பேச்சு:வலைத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?[தொகு]

இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?

எனக்கும் இந்தக் குழப்பம் உள்ளது. இணையத்தில் இணையத்தளம் என்று பெரும்பாலும் எழுதுகிறோம். அச்சு ஊடகங்கள் இணைய தளம் என்று எழுதுகின்றன. இது குறித்த இலக்கண விதியை யாராவது தெளிவுபடுத்தினால் நலம்--ரவி 14:38, 14 ஏப்ரல் 2010 (UTC)

இணையத்தளம் என்பதேசரி;தமிழ் இலக்கணப்படி சரியான ஒன்று. இணையம்+தளம்= இணையத்தளம். மரம்+கிளை=மரக்கிளை என்பதுபோல. இணையத்தின் தளம் அல்லது இணையத்தது தளம் என வேற்றுமைப்புணர்ச்சியாகக் கொண்டால்: "மகர இறுதி வேற்றுமை யாயின்/ துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே" என்ற தொல்காப்பியச்சூத்திரத்தின்படி (எழுத்ததிகாரம்,310) அது `இணையத்தளம்` என்றுதான் ஒற்றுமிகுந்து புணரும். மரக்கோடு, மரச்செதிள், மரத்தோல், மரப்பூ என்பதுபோல. இங்கு மகரம் கெட்டு வல்லெழுத்துமிகுந்தது என்பதாம். இனி இணையத்தளம் என்பதனை இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டாலும் ஒற்றுமிகுவதுதான் சரி. தாமரைப்பூ என்பதுபோல். இணையம் என்பது சிறப்புப்பெயர்; தளம் என்பது பொதுப்பெயர் . பலதளங்கள் உண்டு அவற்றுள் இது இணையத்தளம் என்பதாம். எனவே அல்வழியில் பார்த்தாலும் ஒற்றுமிகுவதே சரி. பொதுவாக "இயல்பினும் விதியினும் நின்றஉயிர்முன் கசதப மிகும்" (நன்னூல், 165)என்றசூத்திரத்தின்படி, இணையம் என்பது மகரம் கெட்டு 'இணைய' என்று உயிர் ஈறாக நின்றது; அதன்பின்னர் வந்த 'தளம்' என்ற சொல்லுக்கேற்பத் தகரஒற்று மிகுந்தது. எனவே இணையத்தளம் என்று எழுதுவதே சரியான ஒன்று. அச்சு ஊடகங்கள் எப்பொழுதும் எழுத்துக்குறைப்பிலேயே கவனம் செலுத்துவன அவர்களுக்கு இலக்கணம் பற்றி என்ன கவலை?. என்னசெய்வது? இதில் மிச்சம்பிடித்துத்தான் பெரும் கோட்டை கட்டப்போகின்றார்கள்? உண்மையில் கோட்டைகட்டுகின்றார்களா? கோட்டைவிடுகின்றார்களா?--Meykandan 09:22, 28 ஏப்ரல் 2010 (UTC)

அருமையான விளக்கம். நன்றி--ரவி 10:47, 28 ஏப்ரல் 2010 (UTC)

http://tamilvu.org/courses/degree/c021/c0214/html/c0214662.htm * வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது

இணைய தளம் என்பதை இணையும் தளம், இணைகின்ற தளம், இணைக்கும் தளம் என வினைத்தொகையாகக் கொண்டாலோ ’இணையதளம்’ என்றுதானே வரும்? --Kuzhali.india (பேச்சு) 08:25, 3 செப்டம்பர் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலைத்தளம்&oldid=1717667" இருந்து மீள்விக்கப்பட்டது