பேச்சு:வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதுதல் கூடாது.. ஆங்கிலத்தில் யாராவது பிற மொழிகளைக் கலந்து எழுதுகிறார்களா? இக்கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 15:20, 27 ஏப்ரல் 2014 (UTC)

பிணைச்சுற்று இலந்திரன் விலக்கக் கொள்கை
பிணைச்சுற்று மின்னணு விலக்கக் கொள்கை

--நந்தகுமார் (பேச்சு) 15:33, 27 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம் சரியான தமிழ்த் தலைப்பிற்கு நகர்த்திவிடலாம் --ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:36, 27 ஏப்ரல் 2014 (UTC)

சிறிய எழுத்துப்பிழையை மாற்றினேன். இலங்கையில் வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடித் தள்ளுகைக் கொள்கை என்றே படிக்கின்றோம். எனினும் எனக்கு பிணைச்சுற்று இலத்திரன் விலக்கக் கொள்கை எனும் தலைப்புடன் உடன்பாடில்லை. ஏனெனில் இது இலத்திரன் ஒழுக்கு சம்பத்தப்பட்ட கொள்கை. ஒரு ஒழுக்கில் 2 இலத்திரன்கள் இருப்பதால் தலைப்பில் இலத்திரன் சோடி என்று குறிப்பிடப்பட வேண்டும். இத்தலைப்பைத் தமிழ்நாட்டில் நீங்கள் பயன்படுத்தினால் நான் ஏற்றுக்கொள்கின்றேன். எனினும் இத்தலைப்பை நீங்களே புதிதாக தற்போது உருவாக்கி இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. தயவு செய்து தமிழ்நாட்டில் அல்லது இலங்கையில் மேற்கூறிய தலைப்பு பயன்படுத்தப்படுவதற்கான ஆதாரத்தைத் தரவும். ஆதாரத்தைத் தராவிட்டாலும் பறவாயில்லை இதை நீங்கள் உருவாக்கினீர்களா அல்லது முதலே பலரால் பயன்படுத்தப்படுகிறதா என்றாவது கூறுங்கள்.

வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடித் தள்ளுகைக் கொள்கை பயன்படுத்தப்படுவதற்கான ஆதாரம்:- இலங்கையில் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் அறிவுரை வழிகாட்டி. இதனை pdf வடிவில் [1] இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம். இது அதன் ஒரு பக்கம்.

தரம் 12-13 இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரை வழிகாட்டியின் 26ம் பக்கம்

--G.Kiruthikan (பேச்சு) 12:29, 28 ஏப்ரல் 2014 (UTC)

ஆங்கிலத்தில் இருந்த தலைப்பை மாற்ற நான் மொழி மாற்றம் செய்தவையே இவை. ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதுவதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் கூறும் தலைப்பு இலங்கையில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் எனக்கு தலைப்பை மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. நானே மாற்றிவிடுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 13:21, 28 ஏப்ரல் 2014 (UTC)
மாற்றியமைக்கு நன்றி. சுருக்கமாக இருக்கட்டுமே என்றே VSEPR கொள்கை என்று உருவாக்கினேன். அவ்வாறு உருவாக்கியமைக்கு மன்னிக்கவும். விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் கவனமெடுத்தமைக்கு மிக்க நன்றி.--G.Kiruthikan (பேச்சு) 15:13, 28 ஏப்ரல் 2014 (UTC)