UTC)

ஆம், முதலில் தரப்பட்ட தகவலையும் இங்கு பேச்சுப் பக்கத்தில் இட்டு வைக்கலாம். ஆதாரம் இல்லாமல் இருப்பது ஆளாளுக்குத் தங்கள் பெயரை இட்டுச் செல்ல வழி வகுக்கக்கூடும்--ரவி 08:24, 23 மார்ச் 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:05, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:06, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலைப்பதிவு&oldid=140612" இலிருந்து மீள்விக்கப்பட்டது